வெள்ள பாதிப்பின் போது குடியிருப்பு சுவர்கள் உடைந்து நொறுங்குவது ஏன் ?

23 ஜனவரி 2024   05:30 AM 08 மார்ச் 2021   02:14 PM


சென்னையில் சில ஆன்டுகளுக்கு முன் ஏற்பட்ட கடும் மழை வெள்ளத்தில் அங்குமிங்குமாக ஒன்றிரண்டு வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்த சம்பவமும் நிகழ்ந்தன. பழைய வீடுகள் மட்டுமன்றி, புதிய வீடுகளும் தப்பவில்லை. குறிப்பாக, மயிலையில் லஸ் சர்ச் சாலையில் ஒரு வீட்டின் வரந்தா சுவர் திடீரென இடிந்து விழுந்தது. பிராட்வே பகுதியில், 50 ஆண்டுகள் பழமையான குடியிருப்பு கட்டடம் தரை இறங்கியது. இதனால், அதில் குடியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த ஆண்டும் தமிழகமெங்கும் வடகிழக்கு பருவமழை துவங்கி ஒரு நாள் மழைக்கே சென்னை மிதக்கும் அவலமும் நாம் பார்க்க நேர்ந்தது.மழைக்காலத்தில் தெருவில் நடப்பது எப்படி ரிஸ்கானதோ அப்படித்தான் பழைய வீடுகளில் வசிப்பதும் ரிஸ்க்கானது.
 
வெள்ள பாதிப்பின் போது குடியிருப்பு சுவர்கள் உடைந்து நொறுங்குவது ஏன் ?
பொதுவாக, ‘தரை மட்டத்தில், ‘பீம்’ போடாமல் கட்டப் பட்ட குடியிருப்பு சுவர்கள், வெள்ள பாதிப்பில் உடைந்து நொறுங்கும் நிலை ஏற்படும். அடுக்குமாடி கட்டடங்கள் கட்டும் போது பாறை இருக்கும் ஆழம் வரை அஸ்திவாரம் அமைக்க வேண்டும். இவ்வாறு அஸ்திவாரம் அமைத்தாலும், தரை மட்டத்தில் அனைத்துத் தூண்களையும் இணைக்கும் வகையில், ‘பீம்’கள் அமைக்க வேண்டும். இந்த, ‘பீம்’களின் மேல் தான் சுவர்களை எழுப்ப வேண்டும்.
 
ஆனால், சில இடங்களில் முறையாக அஸ்திவாரம் அமைத்தாலும் தரை மட்டத்தில், ‘பீம்’கள் அமைப்பதில் அலட்சியமாக இருந்து விடுகின்றனர். சில கட்டுமானங்களில், கட்டடத்தின் பிரதான சுவர்கள் அமையும் இடங்களில் மட்டும், ‘பீம்’களை அமைத்து விட்டு, சார்பு சுவர்கள் அமையும் இடங்களில், ‘பீம்’களை அமைப்பது இல்லை. இவ்வாறு, ‘பீம்’கள் அமைக்கப்படாத இடங்களில் எழுப்பப்படும் சுவர்கள், மழைநீர் அதிக
அளவில் தேங்கினாலும், மண்ணில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டாலும் உடைந்து நொறுங்கிவிடும். இது போன்ற சார்பு சுவர்கள் உடைந்து நொறுங்குவது கட்டடத்தின் உறுதிக்கும் சவாலாக மாறிவிடும் அபாயம் உள்ளது.
 
மூன்று அடிக்கு தண்ணீர் தேங்கினால்..
அனைத்து வகையான கட்டுமானங்களிலும் ஒற்றைக்கல் சுவர் எனப்படும் 4.5 அங்குல சுவர் எழுப்புவதை தவிர்க்க வேண்டும். இந்த சுவர்கள் உள்ள பகுதியில் தொடர்ந்து, சில மணி நேரம், மூன்று அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கினாலும் சுவர் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதைத் தவிர்க்க, எந்த சுவரானாலும் அதை தரையில் இருந்து நேரடியாக கட்டக் கூடாது. தரைமட்டத்தில், ‘கான்கிரீட் பீம்’ அமைத்து அதன் மேல் தான் சுவர் எழுப்ப வேண்டும்.
 
சாதாரண பயன்பாட்டுக்காக கட்டினாலும், இரண்டு செங்கற்களை பயன்படுத்தி, முக்கால் அடி அகலத்துக்கு கட்டுமானம் இருக்க வேண்டும். அடிக்கடி மழைநீர் அல்லது கழிவுநீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் கட்டடம் கட்டுவதைத் தவிர்க்கவேண்டும். தொடர்ந்து தண்ணீர், ஈரம் ஆகியவற்றால் கட்டடத்தின் அடித்தளம் சீக்கிரமே பழுதுபட்டு விடும். கவனமாக இருங்கள்.
 
---------------------------------------------------
 
2020, நவம்பர் மாத, பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து ..
 
இதுபோன்ற பயனுள்ள கட்டுமானத்துறை தகவல்களை /செய்திகளை அறிந்து கொள்ள :
http://www.buildersline.in/paginationarticle.php
 
பில்டர்ஸ் லைன் இதழினை ஆன்லைனில் படிக்க :
http://www.buildersline.in/subscription.php?reg=
 
பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற: 88255 77291
 
 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067267