பிரிண்டிங் டெக்னாலஜி வந்தாலும் வந்தது. இதன் தாயகமான ஜெர்மனியில் ஒரு நடை பாலம் 2 தனி வீடுகள் 1 அடுக்கு மாடி என கட்டி அசத்தி வருகிறது. இப்போது உலகிலேயே வேகமாக வீட்டைக் கட்டும் அச்சு இயந்திரத்தை டிசைன் செய்திருக்கிறார்கள். (3டி பிரிண்டிங் டெக்னாலஜி என்றால் என்னவென்று தெரியாவர்களுக்காக.)
பிரிண்ட்டரில் இருந்து தாள் வருவது போல வீடு வராது. 500ச.அடி வீடு எனில், அதன் இரு பக்கமும் பிரின்ட்டிங் இயந்திரங்கள் தேவையான உயரத்தில் நிறுவப்படும். பிறகு அதில் உள்ள பிரின்டிங் சாதனத்தினால் மி.மீ /மி.மீ ஆக ஒவ்வொரு சதுர அங்குலமும் நிஜ வீடாக பிரின்ட் ஆகும். இங்க் பதிலாக கட்டுமானப் பொருட்கள் திட, திரவ வடிவில் நிரப்பப்பட்டிருக்கும். கேமர் மேக்கர் (Kamer maker) என்னும் கருவியைத்தான் கட்டுமானத்திற்காகப் பயன்படுத்தி வருகிறார்கள்.
எப்படி நடக்குது 3டி பிரின்ட்டிங்?
ஒரு மெல்லிசான கோடு... இதுதான் 3டி பிரின்டரின் அடிப்படை. உதாரணத்துக்கு ஒரு கட்டுமான
கலவைப்பசையை நீர்மமாக்கி அதனை கோடு கோடாக வேண்டிய வடிவத்தில் வார்த்துக்கொண்டே செல்கிறது. அது காய்ந்ததும் அதன் மேலே இன்னொரு கோடு, சற்று நேரத்தில் அதன்மேல் இன்னொரு கோடு. இப்படியே அடுக்குகளாக மெல்லிய கோடுகளை ஆயிரக்கணக்கில் வார்த்தே ஒரு வடிவத்தை வெற்றிகரமாக எழுப்பிவிடுகிறது. ஒட்டுப்பசை என்றில்லை,உலோகப் பொருட்களைக் கொண்டு வீடு உருவாக்க தனியே 3டி பிரின்டர்கள் உள்ளன. தின்ம நிலையில் உள்ள உலோகத்தை லேசர் மூலம் உருக்கி கோடுகளாக வார்த்து, வேண்டிய வடிவத்தை உருவாக்கலாம். இரும்பு, அலுமினியம் உள்பட அனைத்து வகை உலோகங்களையும் இதில் பயன்படுத்தலாம். சிமெண்ட் கட்டுமானங்களை உருவாக்கும் பிரமாண்ட பிரிண்டர்கள் தனி வகை!’’
இந்த மூலப்பொருட்கள் 3டி பிரின்டிங் இயந்திரத்தில் இங்க்கிற்கு பதிலாக நிரப்பப் பட்டிருக்கும். இயந்திரத்தில் உள்ள கணினி வழியாக நமக்குத் தேவையான வீட்டுப் ப்ளானை “ஃபீட்’ செய்துவிட்டால் இரு பக்கமும் உள்ள ரோபோக்கள் மூலப்பொருட்களை கசியவிட்டு ஒவ்வொரு சதுர அங்குலமாக வீட்டினை உருவாக்கத் துவங்குகிறது. ஓரிரு மாடி கொண்ட வீடுகளுக்கு இது போன்ற அச்சு வீடுகள் மிகவும் ஏற்புடையவை. பணி இடத்திலும் இந்த வீட்டை உருவாக்க முடியும் அல்லது தொழிற் சாலை ஒன்றிலும் உருவாக்கி தேவையான இடத்திற்கு வீட்டை கொண்டு வர முடியும்.
சரி ஜெர்மனிக்கு வருவோம். ஜெர்மன் பொறியியல் நிறுவனம் பெரி ஆர்க்கிடெக்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஃபேபியன் கிராட்ச் என்பவர் மிகவேகமாக வீட்டை அச்சிடும் இயந்திரம் மற்றும் தொழிற்நுட்பத்தை சென்ற மாதம் வெளியிட்டிருக்கிறார்.
BOD2 என்னும் இந்த பிரிண்டிங் இயந்திரத்தின் மூலம் ஒரு வினாடியில் ஒரு மீட்டர் நீள ஒரு லேயர் கோட்டை இதன் மூலம் இட முடியும் என்றும், ஐந்தே நிமிடத்தில் ஒரு ச. மீ பரப்பிலான டபுள் லேயர் சுவரை உருவாக்க முடியும் என்றும் கூறுகிறார்.
இதன் செய்முறை வீடு சென்ற மாதம் முதல் வாரத்தில் நிறைவடைந்து வாடிக்கை யாளரிடம் வீடு ஒப்படைக்கப்பட்டது.(வாடிக்கை யாளருக்கு 2 லட்சம் யூரோ டாலருக்கு விற்கப் பட்டிருக்கிறது.)
இந்த இயந்திரத்தின் மூலம் ஜெர்மனியில் பெக்காம் நகரில் உள்ள வால்ட் மேர் கேர்ட்டே என்னும் தனியாருக்கு 160 ச.மீ (1600 ச.அடி) கொண்ட மூன்று லேயர் சுவர், தரை கொண்ட 2 தள அடுக்கு மாடி வீட்டை வெறும் 6 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.
பிளம்பிங், எலக்டிரிக்கல், இன்டிரியர், கண்ணாடி பொருத்தும் பணிகளுக்கு கூடுதல் 5 நாட்கள் செலவாகி இருக்கிறது. இயந்திரங்கள் நிறுவவும், கலவைப் பசையை தயார் செய்யவும் 3 நாட்கள் ஆனதாக பெரி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. வழக்கமான கட்டுமானச் செலவை விட மூன்றில் ஒரு பங்கு மட்டுமே ஆனதாகவும், கட்டி முடிக்கும் கால அளவும் 10-இல் ஒரு மடங்கு மட்டுமே ஆனதாகவும் இந்த வீட்டை வாங்கிய வால்ட் மேர் கேர்ட்டே என்பவர் தெரிவித்திருக்கிறார்.
நகர்த்தக் கூடிய அமைப்பிலான இந்த 3டி பிரிண்டிங் வீட்டை கட்டி முடிக்க இரண்டே பேர் தான் தேவைப்பட்டிருகிறார்கள். அவர்கள் பிரிண்டிங் இயந்திரத்தை இயக்கிய ஆபரேட்டர்கள்.
குறுகிய காலத்தில் அச்சிட்டு முடித்த BOD2 இயந்திரத்திற்கு இப்போது செம்ம டிமாண்ட்.
ஜெர்மனியில் நடைபெற உள்ல பாவ்மா கண்காட்சியில் இந்த பிரிண்டிங் இயந்திரம் அதிகாரபூர்வமாக விற்பனை துவங்கப்பட இருக்கிறது.
------------------------------------------------------------------
2020, நவம்பர் மாத, பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து ..
பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற: 88255 77291