ஏடிஏ தெரியாமல் பொதுக் கட்டடடம் கட்டலாமா?
நம்நாட்டில் மாற்றுத் திறனாளிகள் பொது இடங்களில் எதிர் கொள்ளும் துயரம் வார்த்தைகளில் எழுதி விட முடியாது, இங்கு கட்டப்படும் பொதுக் கட்டிடங்களான பேருந்து நிலையம், லாட்ஜ், மோட்டல், உணவகம் , வங்கி, பள்ளிகள், கல்லூரி, அலுவலகங்கள், பூங்கா, நூலகம் இவை மட்டுமாவது ஒரு ஆர்கிடெக்ட் கொண்டு தான் வடிவமைக்கப்பட வேண்டும் என்ற கடுமையான சட்டம் அமலுக்கு வர வேண்டும்.
அப்படி வந்தால் தான் மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி உள்ளே சென்று திரும்பும் படியான கழிவறை , சக்கர நாற்காலி ஏறி இறங்கும் சரிவு மேடை, சக்கர நாற்காலி செல்லும் நடைபாதை காரிடார் அமைப்பு என அனைத்தும் கிடைக்கும்.
எந்த ஊருக்கும் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி சென்று வர அந்த மாற்றம் நிச்சயம் உதவும். இங்கே இந்தியாவில் குறிப்பாக கோயில் நகரங்களில் boarding & lodging படிக்கட்டுகள் கூட எதுவும் user friendly அல்லது barrier free design அல்ல, காரணம் இதை கட்டுவது சிவில் எஞ்சினியர் அல்ல, நேராக மேஸ்திரி தான். design and build என்பார்களே அந்த வகை அவசர அடி வேலை, இவர்களுக்கு ergonomics ,standards பற்றி கவலை இல்லை, கட்டி முடித்த சதுரடிக்கு டேப் பிடித்து அளவெடுத்து பில் அனுப்பி பணம் வாங்கி விட வேண்டும். இது போல நுணுக்கமாக சிந்தித்து வடிவமைப்பு செய்யத் தெரியாத வர்களின் மெத்தனத்தால், தான்தோன்றித்தனத்தால், வடிகட்டிய சுயநலத்தால் மூத்த குடிமக்கள்,
மாற்றுத் திறனாளிகள் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல.
ADA Standards அதாவது Americans with Disabilities Act அமீரகத்தில், துபாய் உள்ளிட்ட நகரங்களில் அமலில் இருக்கும் மாற்று திறனாளிகளுக்கான வடிவமைப்புச் சட்டம் ஆகும், அங்கு கட்டப்படும் எந்த ஒரு கட்டிடத்துக்கும் அந்த அப்ரூவல் தரும் உயர் அதிகாரி ஒரு சக்கரநாற்காலி உபயோகிக்கும் மாற்று திறனாளியாகத் தான் இருப்பார், அவருக்குத் தான் மாற்றுத் திறனாளிகள் படும் அவஸ்தைகள் புரியும் என்பதே அதன் மைய காரணம். Building completion certificate கிடைக்க வேண்டும் என்றால் இந்த ADA Standards விதிகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, கட்டு மானம் செய்திருந்தால் மட்டுமே முடியும், லஞ்சம் அங்கே செல்லுபடியாகாது, அந்த உயர் அதிகாரியே காரில் இருந்து வீல் சேரில் இறங்குவார், யாரும் உதவக்கூடாது, கட்டிடத்தில் அவருடைய disabled parkingல் காரை நிறுத்துவார், disabled parking அளவு 3x 6 மீட்டர் என்ற அளவில் இருக்கும், தவிர 1.2 மீ அகலமான சக்கர நாற்காலி பாதையும் பார்க்கிங்கை ஒட்டி உண்டு, சாதாரண பார்க்கிங் அளவு 2.5 மீஜ்5.5 / 6 மீ வைத்தால் போதுமானது, மாற்றுத் திறனாளிகளுக்கு எத்தனை விஸ்தாரமாக பார்க் செய்ய இடம் தருகின்றனர் பாருங்கள்.
அப்ரூவல் தரும் அதிகாரி கட்டிடத்தை ஒட்டிய நடை மேடைக்கு சிறிய RMPல் சக்கர நாற்காலியில் ஏறுவார், கட்டிடத்துக்குள் நுழையும் disabled ramp ல் ஏறுவார், அந்த 1:12 விகிதம் இலகுவாக ஏறும்படி கட்டிடத்தில் கடைபிடிக்கப்பட்டுள்ளதா என மோட்டார் இல்லாத standard சக்கர நாற்காலியில் ஏறிப்பார்ப்பார், இறங்கியும் பார்ப்பார், சக்கர நாற்காலி தானே சறுக்கக்கூடாது, சறுக்கினால் repeat and resubmit தான் அங்கு விதி. கழிவறைக்குள் சக்கர நாற்காலியில் சென்று சுற்றுவார்,நாற்காலி விட்டு ணிகீசி sமீணீt மீது இலகுவாக மாறி, அமர்வார்,EWC seat
பிடித்து எழுவார், flush செய்து பலப்பல சோதனைகள் செய்வார்.
இறுதியாக வாஷ்பேசினில் இரண்டு நிமிடம் கைகளை முகத்தை கழுவுவார், அவர் உடை மீது நீர் சிறிதும் தெளிக்க கூடாது, பின்னர் hand drier உபயோகிப்பார், எல்லாம் திருப்தியாக இருந்தால்,lift ற்கு செல்வார், அங்கே lift ன் architrave jamb ஐ சக்கர நாற்காலி ஏற்றி உள்ளே போக முடிகிறதா என சோதிப்பார்,
இது போல 20க்கும் மேலான check lists உள்ளது, அவற்றை வடிவமைப்பில் கடை பிடித்தால் மட்டுமே Building
completion certificate கிடைக்கும், இல்லை என்றால் கட்டிடம் எத்தனை வருடம் ஆனாலும் மக்கள் உபயோகத்துக்கு வராது,
கட்டி இரண்டு வருடத்துக்கு மேல் ஆகியும் உபயோகத்தில் இல்லாத கட்டிடம் ஆபத்தானது என்பதால் அதை உரிமையாளரே யாருக்கும் உபத்திரவமின்றி இடித்து பழைய படி land parcel ஆக்க வேண்டும் என்பதும் ஒரு முக்கிய விதி, அதனால் Building completion certificate எப்பாடு பட்டாவது முறையாக இந்த மாற்று திறனாளிகளுக்கான விதிகளை மண்டையை உடைத்துக் கொண்டு வடிவமைத்து கட்டுமானம் செய்து உரிமையாளர்கள் வாங்கியே தீருவர்,
இது போல நம் நாட்டில் நடந்தால் தான் நம்நாடு வல்லரசு போட்டிக்குத் தகுதியானது. அமெரிக்காவை விட அமீரகத்தில் இந்த ADA ACT கடுமையாக பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.
ADA ACT?, நம் Indian standard போதாதா எனக் கேட்கலாம், ADA மட்டுமே விசாலமானது, சிறிதும் மெத்தனமில்லாதது, கடுமையானது, தொலைநோக்கானது, ADA ACT கொண்டு வடிவமைப்பதே international standards ஆக இருக்கும், அதனால் தான் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு அமெரிக்க ஆர்கிடெக்ட் அல்லது சிங்கப்பூர் ஆர்கிடெக்ட்களை நியமித்து வடிவமைக்கின்றனர்.
இதை ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். மாற்றுத் திறனாளிகளின் சொர்க்கம் துபாயில், அவர்களின் பார்க்கிங்கில் வேறு யாராவது முறைகேடாக பார்க் செய்தால் 1000 திர்கம் (20000₹)
அபராதம், லைசென்ஸில் நான்கு கருப்பு புள்ளிகள் கொடுக்கப்படும், இதன் மூலம் அந்த அரசு மாற்றுத் திறனாளிகளை எத்தனை மதிக்கின்றனர் என்பது புரியும்.