1. சிமெண்டைப் பொறுத்தவரையில் பல வகை உள்ளன் 33 கிரேடு, 43 கிரேடு, 53 கிரேடு. இவற்றுள் 53 கிரேடு சிமெண்ட் கான்கிரீட் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. 43 கிரேடு சிமெண்ட் கட்டுமானக் கல் வேலைகளுக்கும் 33 கிரேடு பூச்சுக்கும் ஏற்றவை எனச் சொல்லப்படுகிறது. இந்தத் தரத்தைப் பொறியாளரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.
2. சிமெண்ட் மூட்டையை வாங்கியதும். அதில் தரச் சான்று இருக்கிறதா, நிறுவனத்தின் பெயர் ஒழுங்காக எழுதப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
3. அடுத்ததாக சிமெண்ட் தயாரிக்கப்பட்ட தேதியைப் பார்க்க வேண்டும். சிமெண்டின் தரம் நாள் ஆக ஆகக் குறைந்துகொண்டே வரும். தயாரிப்புத் தேதி இரு மாதங்களுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதங்கள் இருந்தால் அதன் தரம் 20 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. அதுபோல 6 மாதம் என்றால் 40 சதவீதம் தரம் குறைய வாய்ப்புள்ளது.
4. சிமெண்டில் கட்டிகள் இருக்கின்றனவா எனப் பார்க்க வேண்டும். ஒரே மாதிரி மாவுப் பொடி போல் இருக்க வேண்டும். கட்டிகள் இருந்தால் அவை ஈரத்தை உறிஞ்சி சிமண்டின் தரத்தைக் குறைக்கும்.
5. சிமெண்ட் மூடைக்குள் கை நுழைத்துப் பார்க்க வேண்டும். அப்போது குளிர்ச்சியை உணர்ந்தால் அது நல்ல சிமெண்ட்.
-------------------------------------------------------------
2020, செப்டம்பர் மாத , பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து.
பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற : Call: 8825577291