மாற்றங்களால் ஸ்தம்பித்து போகுமா கட்டுமானத்துறை ? கொரோனாவுக்குப் பின் கட்டுமானத்துறையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் ஒரு உஷார் கட்டுரை

03 ஜனவரி 2025   05:30 AM 07 ஜூலை 2021   12:51 PM


ஆயிரம் தான் அரசைக் குறை சொன்னாலும் கொரானா போன்ற புது வில்லன்கள் ஏலியன் போல பூமியை ஆக்கிரமித்தால் அரசுகள் என்ன தான் செய்ய முடியும்?

 

இந்த கொரானா பெருந்தொற்று பல மாறுதல் களை நம் வாழ்வாதரம், சமூகம், வாழ்வியல் முறை என எல்லாவற்றிலும் ஏற்படுத்தி இருக்கிறது. அதில் நமது கட்டுமானத்துறைக்கு அடுத்த சில ஆண்டுகள் வர உண்டாக்கும் தாக்கங்கள் இதோ:

 

கட்டுமான இயந்திரங்கள்  மீதான முதலீடு :

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கட்டுமான இயந்திரங்களின் உற்பத்தியை குறைத்து விட்டதாக முன்னணி இயந்திர உற்பத்தி நிறுவனம் ஒன்று தனது இனையதளத்தில் சூசகமாக தெரிவித்துள்ளது.  ஆசிய பசிபிக் பிரதேசஙகளை முக்கிய இலக்காக கொண்ட இந்த நிறுவனம் எடுத்த  முடிவினை அடுத்த சில நாட்களுக்குள் மற்ற ஐரோப்பிய.,  கட்டுமான இயந்திர நிறுவனங்களும் எடுத்திருக்கின்றன.

 

எதிர்வினை 1 : இந்திய பில்டர்கள், காண்ட்ராக்டர்கள்   கொஞ்ச  காலத்திற்கு இறக்குமதி செய்யக்கூடிய இயந்திரங்கள் கொள்முதல் மற்றும் முதலீட்டை விரும்ப மாட்டார்கள்  என்பது இதிலிருந்து புலனாகிறது.

 

எதிர்வினை 2 : இயந்திரங்களுக்கு ஏற்பட்ட  நிலையே கருவிகள், சாதனங்களுக்கும் ஏற்படும்..

 

எதிர்வினை 3 : இதனால் கட்டுமானப் பணிகள் 2021 ல் வேகமெடுக்கும்  போது அதற்கு இணையாக கட்டுமான  இயந்திரங்கள், கருவிகள் சப்ளை  குறைந்து தேவை அதிகமாகும்.  இந்த காரணத்தினால் கட்டுமான இயந்திரங்கள் , கருவிகளை வாடகைக்கு விடும் நிறுவனங்களின் மவுசு அதிகமாகும். அவற்றின் வாடகையும்  அதிகமாகும். 

 

எதிர்வினை 4: அயல்நாட்டைச் சேர்ந்த இந்நிறுவனங்களின் நிதி நிலைமை மற்றும்வர்த்தக நிலவரம் பாதிக்கபடுவதால் அந்நிறுவனங்களோடு நேரடியாக  தொடர்பில் உள்ள இந்திய அதிகாரிகள், பணியாளர்கள்  பாதிக்கப்படுவார்கள்.

 

அலுவலகக் கட்டட ச் சந்தை சுணக்கம் :

நகரவாசிகளுக்கு குறிப்பாக  ஐடி, கால் சென்டர், எம் என் சி போன்ற பன்னாட்டு கம்பெனிகளில் பணி புரிந்தவர்கள் இப்போது அதிகம் உச்சரிக்கும் வார்த்தை வொர்க் பிரம் ஹோம் என்பது தான்.  ஒரு ஊழியர் கணினி சார்ந்த ஆன் லைன் பணியில் லாகின் செய்து பணி புரிவர் என்றால்  அவர் அலுவலக என்கிற  கட்டுக்குள் அடைபடதேவையில்லை என்பதை இந்த தொற்று நோய்க்காலம் உணர்த்தி விட்டது.

 

உதாரணத்திற்கு அமெரிக்க மக்களுக்கு இன்சூரன்ஸ் வழங்கும் நிறுவனம் ஆன்லைனில் டாக்குமென்ட் சரிபார்க்கும் வேலையை அல்லது  அவர்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வேலையை செய்கிற இந்திய ஊழியர்கள் அலுவலகத்திற்கு வராமல் வீட்டிலேயே செய்ய முடியும் என்றால்., அலுவலகம் ஏன் இயங்க வேண்டும்? அதுவும்  ஜூம், டீம் போன்ற இலவச வீடியோ ஆன்லைன் ஆப்கள் இருக்கையில் முக்கிய சந்திப்புகளையும் வீட்டில் இருந்தபடியே நடத்திக் கொள்ள முடியும்.

 

மேலும் இதனால் அலுவலக வாடகை, மின் செலவு, வாகனப் போக்குவரத்து, கட்டடத் தூய்மை & பராமரிப்புச் செலவு, தேனீர், தண்ணீர், உணவு..,இத்யாதிகளின் செலவும் கணிசமாக குறைவதால் பீஸ் ரேட்டில் வேலை பார்க்கச் செய்வதுதான் நிறுவனங்களுக்கு லாபகரமானதாக இருக்கும்.

 

கொரானோ முற்றிலும் ஒழிக்கப்பட்டால் கூட இனி எங்கள் ஊழியர்கள் உலகமெங்கும் வீட்டில் இருந்த படியே தான் பணி புரிவார்கள் என ஒரு ஈ காம்மர்ஸ் நிறுவனம் வெளிப்படையாக கூறி மிரள வைத்திருக்கிறது.

 

எதிர்வினை 1: அலுவலகக் கட்டடங்களின் மதிப்பு வேகமாக குறையும். லட்சங்களில் வாடகை நிர்ணயிக்கப்பட்ட அலுவலகங்கள் ஆயிரங்களில் வந்து நிற்கும். முதலில் பெரு நகரங்களில் அலுவலக வாடகை ஏன் இந்த அளவிற்கு உயர்ந்தது? 

 

துபாய், லண்டன் ,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாடகைக்கு அலுவலகத்தை நடத்தி வந்த பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய நகரங்களில் கால் பதித்த்தால் ஏற்பட்ட விளைவு, தானாகாவே வீழ்ச்சி அடைய வைத்து விட்டது. இனி இந்தியாவில், அதிலும் நம் மாநிலத்தில் ஐடி & கம்மர்ஷியல் அலுவலக கட்டடச் சந்தைக்கு சிறப்பான எதிர்காலமில்லை. சிங்கப்பூரில் இது எதிரொலிக்கத் துவங்கி விட்டது.

 

எதிர்வினை 2 :
ஏற்கனவே இயங்கி வரும் அலுவலக கட்டுமானங்களை இடிக்காமல் அல்லது அதிகம் சேதப்படுத்தாமல் வீடு அல்லது தொழிற்கூடங்களாக மாற்றி அமைக்கப்படும் சூழல் வெகு நிச்சயமாக இருக்கிறது. எனவே, கட்டட மறுசீரமப்பு & இன்டிரியர் துறைக்கு அந்த வகையில் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும்.

 

எதிர்வினை 3 :
மேற்சொன்ன கட்டட மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் போது அதற்காக கட்டுமான சேவைகள், பொறியியல் ஆலோசனைகள், கட்டடப்  பொருளின் பயன்பாடுகள் தேவைகளும் அதிகரிக்கும்..இந்தச் சூழல் 2022 வரை காணப்படும்.

 

டவுன்ஷிப் அடுக்கக விற்பனை பாதிப்பு: 
பெரு நகரங்களில் 800, 1000 வீடுகள் கொண்ட டவுன்ஷிப் வீடுகள் உருவாக்கப்படுவதற்கு மிக முக்கிய காரணம் மேலே சொன்ன ஐடி சந்தை., இப்போது பன்னாட்டு நிறுவனங்களில் பணி புரிவோர்க்கு  சிக்கன நடவடிக்கை காரணமாக ஆள் குறைப்பு, சலுகை குறைப்பு செய்யப்படுவதால் அது போன்ற வாழ்விடங்களை அதாவது தொழில் சார்ந்த உறைவிடங்கள் இனி தவிர்க்கப்பட்டு விடும். நாட்டின் எந்த மூலையில் இருந்தும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்காக  பணிபுரிய முடியும் எனும் போது, ஏன் அலுவலகம் அருகிலேயே வீடு தேவைப்படப் போகிறது? அதுவும் ஆயிரக்கணக்கான வீடுகளின் நெரிசலில்..?

 

எதிர்வினை 1: இதனால் நகரத்தில் வீடுகளின் தேவை அதிகமாகும். தனி வீடுகளின் தேவையும் அதிக
மாகும்.   

 

எதிர்வினை 2: இதற்கு முன் கட்டி முடிக்கப்பட்ட டவுன்ஷிப் வீடுகளின் சந்தை மதிப்பு வேகமாக சரியும்.

 

எதிர்வினை 3:  இனி கட்டப்பட உள்ள வழக்கமான அடுக்குமாடி வீடுகளில் உள்ள லக்சரி வசதிகள் குறைக்கப்பட்டு., பட்ஜெட் விலையிலான கட்டுமானங்கள் உருவாகும்.

 

எதிர்வினை 4: அரசின் வீட்டு வசதி வாரியம் மூலம் உருவாக்கப்படும் வீடுகளின் விற்பனை விலை கணிச
மாக குறையும்.

 

எதிர்வினை 5: வீட்டு வாடகைச் சந்தை கடுமையாக வீழ்ச்சி அடையும். இதெல்லாம் பெருநகரங்களின் கட்டுமானத் துறைக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

புதிய புராஜெக்டுகள் துவக்கம்
பொதுவாக மந்த நிலை காணப்பட்டாலோ., நாடலவில் ஒரு அசாதரணமான சூழ்நிலை ஏற்பட்டாலோ உடனே தொழிற் துறைகள் உற்பத்தியை நிறுத்தி விடும்.எனவே புதிய கட்டுமானப் புராஜக்டுகள் கொஞ்ச காலத்திற்கு துவங்காது என நீங்கள் நினைத்தால் அது தவறு. ஏனெனில், வீடு என்பது மற்ற நுகர்வு பொருளல்ல., சொல்லப் போனால் உணவை விடவும் மேம் பட்டது. உள்ளுரில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய முடியும். ஆனால்,  குடியிருக்கும் வீடுகளை? அதை இங்கே தான் உருவாக்க முடியும்.அதை எந்த கொரானாவும் அசைக்க முடியாது.

 

கடந்த  சில மாதங்கள் மட்டுமே பழைய புராஜெக்டுகளின் கட்டுமானப் பணிகளும், புதிய 
புராஜெக்டுகளின் துவக்கமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இப்போது தடை விலக்கப் பட்டால் முன்பை விடவும் வேகமாக குடியிருப்பு புராஜெக்டுகள் சூடு பிடிக்கும். தனிவீடுகளின் தேவையும் அதிகரிக்கும். 

 

மேலும் சிமென்ட் உள்ளிட்ட 150 க்கும் மேற் பட்ட துணைப்பொருட்கள் உற்பத்தி மற்றூம் வர்த்தகம் இதனுடன் இனைந்திருப்பதால் ஒரு போதும் கட்டுமானத் தொழில் பலகாலம் தேங்கி நிற்கக்கூடிய தொழில் அல்ல, அதனால் தான் நாடு முழுக்க  பொருளாதார மந்தம் ஏற்பட்ட போதும் தமிழக கட்டுமானத்துறை அசராமல் ஆட்சி செய்தது. சரி இதன் எதிர்வினை என்ன? 

 

எதிர்வினை 1:  வீடு வாங்குவோர் தற்போது அதிக தொகையை செலவழித்து வீட்டை வாங்குவதில் தயக்கம் இருப்பதால் கட்ட்நர்கள் பட்ஜெட் விலைக்கு தங்களின் விலை நிர்ணயத்தை வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக வேண்டும்.

 

எதிர்வினை 2:  செலவைக் குறைக்க  விரும்பும் வாடிக்கையாளர்கள்  ஹால், பெட்ரூமுக்கு  இன்டிரியர் அமைக்க, மாடுலர் கிச்சன் அமைக்க தயங்கலாம். எனவே, லக்சரி இன்டிரியர் சேவையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சில காலம் மந்த நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாது.

 

எதிர்வினை 3 : நீச்சல்குளம், ஆட்டோமோ­சன் போன்ற உயர் சொகுசு வசதிகளின் தேவையும் பயன்பாடும் குறையத்தான் செய்யும்.

 

புதிய கட்டுமானத் தொழிற்நுட்பங்கள், புதியகட்டடப்ப் பொருள்கள் :
பொதுவாக வீறு கொண்டு ஒரு துறை எழும் போதுதான் அந்த துறையில் தேவைக்கேற்ப புதிய கட்டுமானத் தொழிற்நுட்பங்கள், புதியகட்டடப்ப் பொருள்கள்  உருவாகும். அதாவது தேவையைப்பொறுத்து தான் கண்டுபிடிப்பு. இப்போது அந்நிலை இல்லை என்றாலும் செலவைக் குறைக்கும் தொழில்நுட்பங்கள், கட்டுமான முறைகள், கட்டடப் பொருள்களின் கண்டுபிடிப்பும் தேவையும் அதிகமாகும்.

 

எதிர்வினை 1 : இதனால் வெகுகாலம் புதிய கண்டுபிடிப்புகளை மக்கள் பயன்படுத்த தயங்கிக் கொண்டிருந்த  காலம் போய் தாமாகவே  தேடி பயன்படுத்துவர். அதாவது, எரிசாம்பற் கற்கள், எம் சான்ட், ப்ரீ கேஸ்ட், மாற்று கட்டுமான கற்கள் போன்ற செலவு குறைந்த கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படும்.

 

எதிர்வினை 2: தனிவீடுகளில் எலிவேட்டர் பொருத்தும் தராள வசதி மனப்பான்மை சிலகாலத்திற்கு இருக்காது.

 

எதிர்வினை 3 : பில்டர்கள் தங்கள் அலுவலக செல்வௌ, நிர்வாக செலவு, மார்கெட்டிங் செலவு போன்றவற்றை குறைக்க முயல்வர்.

 

இந்த  மாறுதல்கள் எல்லாம் நீங்கி இயல்பு நிலைக்கு கட்டுமானத்துறை திரும்ப சில காலம் ஆகலாம். ஆனால். எப்போதும் நமது துறை ஸ்தம்பித்து போகாது என்பது தான் எந்த காலத்திலும் பொருந்திப் போகும் உண்மை.

 

 

-----------------------------------------------------------------------

 

 

2020, செப்டம்பர் மாத , பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து.

 

 

பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற : Call: 8825577291

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2126027