மாடிப்படிகளை கீழ் தளத்தில் இருந்து மேல் தளத்துக்கு செல்லும் வழியாக மட்டும் பார்க்காமல், வீட்டின் அழகு, பயன்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றுடன் சேர்த்து பார்க்க வேண்டும் .
பிரமாண்டமாகக் கட்டப்படும் கட்டடங்களை தவிர்த்து, இப்போது மிக எளிய கட்டங்களுக்கும் இம்மாதிரி வரவேற்பறையிலிருந்தே படிகள் அமைக்கும் முறை பிரபல மாகிவிட்டது. தரைதளம் மட்டும் கொண்டதாக கட்டப்படும் வீட்டில், உட்புறமாக மாடிப்படி அமைத்தால், மொட்டை மாடியில் படிகள் சேரும் இடத்தை மறைக்க, ஒரு அறை கட்ட வேண்டும்.
அவ்வாறு கட்டப்படும் அறைக்கு முறையான பாதுகாப்பு வசதிகளையும் செய்ய வேண்டும். இதில், பிற்காலத்தில் மாடியில் கூடுதல் அறைகள் கட்டும் போது சில சிக்கல்கள் ஏற்படும். மாடியில் கட்டப்படும் கூடுதல் அறைகளை கீழ் வீட்டில் இருப்பவர்களே பயன்படுத்தினால் பிரச்சனை இல்லை. அதன் வடிவமைப்பில் திருப்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் தேவை. ஒரே வீச்சில் நடந்து போகும்படி அமைக்காமல் அரைவட்டம், கால் திருப்பம், திறந்தவெளி திருப்பம் என, எது பொருத்தமாக இருக்கிறதோ அதன் படி அமைக்கலாம்.
வீட்டின் வரவேற்பயையிலேயே மாடிப்படிகளை அமைப்பது. இப்போதுள்ள நடைமுறை. அப்படி வீட்டுக்குள் மாடிப்படி அமைத்தாலும் அதன் அளவுகள் விஷயத்திலும், அழகுணர்ச்சியிலும் கவனமாக இருக்க வேண்டும்.
குறுகலான அறையில் அமைத்தாலும், அது குழந்தைகள், முதியவர்கள் பயன்படுத்த ஏதுவாக இருக்க
வேண்டும். அக்கறை அழகைவிட மிக முக்கியம்.
படிக்கட்டுகளின் சாய்வு, 25 டிகிரி முதல் 40 டிகிரி கோணத்தில் இருக்கமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அகலம் 3 அடிகள் வரை இருக்கலாம்.
- பொறி.தேவநாதன்
-------------———————————
2021, ஜனவரி மாத, பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து ..
பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற: 88255 77291
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067306
|