விளையாட்டுத் துறையும் கட்டுமானத் துறையும் ஒன்றுக் கொன்று நெருங்கிய தொடர்புடையவை. சொல்லப்போனால் விளையாட்டின் மேம்பாடு என்பதே அதன் கட்டமைப்பு மேம்பாட்டைப் பொறுத்ததாகும். சமீபத்தில் இத்தாலியில் திறக்கப்பட்ட ஒரு டென்னிஸ் டவட் கட்டடம் கூட அப்படிப்பட்ட கட்டடத்துறை மேம்பாடாகும்.
இத்தாலியின் காஸ்ட்லியான ரியல் எஸ்டேட் பகுதியன டுரின் என்னும் சிட்டியில் 8 டென்னிஸ் கோர்டுகள் கட்டுவதென்றால் இயல்கின்ற காரியமா? ஆனால் கன்ஸ்ட்ரக்rன் டெக்னாலஜி அதை சாத்தியமாக்கி இருக்கிறது.
ஆம் டென்னிஸ் கோர்ட் அமைக்க வேண்டுமென்றால் 3000 ச.அடி யாவது தேவை சுற்றிலும் போதுமான இடம் விட்டால், 4000 ச.அடி வரை தேவை. டென்னிஸ் பூமியான இத்தாலி, டுரின் நகரில் உள்ள டென்னிஸ் வீரர்கள், பழகுநர்கள் சிட்டியை விட்டு வெகு தொலைவு போக வேண்டியதிருந்த அவசியம் காரணமாக., சிட்டிக்குள்ளாகவே ஒன்றுக்கு மேற்பட்ட டென்னிஸ் கோர்ட் அமைக்க முடிவு செய்தது. அந்த ஊரின் டென்னிஸ் பயிலரங்கு நிறுவனம். கிடைத்த இடத்தில் அடுக்கு மாடி வீடு போல அடுக்கு மாடி முறையில் டென்னிஸ் கோர்ட்டுகளை அமைக்க ஆலோசனை சொன்னது இத்தாலியின் மிகச்சிறந்த ஆர்க்கிடெக்ட் நிறுவனமான சிஆர்ஏ கார்லோ - ராதி அசோசியேட்ஸ், (CRA-Carlo Ratti Associati) இதன் நிறுவனர் இதாலோ ரோதா இத்தாலியின் புகழ்மிக்க கட்டடங்களை உருவாக்கியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னது அடுக்குமாடி முறையில் டென்னிஸ் கோர்டுகளா? என முதலில் நிறுவனம் தயங்கினாலும்,
ரோதாவின் ஆலோசனை படி அமைக்க ஒத்துக்கொண்டது. உலகில் செங்குத்து முறையில் அமைகப்பட்ட விளையாட்டு அரங்கம் இதுதான். செவ்வக வடிவிலான தனித்தனிப் பெட்டிகள் கொண்ட மாடுலர் ஹவுஸ் போல இது 8 ஸ்டீல் பெட்டிகள் கொண்டு அமைக்கப்பட்டு பொருத்தப் பட்டிருக்கிறது. ஒவ்வொன்றும் 100 அடி நீளம் 50 அடி அகலம் உடையது. (டென்னிஸ் விளையாட 78 அடி நீளம் 36 அடி அகலம் போது மானதாகும்.
சரி உயரம்..? அது தான் முக்கியம். இது பயிற்சி செய்ய மட்டும் தான் என்பதால் 11 மீ வரை கூரை வைத்திருக்கிறார்கள். போட்டிகள் நடத்த இங்கு பரிசீலிக்கப்படுவதில்லை என்றாலும் உள்ளூர் ஆரம்ப நிலைப் போட்டிகள் நடத்திக் கொள்ளும் அளவிற்கு தரமானதாக இருக்கிறது,
தலா 11மீ உயரமுடைய இரும்பு பெட்டிகள் கொண்டு 8 அடுக்குகளை கிரேன் உதவியுடன் பொருத்தி இருக்கிறார்கள். ஒட்டு மொத்த கட்டடத்தின் உயரம் 90 மீ (300 அடி) வரை வருகிறது. இரு புறமும் உறுதியான கண்ணாடி பொருத்தப்பட்டிக்கிறது . பெட்டிகள் சிக் சாக் முறையில் மாறி மாற்றி அமைகப்படுள்ளதால்; கிடைக்கும் இருபுற வெளிபரப்பில் ,ஒரு புறம் மேல் தளம் போய் வர லிப்ஃட் ‘ படிக்கட்டுகளும் இன்னொரு புறம் இலைப்பாற இடமும், பாலகனியும் வடிவமைத்திருக்கிறார்கள். இந்த ஒட்டுமொத்த டவரையும் தேவையான இடத்திற்கு தனித்தனியே பிரித்து நகர்த்திக்கொண்டு போகலாம் என்பது தான் ஹைலைட்.
டென்னிஸ் கோர்டுகள் போல அடுக்கு தளத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம் கூட கட்டலாம்.. ஆனால் தோனி, பாண்ட்யா மாதிரி வீரர்களுக்கு தடை போட வேண்டும்.
2021, ஜனவரி மாத, பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து ..
பில்டர்ஸ் லைன் இதழினை ஆன்லைனில் படிக்க :
பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற: 8825577291