பெரும்பாலான இறக்குமதி பெயின்ட்கள் விலை உயர்ந்தவையாகவே உள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஐரோப்பாவில் செயல்படும் பல்வேறு நிறுவனங்களின் பெயின்ட் ரகங்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.
வாங்கியவுடன் நேரடியாக சுவரில் பயன்படுத்தும் நிலையில் இருப்பது, வாடை இருக்காது, வழக்கமான பெயின்ட்களை காட்டிலும் அதிக பளபளப்பு தோற்றம் போன்ற காரணங்களால் மக்கள் இறக்குமதி ரகங்களை நாடுகின்றனர். ஆனால், இறக்குமதி பெயின்ட்களை கண்ணை மூடிக்கொண்டு அப்படியே வாங்குவது நல்லதல்ல .
அது எப்படி தயாரிக்கப்பட்டது என்பதை முழுமையாக ஆராய வேண்டும். நமது நாட்டில் அமலில் உள்ள பாதுகாப்பு வழிமுறைகள்கடைபிடிக்கப்பட்டுள்ளதாண? என்பதை கவனிக்க வேண்டும்.
வெளிநாட்டு தயாரிப்பு என்பதாலேயே இறக்குமதி பெயின்ட்கள் தரமானதாக இருக்கும் என்று யாரும் முடிவுக்கு வரவேண்டாம். நமது நாட்டில் தடை செய்யப்பட்ட வழிமுறைகளை பயன்படுத்திய நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
-----------------------------------------------------------------------
2020, நவம்பர் மாத , பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து.
பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற : Call: 8825577291