மேல் தரையே கற்தரையாக இருந்தால் அடித்தளம் அமைப்பது எப்படி?

21 ஜனவரி 2024   05:30 AM 10 மே 2022   10:33 AM


கட்டடங்கள் கட்டும் போது சில நிகழ்வுகளில் மேல் தரையிலேயே கற்தரைகளும் கடினப் பாறைகளும் இருக்கின்றன. குறிப்பாக உதகமண்டலம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, இந்த மலைகளில் மேல் தரையே கற்களால் ஆன பாறையாக அமைந்துள்ளது. அங்கெல்லாம் கட்டடம் கட்டும் போது எத்தகைய வடிவமைப்பை மேற்கொள்கிறார்கள்.

 

1. இந்த அடிமனைகளில் மேலே இருக்கும் தரை மண்ணை (300mm) எடுத்து மட்டம் செய்து 500மி.மீ x 500மி.மீ இடைவெளிகளில் கற்பாறையிலுள்ள 200மி.மீ ஆழத்திற்கு துளைகள் இடுகிறார்கள்.

 

2. அந்த துளைகளிலுள்ள பிணைப்புக் கம்பிகளை (Dowel bar) மட்டத்திற்கு மேலே நீட்டிக் கொண்டிருக்குமாறு நிறுத்தித் துளையை சிமெண்ட் கலவையைக் கொண்டு அழுத்தமாக மூடுகிறார்கள்.

 

3. அதற்கு மேலே போடப்படும் அடித்தளத்தைப் பிடித்துக் கொள்ளுமாறு பிணைப்புக் கம்பிகளை மூடி கான்கிரீட் போடுகிறார்கள். இதனால் அடித்தளங்கள் நன்றாக பாறையோடு பிணைக்கப்பட்டு நகர்வதோ அசைவதோ இல்லை. மலைப்பாங்கான இடங்களில் இப்படித்தான் அடித்தளம் அமைக்கப்படுகிறது. 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2066560