வீடுகளில் புதிய ஓடுகள் பதித்தல் நவீன வேதிக்கலவை ஒட்டியினைப் யன்படுத்தலின் பயன்கள். பொறிஞர். ந. கைலாசபதி, முதுநிலை கட்டுமான ஆலோசகர்

03 ஜனவரி 2025   05:30 AM 09 ஜூலை 2021   05:55 PM


 

நம் வீட்டில் தரை மற்றும் சுவர்களில் ஓடுகள் பதிக்க சிமெண்ட் கலவை 1:3 தரத்தில் பயன்படுத்துகின்றோம்.

 

இணைப்புகளில் ஒயிட் சிமெண்ட் (white cement)

 

தற்போது வெளிச்சந்தையில் ஓடுகள் பதிக்க என்றே வேதிப்பொருள் கலந்த ஆயத்த சிமெண்ட் ஒட்டிக்கலவை (Tile Ahdesive) கிடைக்கிறது. தரையில் பதிக்க உதவும் ஆயத்த சிமெண்ட் கல்வை செயிண்ட் கோபெய்ன் (Saint Gobain-Webber) - Webber Set Premimum & Classic, செரா கெம் (Cera chem) - Cerabond 28 & 29, அல்ட்ரா டெக் (ultra tech) -nubric, டாக்டர் பிக்ஸ்ட் (Dr. Fixit) - FevimateXL, போஸ்ராக் (Fosroc)-Nitotile Gp, ராம்கோ (RAMCO) - RTF2 & RTF3, ஆசியன் பெய்ண்ட் (Asian paint) Smartcare ஆகிய நிறுவனங்கள் தரமானதாக தயாரித்து விற்கின்றனர்.

 

நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் 1:3 சிமெண்ட் உபயோகித்தால் ஆகும் கட்டுமானச் செலவு ரூ.1007/- சதுர மீட்டர். வேதிப்பொருள் கலந்த கலவையினைப் பயன்படுத்தினால் ஆகும் செலவு ரூ.944/- சதுர மீட்டர். வேதிப்பொருள் கலந்த கலவையினைப் பயன்படுத்துவதால் ரூ.63/- சதுரமீட்டருக்கு குறைகிறது. இதற்குரிய விலை விவரப்புள்ளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது (பொதுப் பணித்துறையின் புள்ளி விவரத்தில் சந்தை விலையினை பயன்படுத்தி விலைப் புள்ளி தயாரிக்கப்பட்டுள்ளது) 

 

வேதிப் பொருள் கலந்த கலவைனை பயன்படுத்தி தரை மற்றும் சுவரில் ஒட்டினை பதிக்கும் வழிமுறை:

 

1. ஒட்டினைப் பதிக்கும் பரப்பினை உறுதியாகவும் மற்றும் ஒரே சமமட்டமாக உள்ளதா என உறுதிப்படுத்த வேண்டும்.

 

2. தரைத் தலத்தில் உள்ள உதிரிப்பொருட்கள் அழுக்குகள் மற்றும் எண்ணெய் பசையுள்ளவற்றினை அகற்றிச் சுத்தமாக்கிட வேண்டும்.

 

3. ஒட்டினை ஒட்டும் கலவையினை முதல் 7லிட்டர் தண்ணீரில் 25 கிலோ வேதிக்கலவையினைச் சேர்த்துக்கட்டிகள், பிசிறுகள் இல்லாமல் நன்றாகக்கலக்க வேண்டும்.

 

4. இக்கலவையினை 3 முதல் 6 மிமீ வரை கனத்திற்கு தரையில் கரணை (கொல்லுறு) மூலம் சமமாகப் பரப்ப வேண்டும்.

 

5. ஒரு தடவைக்கு 1சதுர மீட்டருக்கு மேல் பரப்பக் கூடாது.

 

6. ஓட்டினைப் பதிக்கும்போழுது சற்று சாய்வாக சறுக்குமாறு ஒட்டின் விளிம்பில் முழுவதும் படுமாறு அழுந்தப் பதிக்க வேண்டும்.

 

7. மிகுதியாக மேலே வந்துள்ள கலவையினை (ஓட்டின் இணைப்புப் பகுதியில்) சுத்தமாகத் துடைத்து எடுத்து விட வேண்டும்.

 

8. 24 மணி நேரத்திற்குப் பிறகு ஓட்டின் இணைப்புப்பகுதியில் மற்றொரு வேதிக்கலவையான புரை அடைப்பான் (Tile Grout) பயன்படுத்தி அடைக்க வேண்டும். white cement பயன்படுத்தக்கூடாது.

 

வேதிப்பொருள் கலந்த கலவையினைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் பயன்கள்:

 

1. இந்திய தர நிர்ணய வழிகாட்டி IS 15477 இன் படி உள்ளது.

 

2. சிமெண்ட் மணல் மற்றும் வேதியல் கலந்த கலவையாக ஒரே தரமுள்ள முன் கலந்த கலவையாக கிடைப்பதால் பயன்படுத்துவது எளிதாக உள்ளது.

 

3. பிடிப்பிற்காக ஓட்டினை தண்ணீரில் ஊறவைக்க வேண்டியதில்லை.

 

4. வேதியியல் கலவையினைப் பயன்படுத்துவதால் தண்ணீர் ஊடுருவாமை, வெப்பநிலைவேறுபாட்டால் ஒடு சுருங்கி விரிவடைவது இல்லை.

 

5. இக்கலவையினைப் பயன்படுத்தினால் 24 மணி நேரத்திற்குப்பின் தரையினை உபயோகிக்கலாம். 

 

எனவே பழைய முறை சிமெண்ட் கலவை 1:3 பயன்படுத்தாமல் இந்தப் புதிய நவீன பொருள் கலந்த கலவையினை (Tile Adhesive & Tile Grout) பளன்படுத்தி செலவையும் வேலை நேரத்தையும் குறைக்கலாம். தரையின் தரமும் சிறப்பாக உள்ளது என்பதை உறுதியாகக் கூற முடியும்.

 

-------------------------------------------------------------

 

2020, செப்டம்பர் மாத , பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து.

 

பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற : Call: 8825577291

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2126016