கட்டுமான பத்திரிகை என்றால் இனி 3டி பிரிண்டிங் தொழில் நுட்பம் பற்றிய செய்திகள் தவிர்க்க முடியாது போல் இருக்கிறது. அந்த அளவிற்கு வாராவாரம் ஏதேனும் ஒரு செய்தி அல்லது கண்டுபிடிப்பு 3டி பிரிண்டிங் தொழில் நுட்பம் பற்றி வெளியாகிக் கொண்டே இருக்கிறது.
ஆப்ரிக்காவில் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பம் பயன்படுத்தி உலகிலேயே முதல் தடவையாக
பள்ளிக்கூடம் ஒன்றை வடிவமைத்திருக்கிறார்கள். (இதற்கு முன் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் தனிவீடு, ஜி + 2 தள வீடு, நடைபாலம் ஆகியன இதே முறையில் கட்டப்பட்டிருக்கிறது).
ஆப்ரிக்காவில் மலாவி என்னும் கிராமத்தில் சிடிசி என்னும் இங்கிலாந்து ஆர்க்கிடெக்சர் நிறுவனம் இதை இலவசமாக நிறுவி தந்திருக்கிறது. இதை கட்டி முடிக்க, அதாவது பிரிண்ட் செய்து முடிக்க 18 மணி நேரம் மட்டுமே ஆனதாம்.
எதிர்காலத்தில் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் 3டி பிரிண்டிங் தொழிற்நுட்பத்தினை பயன்படுத்தி 36,000 பள்ளி அறைகளைக் கட்டப் போவதாக அறிவித்துள்ள சிடிசி நிறுவனம், அதற்கு முன்னோட்டமாகவும்
மாடல் பள்ளியாகவும் தான் இந்த புராஜெக்டை செய்து முடித்திருக்கிறது.
பள்ளிச்சுவர்கள் என்பதால் கூடுதல் கவனம் & உறுதி செலுத்தி இருக்கிறோம்.அதாவது வீட்டுச்சுவர்கள் கட்ட 12 மணி நேரம் என்றால் பள்ளிச் சுவர்கள் கட்ட 18 மணி நேரம் ஆனது என தெரிவித்திருக்கிறார்கள் சிடிசி உயர் அதிகாரிகள்.
அப்படியே 3டி பிரிண்டிங் தொழில்நுட்பம் பற்றி இன்னொரு புதிய செய்தி உலகின் புகழ்பெற்ற இங்கிலாந்து நிறுவனமான கார்,தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் தங்கள் காரின் உதிரிபாகங்களை 3டி பிரிண்டிங் முறையில் தயாரிக்கக் கூடிய தொழிற்கூடத்தை துவங்கியிருக்கிறது. 15 ஆயிரம் ச.அடியில் 24 பிரிண்டர்கள் கொண்டு பாலிமர், மெட்டல் கலந்த உதிரிபாகங்களை தயாரிக்க துவங்கி இருக்கிறது, முதல்கட்டமாக கூலிங் டக்ட்களை 3டி பிரிண்டிங் முறையில் தயாரிக்கிறார்கள். கட்டுமானத்துறை மட்டுமன்றி ஆட்டோமொபைல் துறையிலும் 3டி பிரிண்டிங் டெக்னாலஜி நுழைந்திருக்கிறது.
2021, ஜனவரி மாத, பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து ..
பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற: 8825577291