கட்டுமான இடத்தில் களிமண் பூமியாக இருப்பின் அதற்கேற்ப அடித்தளம் (Foundation) வடிவமைப்பு செய்யப்பட்ட வேண்டும்.
அடித்தளத்திற்காக வெட்டி எடுக்கப்படும் களிமண்னை பொதுவாக கட்டுமான Basement Filling க்கும் Footing ன் பக்கவாட்டு பகுதியில் நிரப்புகிரார்கள். இவ்வாறு Filling க்கு களிமண்னை உபயோகப்படுத்துவது தவறானது. ஏனெனில் களிமண்ணானது தண்ணீருடன் சேரும் போது ஊறி பெரிதாகிவிடும். கோடை காலத்தில் களிமண்ணிலுள்ள நீர் ஆவியாகி (Evaporation) விட்டால் களிமன் சுருக்கி (Shrink) அதன் பளுமானம் (Volume) குறைந்துவிடும்.
அப்போது களிமண் தரைமீதுள்ள அடித்தளம் களிமண் சுருங்குவதற்கு ஏற்ப (Volume குறைவதற்கேற்ற) பாதிக்கப்படும் Settlement ஆகும். இவ்வாறு இருவேறு தன்மை கொண்ட மண் களிமண் ஆகும். ஆகவே Basement Filling மற்றும் Footing Side பகுதியில் Basement ல் நிரப்பட்டுள்ள களிமண் Volume குறையும்போது Flooring மற்றும் பாதிக்கப்பட்டுள்ள Tiles, Marbles, Granite போன்றவைகளில் வெடிப்புகள் (Cracks) ஏற்படலாம் அல்லது Settle ( மட்டம் இறங்குவதற்கு) ஆகலாம். அவ்வாறு அந்த கட்டத்தின் பயன்படுகளாலும் உபயோகப்படுத்துபவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
ஆலோசனைகள்:
எனவே கட்டுமானப் பகுதியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் களிமண்னை கட்டுமானத்திற்கு பயன்படுத்தக்கூடாது. வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். கட்டுமான செலவு குறையும் என கருதி கட்டுமானத்தில் உபயோகப்படுத்தினால் 4,5,6 வருடங்களில் கட்டட உரிமையாளர் கண்டிப்பாக வருத்தப்படக் கூடும். தெரிந்தே தவறு செய்து பாதிப்புகுள்ளாகதீர்கள்.
களிமண் பூமியாக இருப்பின் அதற்கேற்ற (Suitable) அடித்தளம் (Foundation) தகுதியான பொறியாளரின் ஆலோசனைப்பெற்று, அமைக்க வேண்டும்.
களிமண் பூமியில் அடித்தளம் அமைக்கும்போது Base Course ஆக Sand Filling (30 செ.மீ) செய்யக்கூடாது.
களிமண்னை அடித்தளபடுதியிலிருந்து வெளியேற்றிவிட்டு அந்த இடத்தில் (Good soil) நல்ல மண்னை கொண்டு நிரப்பி அதன்மீது கட்டடத்தில் அடித்தளம் (Foundation Footing) அமைக்கலாம். Good soil என்பது sand Gravel Mix 1:3 ( மணல் + கிராவல் 1:3 என்ற கலவை) ஆகும். இதனால் களிமண்ணின் தாங்கும் திறனை விட புதிதாக நிறப்படும் மண் கலவையினால் தாங்கும் திறன் அதிகரிக்கும் அதனால் அடித்தளம் அமைப்பதற்கான செலவு குறையும். வடிவமைப்பு பொறியாளரை அனுகி ஆலோசனைப் பெற்று செயல்பட்டு பயன் பெறுவீர்களாக.
-------------------------------------------------------------
2020, செப்டம்பர் மாத , பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து.
பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற : Call: 8825577291
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2066606
|