சென்னை, ரெட் ஹில்ஸ் அருகே நண்பர் ஒருவர் வீட்டுக்கு போனபோது இந்த மனை தற்செயலாக கண்னில் பட்டது. மனை என்று சொல்ல முடியாது. ஏரி. அதற்குள் மனை போட்டு மனசாட்சி இல்லாமல் அதற்கு வெற்றி நகர் என பெயர் வைத்திருக்கிறார்கள். நவம்பர் மாத மழையில் அந்த இடம் அதன் இருப்பை நமக்கு சொல்லி விட்டது. நீர் வற்றிய பிறகு.. கோடையில் இது மறுபடியும் மனை ஆகிவிடும்.சென்னை போன்ற வெளியிடங்களில் வசிப்பவர்களை அந்தச் சமயத்தில் கம்பெனி வாகனம் கொண்டு அழைத்து வந்து காட்டி ஏமாற்றி விற்றுவிடுவார்கள்.
பொதுவாக லேஅவுட் புரமோட்டர்கள் விளம்பரங்கள் டெலிமார்க்கெட்டீங் கால்கள், மழைக்காலத்தில் குறைவாக இருப்பதற்கு இந்த திடீர் ஏரிகள் தான் காரணம். நியாயமாக இந்த இடத்திற்கு மனை அப்ரூவல் கொடுக்கும் டிடிசிபி அதிகாரி புண்ணியவான்கள் மழைக்காலத்தில் ஒரு டைரக்ட் விசிட் அடிக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதெல்லாம் செய்ய மாட்டார்கள். பொதுமக்கள் நீங்களாவது
மனை வாங்கும் முன் அந்த இடத்தை மழை. வெள்ளக் காலங்களில் ஒரு எட்டு போய் பார்த்து விட்டு புக்கிங் செய்யுங்கள்.
-------------———————————
2021, ஜனவரி மாத, பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து ..
பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற: 88255 77291
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2073022
|