கொரானா என்னும் பீதிக்காலம் பல தொழில்களை முடக்கி போட்டது, பல பேரின் வேலைவாய்ப்பை பறித்துள்ளது. மீண்டும் பணியமர்த்தப்பட்ட தொழிலாளிகள் & ஊழியர்களின் மாதச்சம்பளம் வெகுவாக குறைக்கப்பட்டிருக்கிறது. பொருளாதார பின் தள்ளல் காரணமாக 70% சதவீத நுகர்வு பொருட்கள் விற்பனை விலையில் 5 முதல் 25 % விலைச்சரிவைக் கண்டிருக்கின்றன.அரசாங்கமும் பல பொருட்களுக்கான வரியைக் குறைத்து வருகிறது.இந்த ஆண்டுக்குள் இருச்சக்கர மோட்டார் வாகனங்களின் ஜிஎஸ்டி யை குறைக்கவும் அரசு யோசித்து வருகிறது.மக்களிடையே உள்ளே பொருளாதாரப் பற்றாக்குறையை வணிக நிறுவனங்கள் புரிந்து கொண்டு, அதற்கேற்ற வகையில் விலைக்குறைப்பைக் கொண்டு வந்து அதன்மூலம் தங்கள் லாபத்தில் (வருவாய்) இழப்பை ஏற்று சமாளித்து தங்களை நிலைநிறுத்தி வருகின்றன.
ஆனால், மக்கள் பெரிதும் எதிர்பார்த்த வீடுகளின் விலை தான் இன்னும் குறையவே இல்லை. அதனால் இன்னும் இந்திய நகரங்கள் பெரும்பாலானவற்ஷீல் வீட்டு விற்பனை இன்னும் சூடுபிடிக்கவில்லை.
இத்தனைக்கும் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் வீட்டு வாடகை கணிசமாக குறைந்திருக்கிறது. அல்லது சில இடங்களில் வாடகை உயர்த்தப்படாமலேயே இருக்கிறது. கடை, அலுவலகங்களின் வாடகை நிலவரமும் அப்படித்தான். மேலும் லீஸ் தொகையும் குறைந்த்திருக்கிறது.
ஆனால், வீட்டு விலை ஏன் இன்னும் குறையவில்லை? அல்லது பில்டர்களால் ஏன் குறைக்க முடியவில்லை. பொருளாதர நிபுணர் நிரஞ்சனைக் கேட்டபோது,
“இதே கேள்வியை நீங்கள் ஏன் தங்கம் விற்பனையாளர்களிடம் கேட்கவில்லை?.பெட்ரோல், டீசல் விலை அதிகமாகிவிட்டதே? மாணவர்களுக்கு ஆன் லைன் வகுப்புகள் கட்டாயமாக்கப்பட்டவுடன் ரூ.10ஆயிரத்திற்கு விற்ற போன்கள் 12 ஆயிரத்திற்கு போகவில்லையா?
இங்கே எதற்கும் தெளிவான வணிகச்சட்டங்கள் இல்லை. எந்த சூழ்நிலை வந்தாலும் இதுதான் விலை என்பது இங்கு கிடையாது. நேரத்திற்கு ஏற்ற வியாபாபாரம், அதற்கேற்ற விலை இதுதான் இங்கு வியாபரத்தந்திரமாகி விட்டது.
பொதுவாக வீடு என்பது சீசனில் விற்கக் கூடிய பொருளோ, அழுகிப் போகக் கூடியப் பொருளோ கிடையாது. இப்போது இல்லையயன்றால் நிலைமை சரியானால் விற்கலாம் என பில்டர்கள் நினைக்கலாம். இதில் தனி ஆள் நிறுவனங்கள் முடிவு வேறு, கார்ப்பரேட் நிறுவனங்களின் முடிவு வேறாக இருக்கும்.
அதைத்தவிர கட்டி முடித்த வீடுகள் எனப் பார்த்தால் அதற்குண்டான அடக்கச் செலவை விட குறைவாக நீங்கள் (மக்கள்) எதிர்பார்த்தால் அது ஒரு போதும் கிடைக்காது.
மேலும் எப்போது வேண்டுமானாலும் மக்கள் வாங்க கூடிய ஒரு பொருள் தான் வீடு. லேட் ஆனாலும் ஒருபோதும் தவிர்க்கப்படக் கூடியதல்ல, அதனால் தான் வீட்டின் விலை குறையவில்லை ‘’ என்றார்.
மதுரை ஆர்.கே. கன்ஸ்ட்ரக்rன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் செயலாளருமான திரு.ஆர்.கே. சிவகுமாரிடம் பேசிய போது,
‘‘மற்ற பொருட்கள் போல் ஏன் வீட்டு விலை குறையவில்லை? எனக் கேட்கிறீர்கள்.
வீட்டின் விலை குறைய வேண்டுமென்றால் கட்டடப் பொருட்களின் விலை குறைய வேண்டும். அது நடந்ததா? கொரானா காலத்திற்கு முன் சிமென்ட் விலை மூட்டைக்கு ரூ.380 ஆக இருந்தது, இப்போது ரூ.410 ஆக இருக்கிறது.,டிஎம்டி கம்பிகளின் விலை இப்பொது 48 ஆயிரத்தில் வந்து நிற்கிறது. பிராண்டட் கம்பிகள் 50 ஆயிரத்திற்கும் மேல் விற்பனை ஆகிறது.
எம்.சான்ட் மூன்று யூனிட் 9 ஆயிரத்திற்கு விற்றது. இப்போது ரூ.13,500 என்கிறார்கள். கற்கள், பெயின்ட், டைல், பைப்கள், கேபிள், சானிடரிவேர், இதில் எது விலை குறைந்திருக்கிறது?
ஆட்களின் கூலி, இயந்திர வாடகை குறைந்திருக்கிறதா? மனைவிலை குறைந்து விட்டதா? எல்லாமே அதிகமாகித்தான் இருக்கிறது.
வட இந்திய தொழிலாலர்கள் இடத்தை உள்ளூர் தொழிலாளர்கள் கொண்டு நிரப்புவதால் அதிக
கூலியைத்தான் தர வேண்டி இருக்கிறது’’ .
இதெல்லாம் இனிவரும் கட்டுமானங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள். ஆனால், கொரோனா காலத்திற்கு முன் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் விலை ஏன் குறையவில்லை?
‘‘கொரோனா காலத்திற்கு முன்பே கட்டி முடிக்கப்பட்ட ஒரு புராஜெக்ட் இதுவரை விற்க முடியாது போனால், அந்த முதலீட்டின் மீதான வட்டியை சுமப்பது யார்? அந்த விலையை எங்கு வைப்பது? வீட்டில் தானே? உண்மையில் அடக்கவிலையை விட 5 முதல் 10 % வந்தால் போதும் என் விற்று விட பில்டர்கள், பொறியாளர்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள். லாபத்தின் சதவீதத்தை குறைத்து விற்பதால் தான் ஓரளவு நடுத்தர, சிறு புராஜெக்டுகளின் வீடுகள் விற்பனை ஆகிறது.
அதுதவிர, புராஜெக்டை மேற்கொள்ளும் பில்டர்கள் நாங்களும் ஜிஎஸ்டி கட்டுகிறோம், வாங்கும் நுகர்வோரும் ஜிஎஸ்டி கட்ட விலை இன்னும் அதிகமாகிறது. எனவே தான் வீட்டின் விலை மற்ற
பொருட்களைப் போல் குறைய
வில்லை’’ என்றார் தெளிவாக.
-------------———————————
2020, நவம்பர் மாத, பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து ..
பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற: 88255 77291
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2066613
|