பொதுவாக, கட்டிடங்கள் நீண்டகாலப்பயன்பாட்டிற்கு பின் வலுவிழப்பதும், பராமரிப்பு குறைபாட்டினால் அதன் தாங்குதிறன் விரைவாக குறைந்திடும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படும் குறைபாடுகளைச் சரிசெய்து அதன் பயன்பாட்டுக்காலத்தை நீட்டிப்பு செய்ய வேண்டிய தேவை இக்காலகட்டத்திலே ஏற்படுகிறது. எங்களின் ஆலோசனை நிறுவனத்தின் மூலம் ஆய்வு செய்தும் ஆலோசனை வழங்கியும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உறுதியூட்டப்படும் ஒரு தொழிலகத்தைப் பற்றி விரிவாகக் காண்போம்.
ஒரு காலணி தயாரிக்கும் தொழிற்சாலையின் மூன்று மாடி கட்டடம் அதன் செயல்பாட்டினை கூடுதலாக்கி மூன்றாவது மாடியில் இயந்திரங்கள் நிறுவி செயல்படுத்த திட்டமிட்டு கட்டடத்தின் தாங்கு திறனைப் பரிசோதிக்க கேட்டுக் கொண்டனர். இக்கட்டிடம் முதல் இரண்டாவது மாடி இரும்பு எஃகு தூண்மற்றும் எஃகுக் கூரை கொண்டது.
இரண்டாவது மாடியில் இயக்க திட்டமிடப்பட்டிருக்கும் பாரத்தைக் கணக்கிட்டு தூண், விட்டம், தளம் முதலியனவற்றின் தாங்குதிறனை ஆராய்ந்ததில், தளம், விட்டம் முதலியன போதுமான தாங்குதிறன் உடையவையாகவும் தரைத்தளத்தூண்கள் மற்றும் பாரம் தாங்குதிறனில் சிஷீது குறைவாக இருப்பதும் கண்டறியப்பட்டது.
pu = 0.4fck bd + 0.67fy Asc
p = (0.4fck bd + 0.67fy Asc)/ 1.50
p+ =0.67 x 500/250 A எனக் கணக்கிடலாம்
p+ =கூடுதல் பாரம் ( எஃகுத் தகடுகள்)
தூணின் தாங்குதிறன்: காங்கிரீட்டின் பரப்பு + எஃகு உறுதியூட்டுகளின் பரப்பு எனக் கணக்கிடப்படுகிறது. கூடுதலாக வரும் பாரத்திற்குச் சமமாக சரியாக எஃகுக் கம்பிகளின் பரப்பு கூடப்பட வேண்டும். எஃகுக் கம்பிகளுக்குப் பதிலாக எஃகுத்தகட்டுகள் (Steel Plates) பரப்பில் சமமாக இருக்குமாறும் அதன் சமமான அளவான A = MS Steel Plates x 500/250 என்று கணக்கிடப்பட்டுதகடுகள் பொருந்தப்படுகின்றன.தாங்குதிறனைஏற்ற புதிய தொழில்நுட்பமான மெல்லெஃகுத் தகடுகள் பொருத்தம் முறை கையாளத் தீர்மானிக்கப்பட்டது. வடிவமைப்புக் கணக்கீட்டின்படி 8 மிமீ கனம் உள்ள இரும்புத்தகடு தூண்களின் இருபுறமும் (நீள் தூண் அமரும் பக்கப்பரப்பு) இறுகப்பொருத்தி ஒட்டவைத்து உறுதியூட்டிட ஆலோசனை வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது தொழிலகத்திலுள்ள 30 தூண்களை வலிமைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இம்முறையில் காங்கிரீட் தூண்களில் 45 செமீ இடைவெளியில் இரு புறமும் துளையிட்டு பிரதான வலுவூட்டிய இரும்பு கம்பியில் துண்டு குறுக்குக் கம்பி 8 மிமீ கனம் உள்ள பகுதியைப் பற்றவைத்து (வெல்டிங்) பொருத்திவிட்டு, அதற்கு ஏற்ப வலுவூட்டும் இரும்பு தகடு 8 மிமீ கனத்தில் துளையிட்டு உள்ளே பொருத்தப்படுகிறது. இரும்பு தகடு பொருத்தும் முன் mortar adhesive தூண்களில் நன்கு பரப்பி அதன்மீது இரும்பு தகடினை அழுத்திப் பொருந்திய பின் துளையிட்ட பகுதியில் உள்ள இரும்புக்கம்பிகள் வெல்டிங் செய்து முடுக்கப்படுகிறது. இரும்பு தகடுகள் கட்டட அடித்தளத்தில் போடப்பட்டுள்ள பரப்பு விட்டத்தினுள் (Grade Beam) எல் (L) வடிவத்தில் பொருத்தி வெல்டிங் செய்யப்படுகிறது.
இவ்வாறு தொழிற்சாலை கட்டிடம் கூடுதல் வலிமை பெற உறுதியூட்டப்பட்டு கூடுதல் பாரத்தைத் தாங்கும் வண்ணம் பயன்பாட்டிற்கு விரைவாக தொழிற்சாலையின் அன்றாடப்பணிக்கு அதிக இடையூறு ஏற்படாமல் திட்டமிடப்பட்டுச் செய்யப்படுகிறது.
-----------------------------------------------------------------------
2020, அக்டோபர் மாத , பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து.
பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற : Call: 8825577291