நீர் பரிசோதனை பெட்டி : பொறி.முருகவேல்

21 ஜனவரி 2024   05:30 AM 10 மே 2022   11:19 AM


கட்டுமானப் பணியிடங்களில் தண்ணீரை மாசுபடாமலும், வீணாக்காமலும் முறையாக கையாளவேண்டியது இன்றைய முக்கிய தேவையாக உள்ளது. இப்போது சாதாரண, பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு தண்ணீர் சோதனைப் பெட்டி (Water Testing Kit) தற்போது தமிழ்நாடு குடிநீர் வாரியம் மூலம் முறையாக பழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.இதை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லவும் மற்றும் தண்ணீரின் தரத்தை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் எளிதாக உள்ளது.

 

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (TWAD) மூலம் உருவாக்கப்பட்ட இந்த சோதனைப் பெட்டி, சோதனை செய்யப்பட்டு அதற்காக A Grade தரச் சான்ஷீதழ் வழங்கப் பட்டுள்ளது. இந்த பெட்டியை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (TWAD) மூலம் இலவசமாக வழங்கப்பட்டு தரத்தை தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

 

மேலும், பொதுமக்களிடம் இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த திருப்பூர், காங்கேயத்தில் உள்ள பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியின் (Builders Engineering College) கட்டுமான பொறியியல்துறை (Department of Civil Engineering) சிறப்பு முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.. இதில் கீழ்க்கண்ட அளவுருக்கள் (Parameters) குறைந்த நேரத்தில் சோதனை செய்யப்பட்டு மக்களுக்கு முடிவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

 

1.பி.ஹெச் (pH), 2.காரத்தன்மை (Alkalinty), 3.குளோரடு (chloride), 4.மொத்த கரைசல் உப்புகள் (TDS), 5.புளூரைடு (Fluoride), 6.இரும்பு (iron), 7.நைட்ரெட் (Nitrate), 8.நைட்ரைட் (Nitrite), 9.மொத்தக் கடினத்தன்மை (Total Hardness), 10.அம்மோனியா (Ammonia), 11.பாஸ்பேட் (Phosphete), 12.மீதமுள்ள குளோரின் (Residual Chlorine). சோதனை தண்ணீரை, சோதனைப் பெட்டியில் உள்ள தேவையான standard solution உடன் கலக்கும்போது ஏற்படும் நிற மாறுதல்களை அதற்கான வண்ண விளக்கப்படத்துடன் (colour chat) ஒப்பிட்டு அளவுருக்களின் (parameters) தர அளவுகளை உடனே தெரிந்து கொள்ளலாம்.

 

பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் குடிநீரின் தரம், கழிவுநீரின் அசுத்தத் தன்மை ஆகியவற்றை விரிவாக அறியும் சோதனைக் கூடம் உள்ளது. இங்கு, தண்ணீர் , கழிவுநீர் ஆகியவற்றின் தரம் பரிசோத்திக்கப்பட்டடு , தர அளவுகோல்களுக்கு சான்றிதழ் (certificate) வழங்கப்படுகிறது.

 

மேலும் விபரங்களுக்கு முனைவர் : இரா.லோகநாதன், 
பேராசிரியர், பில்டர்ஸ் பொறியியல் 
கல்லூரி, அலைபேசி: 99655 63386.                                                                            
திரு.ந.உச்சிமுத்து, உதவி பேராசிரியர்,  
பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி, 94886 60136.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2066552