கான்கிரீட் கட்டடங்களுக்கான சுமை மேலாண்மை வழிமுறைகள்!

23 ஜனவரி 2024   05:30 AM 12 ஏப்ரல் 2021   06:19 PM


பொதுவாக கட்டடங்களில் பல்வேறு வகையான சுமைகள் ஏற்படுகின்றன. கட்டுமான உறுப்புகளின் எடை இயல்பான சுமையாக இருக்கும். இதில், கட்டத்தின் கட்டுமான பாகங்கள் அதில் உள்ளீடாக சேர்க்கப்பட்ட பொருட்களின் எடை அடங்கும். இந்த சுமையில் மாறுதல்கள் இருக்காது. கட்டத்தின் அமைப்பியல் சார்ந்த பாகங்களில் மாறுதல்கள் ஏற்படாதவரை இவ்வகை சுமைகளில் மாற்றம் ஏற்படாது. 

 

ஆனால், விரிவாக்கத்தின் போது, இந்த சுமையில் சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.இதற்கு அடுத்தபடியாக, கட்டடத்தை பயன்படுத்தும் நிலையில், அங்கு வைக்கப்படும் பொருட்களால் ஏற்படும் சுமை லைவ் லோடு எனப்படுகிறது. இந்த சுமை மாறுதலுக்கு உட்பட்டது. எனினும், கட்டுமான நிலையிலேயே, இந்த சுமைக்கான உத்தேச மதிப்பீடு தயாரிக்கப்பட வேண்டும். இதில் குடியிருப்பு கட்டடம் எனில், ஒரு சதுர மீட்டருக்கு, 250 கிலோ என்றும், தொழிற்சாலை எனில் ஒரு சதுர மீட்டருக்கு, 1,000 கிலோ என மதிப்பிடப்படும்.  இவ்வாறு தயாரிக்கப்படும் மதிப்பீடுகள் அடிப்படையிலேயே கட்டடத்தின் அமைப்பியல் கூறுகளாக, தூண்கள், பீம்கள், தளம் ஆகியவற்றின் அளவுகள் முடிவு செய்யப்படும். எனவே தான் குடியிருப்பு பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட கட்டடங்களை தொழிற்சாலையாக மாற்ற கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

 

இதேபோல், காற்று வீசுவதால் ஏற்படும் சுமை, பயன்படும் காரணமாக ஏற்படும் சுமை ஆகியவையும் கணகிடப்படுகிறது இயல்பான நிலையில் காற்று வீசும் போக்கு காரணமாக, ஒரு சதுர மீட்டருக்கு, 150 கிலோ வரை கட்டடத்தில் சுமை ஏற்பட வாய்ப்புள்ளது.  இது போன்ற அடிப்படை கூறுகளை கட்டடத்துகான வடிவமைப்பை உருவாக்கும் நிலையிலேயே கவனித்து செயல்பட்டால்  கட்டடத்தின் பயன்பாட்டில் எவ்வித பிரச்னையும் ஏற்படாது .

 

- பொறி. பிரகாஷ்  நந்தகுமார்

 

------------------------------------------------------------------------

 

2020, நவம்பர் மாத , பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து.

 

பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற : Call: 8825577291

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067248