உலகின் முதல் ஹைட்ரஜனால் இயங்கும் வீல் லோடர்
உலகப் புகழ்பெற்ற கட்டுமான இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமான லீபெர் நிறுவனம் (Liebherr’s) தனது உற்பத்தியில் மேலும் ஒரு மைல் கல்லாக முழுக்க முழுக்க ஹைட்ரஜன் வாயுவால் இயங்கக்கூடிய வீல் லோடரை வடிவைத்திருக்கிறது.
இந்த ஆண்டில் பாவ்மா 2024 கண்காட்சியில் இடம் பெற்ற உலகின் முதல் ஹைட்ரஜன் வீல் லோடர் என அழைக்கப்படும் இந்த L566H கட்டுமான இயந்திரம் பலரையும் ஆச்சரியம் பட வைத்துள்ளது. ஏனென்றால் இதற்கு முன்பு பெட்ரோல் டீசல் மற்றும் பேட்டரியால் இயங்கக்கூடிய பலவித கட்டுமான இயந்திரங்களை கட்டுமானத்துறையினர் பயன் படுத்தியிருப்பார்கள்.
ஆனால் ஹைட்ரஜனில் இயங்கக்கூடிய இந்த வீல் லோடர் காண்பதற்கு மட்டுமல்ல பயன்பாட்டிற்கும் மிகவும் புதியது. கட்டுமான இயந்திரங்கள் தயாரிப்பில் 75 ஆண்டுகளை தொட்டிருக்கும் இந்த ஆஸ்திரிய நாட்டு நிறுவனம் எர்த் மூவிங் மெட்டீரியல் ஹேண்ட்லிங், ஃபவுண்டேஷன், மைனிங், கான்கிரிட் டெக்னாலஜி, டவர் கிரேன், மொபைல் கிரேன், கிராவ்லர் கிரேன், டெலஸ்கோப்பிங் கிரேன்கள் போன்ற பல வகையான கட்டுமான இயந்திரங்களை தயாரித்து இருக்கிறது.
அந்த லீபெர் நிறுவனம் தற்போது ஸ்டார்பேக் (Strabag ) என்கிற தொழில் நுட்ப நிறுவனத்துடன் இணைந்து இந்த ஹைட்ரஜனால் இயங்கக்கூடிய லி566பி வீல் லோடரை வடிவமைத்து இருக்கிறது.
இந்நிறுவனத்தின் பெருமைக்குரிய தயாரிப்பான இந்த வாகனத்தின் மாடல் L566H என்பதாகும். இதன் செயல்திறன் பயன்பாட்டினை மட்டும் சு ஆண்டுகள் வரை பரிசோதித்தபின் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த நிறுவனத்தின் இயக்குனர் கேவ்ஸ்லர் (Gewessler) என்பவர் கூறும் போது,
“இந்த வாகனத்தை இயக்குவது ஆபரேட்டர்களுக்கு மிகவும் எளிதானதாகும். இது சத்தம் இல்லாத, புகையில்லாத ஒரு மாற்று சக்தியில் இயங்கக்கூடிய இயந்திரமாகும். இந்த ஒரு வாகனம் இயங்குவதன் மூலமாகவே ஆண்டிற்கு 37,500 லிட்டர் டீசல் வரை நுகர்வைக் குறைக்க முடியும் “ என்று கூறியுள்ளார் .
அதாவது, இதன் மூலம், 37,500 லிட்டர் டீசல் வெளியிடும் நூறு டன் நச்சுப்புகையையும் தடுக்க, முடியும் என்பது குறிப்பிடத்தகது.
லீபெர் நிறுவனத்தின் இந்த வீல் லோடரை லாஞ்ச் செய்த உடனேயே சுவிட்சர்லாந்தில் உள்ள பல கட்டுமான நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு புக்கிங் செய்திருக்கிறது.