ஒட்டுமொத்த பூமிப்பந்தே கொரானாவில் சிக்கிச் சுழன்று தள்ளாட, ஒவ்வொரு நாடும் தான் மேற்கொண்டிருந்த பொதுத்துறை உள் கட்டமைப்புப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறன.
ஆனால், ஜப்பான் மட்டும் மெல்ல தன் வேலைகளை இப்போது ஆரம்பித்திருக்கிறது.
பொதுவாக உள்கட்டமைப்புக் கட்டுமானப் பணிகளில் 25 முதல் 27 சதவீதம் மனிதர்களைப் பயன்படுத்தும் ஜப்பான் அரசு கொரானோ நோய் அச்சுறுத்தலால், இப்போது வெறும் 6 சதவீத மனிதர்களைக் கொண்டு, பிரம்மாண்டமான கட்டுமானப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
முழுக்க முழுக்க ராட்சச ரோபோக்களைக் கொண்டு கட்டப்படும் இந்தக் கட்டுமானம் மிகப்பிரம்மாண்ட அணைக் கட்டுமானப் பணியாகும்.
ஜப்பானின் தென்கிழக்கில் உள்ள மை ப்ரெஃபெக்சர் (Mie Prefecture) என்னும் பிரதான தீவில் வேன்ஷீ என்னும் பெரும் நதிக்கு குறுக்கே இந்த அணைக்கட்டுமானப் பணிகளை மேற் கொண்டு வருகிறது.
84 மீ உயரம், 334 மீ நீளம் உடைய இந்த மெகா அணைக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் எல்லாம் ரோபோ டைப் இயந்திரங்கள் தான். இடித்தல், உடைத்தல், கான்கிரீட் தயார் செய்தல், கான்கிரீட்டை 84 அடிக்கும் ஊற்றுதல் போன்ற பிரம்மாண்ட கட்டுமானப்பணிகளி இந்த ராட்சச ரோபோக்கள் செய்கின்றன.
இதனால் ஏறத்தாழ 10 சதவீதம் கட்டுமானச் செலவை உயர்த்தி விட்டது உண்மைதான். ஆனால், வேலை நேரம் சுமார் 30 சதவீதம் குறைய வாய்ப்புண்டு. இதனால், குறிப்பிட்ட காலத்திற்கும் முன்பாகவே இந்த புராஜெக்டை முடித்துவிடலாம்’’ என நம்பிக்கை தெரிவிக்கிறார் காண்ட்ராக்டர் ஒபயாஷி.
“கொரோனா நோய் தொற்று கடந்த டிசம்பரில் ஏற்பட்ட போதே இந்தச் சூழல் மோசமாகி இந்த புராஜெக்டை கெடுக்கக் கூடும் என முன்பே கணித்திருந்தோம். எனவே மாற்று ஏற்பாடு தேவை என்பதை எங்கள் வல்லுநர் குழு வலியுறுத்தி இருந்தது.நாங்கள் இதற்கு முன்பே வணிக வளாகங்கள், கிடங்குகள் போன்றவற்றிற்கு ரோபோக்களை பயன்படுத்தி கட்டுமானங்களை தரத்துடன் உருவாக்கி இருந்தோம்.
கான்கிரிட் சென்டிரிங் அமைக்கும் நுட்பமானப்பணிகளைக் கூட ரோபோக்கள் உதவியுடன் செய்தோம். ஃபிரான்சில் ஒரு வணிக வளாகத்தின் தரைப்பரப்பிற்காக 150 ரோபோக்களை ஒன்றிணைத்து 30 ஆயிரம் சதுர அடி பரப்பில் கான்கிரிட் ஊற்றி சாதனை படைத்திருந்தோம்,
ஆனால், இது போன்ற அணைக்கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் ரோபோக்கள் அளவிலும், பயன் பாட்டிலும் மிகவும் பெரியதனாவை. மை ப்ரெஃபெக்சர் தீவில் நடந்து வரும் வேன்ஷீ அணைக் கட்டுமானத்தில் கிரேன்கள், கன்கிரிட் ஊற்றும் ரோபோ இயந்திரங்களை கண்காணிக்க, இயக்க, திரையில் பார்த்து ரிமோட் மூலம் இயக்க அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் சொற்ப அளவிலேயே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனவே, உலகில் அதிக விழுக்காடு ரோபோக்கள் பயனபடுத்தப்படும் புராஜெக்ட் இது தான்‘’ என்கிறார் காண்ட்ராக்டர் ஒபயாஷி.
ரோபோக்கள் கட்டும் இந்த அனைக்கட்டு புராஜெக்ட் மார்ச் 20203இல் முடிந்து விடும். ஒட்டுமொத்த கட்டுமானத்துறையிலும் அல்லாமல் இது போன்ற பெரிய புராஜெக்டுகளில் மட்டும் ரோபோக்கள் பெரிய அளவில் பயன்படுத்தப்படுவது என்பது பாராட்டப்பட வேண்டியது தான்.
-------------------------------------------------------------
2020, ஆகஸ்ட் மாத , பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து.
பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற : Call: 8825577291