மேற்தளங்களில் உள்ள கழிவறை/ குளியலறைகளிலிருந்து நீரொழுக்கு வராமலிருக்க ..

03 ஜனவரி 2024   05:30 AM 29 ஜூன் 2021   05:07 PM


எல்லா வீடுகளிலும் நிகழும் ஒரு செயல் தான் கழிவறை/ குளியலறைகளிலிருந்து நீரொழுக்கு ஏற்படுவதுதான். இந்தக் கழிவறை கட்டும்போது மிகச் சரியான வேலை முறையினையும் மிகச் சிறந்த வேலைத் திறனையும் (workmanship) கடைபிடிக்க வேண்டும். இது எப்படிக் கட்டப்பட வேண்டும் என்பதை வரிசைக்கிராம

மாகப் பார்ப்போம்.


1. கழிவறை/ குளியலறையின் தரையைக் கொத்திக் காங்கிரீட் தெரியுமாறு சுத்தப்படுத்திவைக்கவும். மேற் சுவரையும் 300மிமீ / 450 மிமீ உயரத்திற்குக் கொத்திச் சுத்தப்படுத்தவும்.


2. கொத்திய தளம் மற்றும் மேற்புற சுவர்களிலும் Ultra Tech-Seal & Dry திரவத்தை சிமெண்ட்டில் (குறிப்பிட்ட விகிதப்படி) கலந்து கலவையினை 2 பூச்சுக்கள் ஒன்றின் பின் ஒன்றாக குறுக்கு நெடுக்காகப் பூசவும்.

 

3. இது நன்றாகக் காய்ந்த உடன் அடுத்த நாள், பரப்பின்மீது Mortar Adhesive பூசி முதலில் தரைத்தள ஓடுகளையும் அதற்கு மேலே மேற்புறச் சுவர் ஓடுகளையும் பதிய வைக்க வேண்டும். ஓடுகளின் இடைவெளியை (Joints) கொண்டு அழுத்தமாகச் சந்து அடைக்கவும்.


4. தளப்பரப்புகளை 4 நாட்களுக்கு நன்றாக நீராற்றவும். 
இதில் சிமெண்ட் கலவையினையோ, வெள்ளை சிமெண்ட்டையோ (White Cement கலவை) பயன்படுத்தக் கூடாது. கீழ் மடிப்போரங்களில் Silicone Sealent பயன்படுத்தலாம்.    


-----------------------------------------------------------------------


2020, அக்டோபர் மாத , பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து.

 

பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற : Call: 8825577291

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2073021