சீனாவில் இரண்டு தளங்கள் கொண்ட ஒரு வீட்டை, 3 மணி நேரங்களில் உருவாக்கி சாதித்திருக்கிறார்கள். மத்திய சீனாவில் இயங்கி வரும் ஸுவோடா கட்டுமான நிறுவனம் இந்தப் புதுமையைச் ய்திருக்கிறது. ஹால், அறைகள், சமையலறை, குளியலறை, மாடி என்று தனித்தனியாகத் தொழிற்சாலையில் உருவாக்கிய அறைகளை கிரேன் மூலம் கொண்டு வந்து, தேவையான இடத்தில் பொருத்தி விடுகிறார்கள். இந்த வீடுகளுக்கு சிமெண்ட் பயன்படுத்துவதில்லை. அதற்குப் பதிலாக விலை மலிவான, அதிகம் உழைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு வீட்டை உருவாக்குகிறார்கள்.
இந்த வீடு குறைந்தது 150 வருடங்களுக்குத் தாக்குப் பிடிக்கும். பூகம்பத்தால் கூட வீட்டுக்கு பாதிப்பு நிகழாது. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் எந்தப் பொருட்களும் இதில் பயன்படுத்தவில்லை என்கிறார்கள். 90 சதவீதம் வீட்டைத் தொழிற்சாலையில் தயார் செய்துவிடுகிறார்கள். வீட்டின் உள் அலங்காரம். மின் இணைப்பு போன்றவை மட்டும் இறுதியில் செய்கிறார்கள்
‘வாடிக்கையாளர்கள் விரும்பினால் வீட்டுக்குள் மார்பிள், மரம், கிரானைட் போன்றவற்றால் கூடுதல் அலங்காரம் செய்து கொடுக்கிறார்கள். இந்த வீட்டின் சுவர்களில் இருந்து சீன மூலிகைகளின் நறுமணம் பரவுகிறது.
'
செங்கல், சிமெண்ட் மூலம் கட்டும் வீட்டைப் போலவே உறுதியானது. காப்புரிமை கிடைத்த பிறகு. வீட்டுக்குப் பயன்படுத்திய பொருட்கள் பற்றிய தகவல்கள் வெளியாகும்.
பில்டர்ஸ்லைன் இதழிலிருந்து...
www.buildersline.in
PH:No:8825479234
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087375
|