உங்களிடம் எத்தனை காசு குறைவாக இருந்தாலும் இப்படி கோடாலி வடிவத்தில், சவப்பெட்டி வடிவத்தில், கோவணம் வடிவத்தில் வீட்டு மனை வாங்கிப் போடாதீர்கள், எக்காலத்திலும் விற்க முடியாது, எத்தனை அவலமாக இப்படி படிக்காத தற்குறிகள் மனையை ப்ளான் போட்டு விற்கின்றனர், 20 அடி ரோடாம் ஆனால் இதற்கு DTCP அப்ரூவல் உள்ளதாம்,குறைந்தது 23 அடி இருந்தால் தான் DTCP அப்ரூவல் தரும்.குறைந்தது ஒரு பூங்கா, விளையாட்டு திடல், ஒரிரு கடைகள் Layout ல் இருந்தால் தான் DTCP அப்ரூவல் தரும். எனவே போலி DTCP Layout களை வாங்கி ஏமாறாதீர்கள்.
வெளி நாடுகளில் MTP (Master Town Planner) படித்தவர்கள் மட்டுமே இப்படி Layout வடிவமைக்க முடியும், ஆனால் இங்கு பணம் படைத்த கவுன்சிலர்கள் படிக்காத தற்குறிகள் தான் இப்படி Layout போட்டு விற்கின்றனர்.
இது போல எந்த திசையின் ஓரம் துண்டான ,கோணலான skew வீட்டு மனைகள் வாழ ஏற்றதல்ல,இப்படி investment என நினைத்து கோடாலி வடிவ மனை வாங்கிப் போடுவதற்கு பதில் அந்த காசை தான தர்மங்கள் செய்யலாம்,உங்கள் கணக்கில் புண்ணியமாவது ஏறும்.
PS:வாஸ்துபடி ஒவ்வொரு திசையில் இருந்தும் மனைக்கு பிரபஞ்ச சக்தி கிடைத்து அதில் வசிப்பவர்களுக்கு நலம் பயக்கும், மனை நாற்புறமும் 90டிகிரி பாகையில் இருந்தால் அந்தந்த திசைகளின் ஆற்றல் சரியாக கிடைக்கும்,
இப்படி திசைகள் கோணலாக, ஐங்கோணமாக, முக்கோணமாக, வட்டமாக இருக்கையில் அந்த திசைகளின் ஆற்றல் தடைபடும், அதில் வசிப்பவர்களுக்கு பல இடர்கள் தரும், அதனால் தான் செவ்வக மனைகள் அதுவும் 90 பாகை
இருக்குமாறு அமைந்த மனைகளை வாங்குவது சிறந்தது
நல்ல அனுபவம் மிகுத்த கட்டிட வடிவமைப்பாளர்களுக்கு எந்த விதமான கோணல் மனைகளிலும் கட்டிடம் வடிவமைக்க முடியும், அதில் எந்த ஐயமும் வேண்டாம், வாஸ்து நம்பிக்கை இல்லாதவர்கள் அறிவியல் ஆதாரம் கேட்பவர்கள் தாராளமாக இது போல மனை வாங்குங்கள்.
பொறிஞர்- கார்த்திகேயன்
-------------———————————
2021, ஜனவரி மாத, பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து ..
பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற: 88255 77291
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2066627
|