உள்கட்டமைப்பின் உலகமகா அதிசயம்! கிடியா நகரம், ரியாத்
விளையாட்டு. விளையாட்டு தவிர, வேறொன்றுமில்லை." என்ற கான்செப்டில் ஒரு கட்டடம் அல்ல, ஒரு நகரமே கட்டப்பட்டால்? அதுதான், கிடியா சிட்டி. ஏரியல் வியூவில் சயின்ஸ் ஃபிக்ஷன் கட்டடம் போல் ஜொலிக்கும் இந்த நகரம் படு அமர்க்களமாக மக்களுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. எங்கே? வளைகுடாவில்!. செல்வம் கொழிக்கும் வளைகுடான நாடான சவூதியின் தலைநகரான ரியாத்தில் உலகமே மெச்சும் சூப்பர் டூப்பர் ஹைடெக் விளையாட்டு நகரம் ஒன்றை கட்டி முடித்திருக்கிறார்கள்.
உலகின் முதல் கேமிங் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்போர்ட்ஸ் நகரமாக திகழும் இது நான்கு விளையாடு ஸ்டேடியங்களுடன் 73,000 இருக்கைளுடன் இது அமைக்கப்பட்டிருக்கிறது. ரியாத்தின் புறநகரில் திட்டமிடப்பட்ட இந்த மெகா கட்டுமானத் திட்டத்தில் டிஜிட்டல் மற்றும் எல்க்ட்ரானிக் என வீடியோ கேமிங்க் ஆட ஏராளமான ஹால்கள் & அறைகள் அமைந்துள்ளன.
இந்த எலக்ட்ரானிக் & வீடியோ கேமிங்க் மையங்களில் ஒரே சமயத்தில் 5,155 பேர் விளையாடுவதற்காக இருக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த ஒட்டு மொத்த விளையாட்டு நகரத்தை யும் அமெரிக்காவின் தலைமையகமான பாப்புலஸ் கட்டிடக்கலை நிறுவனம் வடிவமைத்திருக்கிறது.
(பாப்புலஸ்: இது ஏற்கெனவே டொராண்டோவில் 7,000 இருக்கைகள் கொண்ட அரங்கையும், 6,000 இருக்கைகள் கொண்ட ஸ்போர்ட்ஸ் அரங்கையும், ஹோட்டல் மற்றும் ஷாங்காயில் மெய்நிகர் ஸ்கைடைவிங் இடம் மற்றும் பிலடெல்பியாவில் 3,500 இருக்கைகள் கொண்ட அரங்கையும் பாப்புலஸ் வடிவமைத்துள்ளது.)
உலகின் எந்த ஸ்போர்ட்ஸ் அரங்கிலும் இல்லாத மிகப்பெரிய ஒருங்கிணைந்த வீடியோ ஸ்கிரீன் பகுதியும், 4டி ஹாப்டிக் இருக்கைகளும் நிறுவப்பட்டிருக்கிறது . ஏறத்தாழ 500,000- ச.மீ பரப்பு கொண்ட இந்த ஸ்போர்ட்ஸ் சிட்டியில் 25 ஸ்போர்ட்ஸ் கிளப்புகள் மற்றும் 30 வீடியோ கேம் நிறுவனங்கள் உள்ளன. இதில் 100,000-ச.மீ பரப்பிற்கு வணிக வளாகம், உணவு மற்றும் பொழுதுபோக்கு இடங்களைக் கொண்டிருக்கிறது.
இதெல்லாம் எதற்கு? வேறெதற்கு. சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கு தான். இந்த நகரம் ஆண்டுக்கு 10 மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கும் என ரியாத் கருதுகிறது.
360 சதுர கி. மீட்டர் பரப்பு கொண்ட இந்த நகரத்தில் 60,000 கட்டடங்கள் கட்டப்பட்டு ஏறத்தாழ 6 லட்சம் மக்கள் தங்கும் அளவிற்கு வசதி செய்யப்பட்டிருக்கின்றன.
கடந்த டிசம்பர் 8ஆம் தேதி அன்று சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மானால் துவக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்த கட்டடம் கட்டி முழுக்க மட்டும் இரண்டு பில்லியன் டாலர் செலவாகி இருக்கிறது.
கேமிங்க் சென்டர், கேமிங் சிட்டி எல்லாவற்றையும் தாண்டி அசத்தலான புற வடிவமைப்பில் எல்லாரையும் திகைக்க வைத்திருக்கிறது பாப்புலஸ்.
தி பிளடி ஸ்வீட்!