எங்களுக்குத் தெரிந்த கட்டுநர் ஒருவர்-இதில் பதிப்பித்துள்ள ஒளிப்படத்தை அனுப்பி-ஒரு கட்டட அடித்தளத்திற்கு வேண்டிய தனித்தனி குழிகள் (For Isolated Footing Foundation) எடுக்கும்போது ஒரு குழியில் கிணறு இருப்பது தெரியவந்துள்ளது. இதில் எப்படி அடித்தளம் அமைப்பது? என்று கேட்டார். அதற்கு எங்களின் பதில்
1. அந்த பழைய உறை கிணறு (3’0”அடி விட்டமுடையது) பகுதியை கல்லுடைத்தூள் : செஞ்சரளை மண் 1:3 ( Stone Crsuher Dust : Gravel Mix 1:3 / கிராவல் கிடைக்காதபோது Cement: Stone Crushed Dust Mix 1:10- semi dry) கலந்து கொஞ்சமாகப் போட்டு திமிசு கொண்டு கெட்டிப்படுத்த வேண்டும்.
2. மேல் பகுதியில் 1’0”ஆழத்திற்கு மட்டும் Plain Cement Concrete 1:5:10 கலந்து போட்டு மூடிட வேண்டும்.
3. இதற்குமேல் எப்பொழுதும் போல Isolated Footing அடித்தளத்திற்குரிய PCC மற்றும் RC Isolated Footing போட்டு அடித்தளத்தை அமைத்திட வேண்டும்.
4. பெரிய திறந்த வெளிக்கிணறாக இருந்தால் (10’ x 12’ அளவில்) இருந்தால், 5 அடி ஆழத்தில் 15’0” x 15’0” x 1’6”அளவில் RCC Concrete Pedestal slab கொண்டு மூடி அதன்மீது அடித்தளம் அமைக்கலாம்.
5. இல்லாவிடில் கிணற்றிற்கு முன்பாக திசைகளிலும் தொலை விலேயே Eccentric Footing போட்டு Cantilever Beam (Designed) நீட்டி மேற்கொண்டு கட்டுமானத்தைத் தொடரலாம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2066578
|