சிங்காரச் சென்னையில் நாளுக்கு நாள் பெருகி வரும் அளவிலா மக்கள் தொகைக்கு ஏற்ப பல அதிநவீன உள்கட்டமைப்பு புராஜெக்டுகள் இன்னும் பத்தாண்டுகளில் நிறைவேற்றி முடிக்கப்பட போவதாக அரசு தெரிவிக்கிறது.
அவற்றையயல்லாம் முடிப்பதற்கு பல கட்டுமான நிறுவனங்கள் தயாராக இருப்பதாகவும், அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெறுவதாகவும் அரசு ஏடுகள் அறிவிக்கின்றன. ஏற்கெனவே மெட்ரோ ரெயில் மூலம் சென்னையின் மையப் பகுதிகளின் தோற்றம் லேசாக மாறத் தொடங்கியிருக்கும் சென்னை கட்டுமான திட்டங்கள் மூலம் 2030க்குள் இன்னும் முற்றிலுமாக மாறி விடும் என கருதப்படுகிறது.
அப்படி முன்னெடுத்து வைத்திருக்கும் சென்னை உள் கட்டமைப்பு மேம்பாட்டு கட்டுமானத் திட்டங்களில் கீழ் கண்டவை மிக முக்கியமானவையாகும்.
1.சென்ட்ரல் ஸ்கொயர் ( எ கிரான்ட் ஹப்)
சென்னையின் முதல் முக்கிய அடையாளமான சென்னை சென்டரலின் முகம் மாறப் போகிறது. 1,54,900 சதுர மீட்டரில் எ கிரான்ட் ஹப் என்னும் பெயரில் சென்ட்ரல் ரயில்வே நிலையம் சென்ட்ரல் ஸ்கொயர் என்னும் நவீன கட்டுமான திட்டமாக உருவெடுக்க போகிறது. 3 அடுக்கு சுரங்க தளங்களில் 1000 க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்தக்கூடிய பார்க்கிங் கட்டடம், ரெயில் பயணிகளுக்கான தங்குமிடம், நகரத்தில் செல்வதற்கான பேருந்து நிறுத்தங்கள், காம்ப்ளெக்ஸ்கள் 400 கோடியில் உருவாக்கப்பட போகிறது.
மேலும் தென் மண்டல ரயில்வே அலுவகக் கட்டடமும் 33 மாடிக்கட்டடமாகக் கட்டப்பட இருக்கிறது. இது கட்டி முடிக்கப்பட்டுவிட்டால் இந்தியாவிலேயே அதிக மாடிகள் கொண்ட அரசு கட்டடமாக இது இருக்கும். இந்த அரசு கட்டடத்தில் rஷாப்பிங் மால்களும் அமைக்கப்படும்.
ஒரு நாளைக்கு ஐந்தரை லட்சம் மக்கள் பயன்படுத்தும் சென்னை சென்ட்ரல் கட்டடம் அதிநவீனமாக மாற்றப்பட்டு சர்வதேச விமான நிலைய கட்டடத்திற்கு நிகரான தோற்றத்தில் பரிமளிக்க இருக்கிறது
2.சென்னை மோனோ ரெயில் திட்டம்
நிதி அதிகம் தேவைப்படாத, இடத்தின் தேவை மிகவும் குறைவான சென்னை போன்ற நெரிசலான நகரங்களுக்கு மிகவும் ஏற்றது. சென்டர் மீடியன்களின் மீது தூண்கள் பொருத்தி அதனை பிரிகாஸ்ட் பலகங்கள் மற்றும் சிமெண்டிலான ரெயில் டிராக்கை பொருத்துவதன் மூலம் ஒரு காரில்
( பெட்டியில்) அதிகபட்சமாக 140 பேர் வரை ஏற்றிச் செல்லலாம். மோனோ ரெயிலில் டபுள் டிராக் மூலமாக ஒரு திசைக்கு 10 ஆயிரம் பேர் வரை பயன்படுத்த முடியும். 10 மோனோ ரெயில்களை ஒரே டிராக்கில் அடுத்தடுத்து விடும்போது 1 லட்சம் பேரை சுலபமாக பயன்படுத்த செய்ய முடியும் என அரசு கணக்கு சொல்கிறது.
மோனோ ரெயிலில் முன் பெட்டி, பின் பெட்டியுடன் நடு பெட்டி இணைக்கப்பட்டிருக்கும் நடுபெட்டி ஒன்றே ஒன்று பொருத்தப்பட்டிந்தால் அது மிக சிறிய மோனோ ரெயில் ஆகும். இந்த ரெயிலின் நீளம் 10 மீ ஆகும். இதுவே அதிக பட்சம் 33 முதல் 54 பேர் வரை பயணிக்கலாம். இதுவே அதிகபட்சம் 5 நடுபெட்டிகள் இணைக்கப்பட்டால் இந்த ரெயிலின் நீளம் 50 மீ ஆகும். 284 முதல் 380 பேர் வரை பயணிக்கலாம். இது அதிகபட்சம் 90 கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடியது. ஒரு எலக்ட்டிரிக் பேருந்தில் பயணம் செய்வதைப் போன்ற இந்த மோனோ ரெயில் பயணத்திற்கு பேருந்து போல சாலை தேவையில்லை. சாலையை அடைத்துக் கொள்ளும் பேருந்து நிறுத்தங்களும் தேவையில்லை. மேலும் மெட்ரோ ரெயில் போல அதிக பொருட் செலவும் தேவைப்படாது. பொதுமக்கள் இடத்தை வாங்கவும் கையகப்படுத்தவும் தேவையில்லை. இரு கட்டட இடைவெளிகளில் கூட மோனோ ரெயில் பாதையை அமைக்க முடியும். மிகவும் பாதுகாப்பானதும் கூட.
உலக அளவில் 178 மோனோரெயில் திட்டங்கள் உள்ளன. ஜப்பானில் 10 மோனோரெயில் திட்டங்கள் உள்ளன. ஒசாகாவில் 28. கிமீ தூரத்தில் உலகின் மிக நீளமான மோனோ ரெயில் பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் முதன் முறையாக மும்பையில் மோனோ ரெயில் திட்டம் கட்டுமானப்பணிகள் நான்கு ஆண்டுகளாக நடந்து வருகிறது. 730 பஸ் ரூட்கள் உடைய சென்னையில் தலா 25 கிமீ தூரம் என்றாலும் 18.250 கிமி சாலைகள் இருப்பதால், சாலைகளுக்கும் சென்டர் மீடியனுக்கும் பஞ்சமில்லாத சென்னையில் வரக்கூடிய மோனோ ரெயில் திட்டம் மிகவும் வரவேற்க கூடியதாகும். போக்குவரத்து நெரிசலை கணிசமாகக் குறைக்கும்.
மோனோவுக்காக 6400 கோடி ஒதுக்கப்படுவதாக தவல். சென்னையில் முதற்கட்டமாக போரூர் டூ வடபழனி மற்றும் வேளச்சேரி டூ வண்டலூருக்கு (மொத்த0 43 கிமீ) மோனோ ரெயில் பாதைகள் போட ஒப்புதலாகி இருக்கிறது.
3. வெளிவட்ட சாலை பேஸ் 2
சென்னையின் போக்குவரத்தினை குறைப்பதில் வெளிவட்ட சாலைகள் பங்கு முக்கியமானது இப்பொது அவுட்டர் ரிங் ரோடு பேஸ் 2 வை பாதி கட்டி முடித்து இருக்கிறது.
1400 கோடி ரூபாயில் இந்த மெகா புராஜெக்ட் மீஞ்சூர் டூ வண்டலூர் இடையேயான 63 கிமீ பாதையை அமைக்கப்பட்டு வருகிறது. 2016 செப்டம்பரில் முடிய வேண்டிய இந்த கட்டுமான புராஜெக்ட் இன்னும்சில மாதங்களில் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது நிறைவுப் பெற்று விட்டால், கொல்கத்தாவிலிருந்து தெற்கு தமிழகம் செல்லும் கனரக வாகனங்கள் சென்னைக்குள் நுழையாமல் இருக்கும். இதனால் சென்னையின் போக்குவரத்து நெரிசல் இன்னும் குறையும்.
4. ஸ்ரீபெரும்புதூர் சர்வதேச விமானநிலையம்
20 ஆயிரம் கோடி செலவில் புதிய விமான நிலையம் பூந்தமல்லிக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் அமைய இருக்கிறது. சென்னை மீனம்பாக்கம் தற்போது மிக நெரிசலான பகுதியாக இருப்பதால் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே இம்முடிவு எடுக்கப்பட்டாலும்., இதன் கட்டுமானப்பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. நிலம் கையகப்படுத்துதல் பணிகள் தாமதப்படுவதே இதற்கு காரணம். இருப்பினும் சென்னை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் அதிக பொருட்செலவில் மேற்கொள்ளப்பட இருக்கும் கட்டுமானத் திட்டம் இது தான்.
5. சென்னை மதுரை மெகா பஸ் டெர்மினஸ்
தென்சென்னையில் வண்ட லூர்க்கு அருகே கிளாம்பூரில் புறநகர் மெகா பேருந்து நிறுத்தம் ஒன்றை நிர்மாணிக்க உள்ளார்கள். தென் மண்டலத்திற்குச் செல்லும் அனைத்து பேருந்துகளையும், வழித்தடங்களையும் ஒருங் கிணைக்கும் இந்த பேருந்து நிலையம் அதிநவீன வசதிகளை உள்ளடக்கியதாகும். சர்வதேச விமான நிலையம் போன்ற தோற்றத்தில் இது உருவாக்கப்பட உள்ளது. இதன் கூடவே மெட்ரோ ரெயில் பாதை, ஆம்னி பஸ் நிறுத்தமும் சேர்த்து வடிவமைக்கப்பட உள்ளது.
6. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் :
முதலில் நாம் பார்த்த 5 புராஜெக்டுகளும் போக்குவரத்தைச் சேர்ந்தது. இது மக்களின் வாழ்வாதரமான குடிநீர் தேவையை தீர்த்து வைக்கக் கூடியது. காரப்பாக்கத்தை அடுத்த நெம்மேலியில் உலகிலேயே மிகப்பெரிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தமிழக அரசு உருவாக்க இருக்கிறது. ஒரு நாளைக்கு 5 லட்சம் மி.கன. அடி நீரை உற்பத்தி செய்யக்கூடிய இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. சவுதிநாளொன்றுக்கு 50 ஆயிரம் கன அடி நீரை உற்பத்தி செய்யும் அரூபா என்னும் நாடுதான் உலகின் அதிக கடல்நீரை குடிநீராக சுத்திகரிக்கும் நாடுகளில் முதன்மையாக இருந்தது,.
சென்னை மீஞ்சூர், காட்டுப்பள்ளியில் தமிழகம் தனது முதலாவது பிளான்டை 2013 இல் நிறுவிய போது அரூபாவை முஷீயடித்தது. இதனால் மாதவரம், திருவெற்றியூர், தண்டையார்பேட்டை, எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதிகளுக்கு தடையில்லா குடிநீரை அளித்து வருகிறது
இப்போது நெம்மேலியில் 5 லட்சம் கன அடி நீரை உற்பத்தி செய்ய இருக்கிறது.இதனால் சோழிங்க நல்லூர், நீலாங்கரை, துரைப்பாக்கம், வேளச்சேரி,தரமணி, அடையார், பெசண்ட் நகர் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை ஆகும் என தெரிகிறது
இந்த ஆறு திட்டங்களில் எதெல்லாம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும், அல்லது எதெல்லாம் சென்னை மதுரவாயல் டூ துறைமுகச் சாலை போல கிடப்பில் போடப்படும் என்பதெல்லாம் ஆட்சியாளர்களுக்கே வெளிச்சம்.
என்னதான் ஒரு பக்கம் ஊழல், மெத்தனம், அலட்சியம் என அரசுப்பணிகள் ஆமை வேகத்தில் இயங்கினாலும் மேற்சொன்ன பணிகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவடைந்தே தீரும் என்பது காலத்தின் கட்டாயம்.
-------------———————————
2021, ஜனவரி மாத, பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து ..
பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற: 88255 77291
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067301
|