மனையில் எல்லைவரை வீட்டு சுவர்கள் அமையலமா? பொறி. ஆ . பிரகதீஸ்வரன், M.E (Struct),

03 ஜனவரி 2025   05:30 AM 09 ஜூலை 2021   06:28 PM


குறைந்த அகலம் கொண்ட வீட்டு மனையில் எல்லைகோட்டில் Boundary line கட்டடத்தின் சுவர்கள் அமையும்போது Columns Location மற்றும் அஸ்திவாரம் Foundation Economical ஆகவும் Stable ஆகவும் அமைத்தல் தொடர்பான சில ஆலோசனைகளை பார்ப்போம். பொதுவாக வீட்டுமனைகள் 40 அடி x 60 அடி அளவு கொண்டவையாக இருக்கும் தற்காலத்தில் கட்டுமானத்தில் அகலம் குறைந்த மனைகளில் வீட்டின் அறைக்களின் சுவர்கள் மனையின் எல்லைகோட்டில் Boundary line ல் அமையுமாறு வரைபடங்கள் தயாரிக்கப்படுகின்றன.

 

வீட்டு மனையின் அளவு 20 அடி x 60 அடியாகவும் Bed Room ன் சுவர் வீட்டுமனையின் எல்லை கோட்டிலும் Boundary line அமைந்துள்ளது. இந்த வீட்டின் வரைப்படத்திற்கேற்ப Columns Location ஐ கட்டடதின் சுவர் எல்லை கோட்டில் உள்ளதால் சுவரின் Corner ல் அமைக்க வேண்டும். அவ்வாறு Columns Location அமைக்கும் போது அடித்தளம் Footing ஒரு பக்கமாக One Side அமையும். அவ்வித அடித்தளத்திற்கு Footing ஆகும் செலவு அதிகமாகும். பொதுவாக Column லிருந்து 4 பக்கங்களிலும் சமமாக அளவு வருமாறு Footing அமைக்க ஆகும் செலவு தொகையினை போன்று 4 முதல் 5 மடங்கு One Side Footing க்கு செலவு ஆகும்.

 

இச்சூழ்நிலையில் Safe ஆன மற்றும் செலவு குறைவான Footing ஐ அமைக்க Columns Location காட்டியவாறு எல்லைக்கோட்டிலிருந்து 3 - 0 தள்ளி  சுவர் உள்ள Line ல் அமைத்தால் Regular Isolated Footing அமைக்க இயலும். செலவை குறைக்கலாம். மேலும் Column களும் சுவரின் 23 செ.மீ அளவு Line க்குள் வந்துவிடுவதால் Column வெளியே தெரியாது.

 

Columns Location ஐ அமைத்து Structurally Safe மற்றும் Economic ஆன Isolated Footing அமைத்து கட்டுமான செலவினை குறைக்கலாம். இன்னும் இதுபோன்ற எல்லைக்கோட்டில் Boudary line அமைய இருக்கும் கட்டுமானங்களுக்கும், Exsiting Building அருகிலேயே கட்டுமானம் மேற்கொள்ளும் போதும் கவனிக்க வேண்டிய Safe ஆன Economical வடிவமைப்பு எவ்வாறு பெறலாம் என்பதை அடுத்த இதழில் காணலாம்.

 

-------------------------------------------------------------

 

2020, செப்டம்பர் மாத , பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து.

 

பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற : Call: 8825577291

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2126040