கிடுக்கிப்பிடி போட்ட கொரானா சிக்கலைச் சமாளித்த சிங்கப்பூர்

03 ஜனவரி 2024   05:30 AM 29 ஜூன் 2021   03:17 PM


கொரானா நோய் தொற்று பேரிடரிலிருந்து மீண்டெழ பல நாட்டில் பல துறைகள் முயன்றுக் கொண்டிருக்கின்றன. அதே சமயம்  பல இன்னல்களை சமாளித்து போராடவும் செய்கின்றன. அந்த விஷயத்திலும் வழக்கம் போல எல்லா நாடுகளுக்கும் முன்னோடியாக திகழ்கிறது சிங்கப்பூர். நான் சிங்கப்பூரில் பணிபுரியும் கட்டடப் பொறியாளன் என்பதால் நான் சிங்கப்பூரில் கவனித்த பல்வேறு கட்டுமானப் பணியிட உத்திகளை உங்களிடையே பகிர விரும்புகிறேன்.

 

கொரானா தொற்று தொடங்கிய காலம் முதலே, சிங்கப்பூர் தேசத்தில் அருமையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு, அங்குள்ள தொழிலாளர்களை பராமரித்து, அவர்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு, கட்டுமானத்துறைக்கு பல்வேறு சட்டதிட்டங்களை வகுத்து, கொரானாவிலிருந்து பணியிட பாதுகாப்பை மேம்படுத்தியுள்ளது. இங்குள்ள அனைத்து கட்டுமானம் சார்ந்த செயல்பாடுகளும் ‘’Building and Construction Authority” (BC) என்ற மையத்தின் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட்டு வருகின்றது. இது மட்டுமல்லாது, தொழிலாளர் நலனில் பங்காற்றிவரும் மனிதவள அமைச்சகம் [Ministry of Manpower (MOM)] விதிகளின்படியும், நடைபெற்றுவருகிறது. இவ்விரு மையத்தின் ஆலோசனையின்படி, பல சட்டங்களையும், தொழில்நுட்பங்களையும் பின்பற்றி கட்டுமானங்கள் தற்போது செயல்பட:டு வருகின்றது.

 

லட்சக்கணக்கான அயல் தேசத்து கட்டுமான தொழிலாளர்களை தன்வசத்தில் வைத்துள்ள சிங்கப்பூரில், சமூகத்தொடர்பை மிகவும் நுணுக்கமான முறையில் கையாளுகின்றனர். தொழிலாளர்களை வெளிப்புறங்களில் செல்ல அனுமதிக்காமல் தங்கும் விடுதிகளிலே வைத்து, கட்டுமானப் பணிகளுக்கு தனிப்பட்ட வாகனத்தில் அழைத்துச் சென்று, பொது இடங்களையும், பொது போக்குவரத்தையும் பயன்படுத்தாத வகையில், பல செயலிகளை (APPS) பயன்படுத்தி, அவர்கள் எங்கு, எங்கு செல்கிறார்கள் என்பதையும் கண்காணித்து வருகிறது.

 

மேலும், அனைவருக்கும் தனித்தனி வெப்பநிலை மானியை கொடுத்து தினசரி காலை, மாலை என இருமுறை தங்களது உடல்நிலை நிலவரத்தை மனிதவள அமைச்சகத்திற்;கு சமர்பிக்கவும் வழிவகுத்துள்ளது. மாதம் இருமுறை கொரானா பரிசோதனையை அனைத்து தொழிலாளர்களுக்கும் செய்து, தொழிலாளர் நலனில் பெரும் பங்காற்றியுள்ளது. தொற்றினால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களை மட்டும் தனிமைப்
படுத்தாது, அவர்களோடு தொடர்பில் உள்ள அனைவரையும் செயலிகள் (APPS) மூலம் கண்டறிந்து தனிமைப் படுத்துகிறது. தனிமைப்படுத்தலின் விளைவாக, தொழிலாளர்கள் மனதளவில் பாதிக்காத வண்ணம், அனைத்து வசதிகளையும் கொண்ட, விலையுயர்ந்த தனியறைகளில் தங்கவைத்து, அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அளித்து அவர்கள் மனதை பூரிப்படையச் செய்துள்ளது.

 

பணிக்கு வரும் தொழிலாளர்களை அவர்கள் வசிக்கும் இடங்களின் அடிப்படையில் பிரித்து பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். உதாரணமாக ஒரு இடத்திலிருந்து வரும் தொழிலாளர்களை ஒரு குழுவாக பிரித்து, ஒரே பகுதியில் வேலை செய்ய வேண்டும். ஒவ்வொரு பகுதியை சுற்றியும், தடுப்புகள் மற்றும் சங்கிலிகள் அமைத்து, மற்ற இடத்தில் இருந்து வரும். தொழிலாளர்களோடு, தொடர்புபடுத்தாமல் தனிக்குழுவாக சமூக இடைவெளியோடு பணியாற்ற வேண்டும் என்பதே விதிமுறை. இக்குழுக்களை பல வண்ணங்களைக் கொண்டு பிரித்து அடையாளப்படுத்துவதை படத்தில் காணலாம். 

 

கட்டிடப் பணியாளர்களின் உணவு இடைவேளை, ஓய்வு நேரங்கள் மற்றும் அன்றாட பணிகளை ஒவ்வொரு குழுவிற்கும் தனித்தனி நேரங்களாக பிரித்து, மற்றவர்களோடு ஏற்படுத்தும் அடிப்படை தொடர்பை குறைத்துள்ளது. கட்டுமான தொழிலாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தினந்தோறும், முககவசங்கள், வாரம்தோறும் தனித்தனி கிருமிநாசினிப் பொருட்களை கொடுத்து நலனைப் பேணிக் காக்கிறது.

 

பணியிட பயிற்சிகளும், அமைப்புகளும்:-
பொதுவாகவே, சிங்கப்பூர் கட்டுமானப் பணியிடங்களில் பல்வேறு நலன் சார்ந்த அமைப்புகள் உள்ளது. தற்போதைய கொரானா நிலவரத்தால் சில அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் Safe Distancing Officer (SDO), Covid Safe Worker Leader (CSWL) என இரண்டு அமைப்புகள் தற்போது செயல்படுகின்றது. இவர்களுக்கென தனிப்பட்ட பயிற்சிகளை இணையதள வாயிலாக அளித்து, பணியிடங்களில் பிரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஒரு SDO, ஒரு CSWL என நியமித்து பணிகளை செய்துவருகின்றது. இவர்களின் முக்கியப் பணியாக, கொரானா தடுப்பு சம்பந்தப்பட்ட பணியிட பாதுகாப்பு சட்டங்களை, தொழிலாளர்களை பின்பற்ற செய்வதும், கட்டுமான பணியிடங்களை ஆய்வு செய்தும், மேலும் தினசரி செயல்பாடுகளை அரசிற்கு தெரிவிக்கும் விதமாக, தினந்தோறும் அறிக்கை தயார் செய்து இணையதள வாயிலாக சமர்பித்தும் செயல்பட்டு வருகின்றனர்.

 

மேலும், வரும் காலகட்டங்களில் சிங்கப்பூரில் உள்ள பகுதிகளை பல மண்டலமாக பிரித்து, அவர்களுக்கான வார விடுமுறை நாட்களை, ஒவ்வொரு பகுதிகளுக்கும் வெவ்வேறு நாட்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக சில செய்திகள் பரவலாக வருகிறது. மிகச்சிறிய பரப்பளவை கொண்டதால் சிங்கப்பூரில் இவ்வாறு பின்பற்றலாம். ஆனால், நமது நாடு மிகப்பெரிய பரப்பளவு என்பதால் கடினம் என்று நம்மில் பலருக்கு கருத்துகள் வரலாம். அவ்வாறு நினைப்பது முற்றிலும் தவறு. இத்திட்டம் ஒன்றுதான். ஆனால், பின்பற்றுவது நமது மனம் சார்ந்த ஒன்றாகும். 

 

ஆகவே, இந்த திட்டங்களையும், உத்திகளையும் நமது அரசு கருத்தில் கொண்டு, பல சட்டதிட்டங்களை வகுக்கலாம். அதுமட்டுமல்லாது, நம் அனைவரும் தனிப்பட்ட அக்கறையோடு, சமூக இடைவெளியை பின்பற்றுவதோடு அல்லாது இப்படிப்பட்ட செயல்பாடுகளை கருத்தில் கொண்டு நமது பணியிடங்களிலும், நிறுவனங்களிலும் பின்பற்றி, இத்தகைய விழிப்புணர்வை நமது துறைசார்ந்த நண்பர்களுக்கும் அறிவுறுத்தினால்,  கொரானோ விழிப்புணர்வு மிகுந்த சிறந்த கட்டுமானத்துறை தலமாக நமது நகரங்களையும் மாற்றலாம்.

 

-----------------------------------------------------------------------

 

2020, அக்டோபர் மாத , பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து.

 

பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற : Call: 8825577291

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2073026