சென்னை உள்ளிட்ட இந்தியாவில் குப்பைகளை வசதியாக கூவம் போன்ற ஆற்றில் கொட்டி விடுவார்கள் அல்லது எரித்து விட்டு வானத்தை குப்பை ஆக்குவார்கள். வெளிநாடுகளில் என்ன செய்கிறார்கள் என பார்த்தால் குப்பைகளை பிரித்து உரம் (மக்கும் குப்பை) மற்றும் கட்டுமானப் பொருட்கள் (மக்காத குப்பை) மறுஉருவாக்கம் செய்வதற்கு பிளான்டுகளை வைத்து அதை ஒரு மிகப்பெரிய லாபம் கொழிக்கும் துறையாக மாற்றுகிறார்கள்.
துபாயில் ஒரு நாளைக்கு 12 ஆயிரம் டன் குப்பைகள் கையாளப்படுகின்றன. ஏற்கெனவே இருக்கும் சிறுசிறு குப்பை பிளான்டுகளுக்கு பதிலாக ஒரு மெகா குப்பை ரி ஸ்டோரேஷன் பிளான்டை
( 6 ஆயிரம் டன் குப்பைகளை கையாளும்படி) ஜப்பான் உதவியுடன் (Hitachi Zosen Innova (HZI) ) உருவாக்கி வருகிறது.
இந்தக் குப்பைகளில் இருந்து பெறப்படும் பயோ வாயு மூலம் தினம் 200 மெகா வாட் அளவில் எரிசக்தியாக மாற்றி தயாரிக்கப்பட்டு. அதை ஒன்னரை லட்சம் வீடுகளுக்கு மின் வினியோகம் செய்யப் போகிறார்களாம். 2022இல் இதை முழுதும் கட்டி முடித்து விடுவார்களாம். இந்த கட்டுமானப்பணிகளில் பெரும்பாலும் ஈடுபட்டிருப்பவர்கள் நிறைய பேர் இந்தியர்கள்.அதிலும் முக்கால்வாசி தமிழர்கள். (இப்போது தெரிகிறதா? துபாயிலிருந்து திரும்பி இங்கே வருவோர் எல்லாம் நம் ஊரை ஏன் குறை சொல்கிறார்கள் என்று?)
வீணாகும் குப்பையிலிருந்து மின்சாரம் எடுக்கும் தொழிலகத்தில் இது தான் உலகின் மிகப்பெரிய கட்டு
மானமாகும். இதற்காக 1.2 மில்லியன் டன் செலவழிக்கப் போகிறார்கள்.
அதுசரி! துபாயில் தான் நம்மை போல குப்பைகளைக் கொட்டுவதற்கு நதிகள் இல்லையே? வெரி சேட் டூ துபாய்...
2021, ஜனவரி மாத, பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து ..
பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற: 8825577291