துபாயைப் போலவே சவுதியும் நவீனக் கட்டக்கலையில் சமீபகாலமாக வெளுத்து வாங்குகிறது. 2020இல் அதற்கான அச்சாரத்தை போட்டிருக்கிறது. அப்படியா இப்போது எத்தனை மாடிகள்? எத்தனை மீட்டர் உயரம்? எனக் கேட்காதீர்கள் இந்த கட்டடம் தரைக்குமேலே வான்வெளியில் அல்ல.., தரைக்குள்ளே பாதாள சுரங்கத்தில்..
ஆம். கடும்வெம்மை மற்றும் அடிக்கடி சுழற்றி அடிக்கும் மணற்புயல் ஆகியவற்றுக்கு காப்பாகவும், புதுமையாகவும் இருக்கும் வண்ணம் கட்டப்படும் இந்தக் கட்டடம் ஷரான் ரிசார்ட் எனப்படும் ஒரு ஹோட்டல் கட்டுமானமாகும். பிரபல பிரெஞ்ச் கட்டட கலைஞர் ஜீன் நோவெல் (jean nouvel) என்பவர் தான் இதை வடிவமைக்கிறார்.
“உண்மையில் இது எங்கள் ஐடியா இல்லை. பழங்கால அரேபியர்கள் இப்படித்தான் விலங்குகள், வெப்பம், மணற்புயலுக்கு பயந்து பூமிக்குள் கட்டுமானங்களை உருவாக்கி வாழ்ந்தார்கள். நாம் ஒரே ஒரு கட்டுமானத்தைப் பற்றி வியப்பாக பேசுகிறோம். ஆனால், அவர்கள் குகைக்குள்ளும், பாதாள சுரங்கத் திற்குள்ளும் ஒரு ஊரையே கட்டி வாழ்ந்திருக்கிறார்கள். 1100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபடேயர்கள் என்னும் அந்த சவுதி அரேபிர்களின் நாகரிக நீட்சி தான் இந்த ஷரான் ரிசார்ட் ஹோட்டல் ட்டுமானமாகும்.
இந்த முறையால் அஸ்திவார செலவு வெகுவாக குறைந்திருக்கிறது. வெளி வெப்பத்தை விட 5 முதல் 8 டிகிரி வெப்பம் உள்ளே குறைவாக இருக்கும். காற்றும்,வெளிச்சமும் வரும் வகையில் இந்த வடிவமைப்பு இருக்கும். ஷரான் ரிசார்ட்டில் 2 படுக்கையறைகள் கொண்ட 40 விடுதியும், 4 முதல் 10 படுக்கையறைகள் கொன்ட லக்சரி ரிசார்ட் வில்லாக்கள் ஐந்தும் கட்டப்படும். இதுதவிர, 40 குடியிருப்புகள் கடப்படுகின்றன. மேலும், 15 தனியாருக்கான அலுவலக வளாகங்களும் உருவாக்கப்பட உள்ளன. அலுவலகம் மற்றும் வீடுகள் ஒன்றாக அமைய விரும்புவோருக்கு rரான் ரிசார்ட் நல்ல வாய்ப்பாக இருக்கும்’’ எனக்கூறும் பிரெஞ்ச் கட்டட கலைஞர் ஜின் நோவெல், இந்த புராஜெக்டின் தனிஅம்சங்களாகக் கூறும் போது.,
“இந்த ஹோட்டல் விடுதிகள் மற்றும் வீடுகளில் நவீன வசதிகள் அளிக்கப்பட்டாலும், வெளிப்புற & உள்புற தோற்றம் மற்றும் வடிவமைப்பைப் பொறுத்த வரை அரேபியாவின் பழங்கால நபாடேயர்களின் பாரம்பரியமும் கலாச்சாரமும் இணைந்து இருக்கும் படி தான் உருவாகும். சுவர்கள், தரைகள், சீலிங்குகள் ஆகியவற்றின் வடிவமைப்பு & அலங்காரம் என எலாமே பழங்கால் நாகரிக மிச்சத்தை நமக்கு நினைவுப்படுத்தி கொண்டே இருக்கும். இது நிச்சயமாக சவூதி அரேபியாவின் குறிப்பிடத்தக்க கட்டடக் கலையாக உருவெடுக்கும். அதற்கான தொடக்கத்தை ஷரான் ரிசார்ட் நிச்சயம் கொடுக்கும்’’ என்கிறார்.
சவூதியின் மிக முக்கிய சுற்றுலாதலமாக ஆகும் என எதிர்ப்பார்க்கப்படும் ஷரான் ரிசார்ட்டின் ஒரு நாள் வாடகை துபாய் புர்ஜ் டவரை விடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நிலப்பரப்பில் தொலைந்து போன பழங்கால நாகரீகத்தினை மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து நினைவு கூர்வது என்பது கட்டுமான உலகில் ஒரு அரிய நிகழ்வு. அதை சவூதி செய்ய துவங்கி விட்டது. ஆனால் நாம் கீழடியின் மதிப்பை இன்னும் தெரியாமல் இருக்கிறோம்.
------------------------------------------------------------------
2020, நவம்பர் மாத, பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து ..
பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற: 88255 77291
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2066616
|