8400 டன் எடை ! 230 மீ நீளம் ! 87 மீ உயரத்தில் பொருத்தி பொறியாளர்கள் சாதனை

03 ஜனவரி 2024   05:30 AM 03 மார்ச் 2021   12:26 PM


கொரோனா காலக்கட்டம் நமக்கெல்லாம் ஒரு சாவலைத் தந்தது என்றால் துபாய் பொறியாளர்களுக்கு வேறு விதமன சவாலை நிறைவேற்ற அவகாசம் அளித்திருக்கிறது. துபாயில் சபீல் ஒன் என்ற இரட்டை டவர் கட்டுமானத்தில் இரண்டு டவர்களையும் இணைக்கும் பாலம் ஒன்று 87 மீ உயரத்தில் அமைக்கப்பட்டு வருகிறது (இதுபற்றி நமது பில்டர்ஸ்லைனில் பிப்ரவரி 2020 இதழில் விவரமாக வெளியிட்டிருந்தோம்).


இந்த ஸ்டீல் பாலத்தை தற்காலிக  ஸ்டீல் பாலமாக அமைத்து அதன்பின் அதை நிரந்தரப் பாலமாக கட்டமைப்பது தான்  திட்டம்.


அதன் படி 8700 டன்கள் எடை உடைய இந்த 226 மீ நீள கேன்டிலிவர் ஸ்டீல் பாலத்தை   தரையில் இருந்து 87 மீ உயரத்தில் கொண்டு செல்லும் பணி  சென்ற மாதம் நிறைவடைந்தது.  கொரானா காலகட்டத்தில் வாகனப் போக்குவரத்து இல்லாததால் திட்டமிடலுக்கு முன்கூட்டியே இந்த சிரமமான பணியை நிகழ்த்தி விட்டதாக  பொறியாளர்கள் குழு கூறுகிறது. 110 பொறியாளர்கள் மேற்பார்வையில் ஒரு சர்வதேச பாதுகாப்பு & கிரேன்  ஸ்பெசலிஸ்டுகளின் கண்காணிப்பில் 7 நாட்களில் இப்பபணி முடிக்கப்பட்டது. இப்பணிக்கு 16 டவர் கிரேன்கள், 130 ஹெவி வெய்ட் ஜாக்கிகள் பயன்படுத்தப்பட்டிருகின்றன. கட்டடப் பணிகள் 2021 மார்ச்சில் நிறைவடையும்.


------------------------------------------------------------------


2020, நவம்பர் மாத, பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து ..


இதுபோன்ற  பயனுள்ள கட்டுமானத்துறை தகவல்களை /செய்திகளை அறிந்து கொள்ள :
http://www.buildersline.in/paginationarticle.php


பில்டர்ஸ் லைன் இதழினை ஆன்லைனில் படிக்க :
http://www.buildersline.in/subscription.php?reg=


பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற: 88255 77291

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2073029