கட்டடங்கள் அமைப்பதற்கு முன்னர் மண்ணின் தரத்தை ஆராய்வது மிகவும் முக்கியமான ஒன்று மண்ணை பரிசோதனை செய்ததான் கட்டடங்களின் Foundation எனப்படும் அடித்தளத்தை அமைப்பது எவ்வாறு என்பது ஆராய்ந்து அமைக்க வேண்டும்.
மண்ணின் தரத்தை ஆராயப் பயன்படுத்தப்படும் பொதுவான முறைகள்;
1. ஈரம் உள்ளடக்க சோதனை
2. மண்ணின் குறிப்பிட்ட அடர்த்தித்தன்மை சோதனை
3. மண்ணின் உலர் அடர்த்தி காணுதல்,
4. மண்ணின் கச்சிதத்தன்மை சோதனை இது போன்ற முறைகளைப் பயன்படுத்தி மண்ணின் தரத்தை ஆராய்ந்து கொள்ளலாம்.
மண்ணின் தரத்தை ஆராய்வதற்கு தனியாக மண் சோதனையாளர்கள் உள்ளனர் அவர்களை அழைத்து நமது இடத்தின் மண்ணை ஆராய வைக்கலாம். அவர்கள் இத்துறையில் சிறந்து விளங்குபவர்கள் அவர்களுக்கு எந்த இடத்தில் எந்த மாதிரியான சோதனையை மேற்கொள்வது சிறந்தது என்பதை அவர்கள் நமக்கு காண்பிப்பார்கள்.
அவர்கள் மண் சோதனையை செய்ய Augor Boring சோதனை எனப்படும் பொதுவான சோதனையை நிலத்தின் 20 அடி ஆழம் வரை சென்று மண் மாதிரியை எடுப்பார்கள் நிலத்தின் 5 அடி, 10 அடி, 15அடி, 20 அடி, அழத்தில் மண் மாதிரியை SPT (Standard Penetarion Test) spoom என்கிற கருவியின் உதவியோடு எடுப்பார்கள்.
இந்த Augor Boring சோதனையை 700 சதுர அடிக்கு ஒன்று என்ற விகிதத்தில் செய்து மண்ணின் தரத்தை ஆராய்வார்கள்.
Augor Boring சோதனைக்கு வேவைப்படும் கருவிகள்
1. Casing Pipes
2. Spt Rod And Spt Spoon
3. Spt Standard Weight
4. Chain Wrench
5. Augor Bore
இந்த சோதனை செய்த மண் மாதிரியை எடுத்து ஆய்வுக் கூடத்தில் வைத்து மண்ணின் தரத்தை ஆராய்வார்கள். சிறிய கட்டடத்திற்கு இவ்வாறான சோதனைகள் தேவைப்படாது. அவ்வாறான இடத்தின் தன்மையை ஆராய நாம் 3 அடி மு 3 அடி அகலம் x நீளத்தில் 5 அடி ஆழத்தில் குழி வெட்டி மண்ணின் தன்மையை மதிப்பிடு செய்யலாம். அல்லது மண் சோதனையாளர்களை அழைத்து ஆலோசிக்கலாம். பெரிய கட்டடங்கள் கட்டுவதற்கு அதாவது G+2, G+3 அதற்கு மேல் கட்டடங்கள் ஏற்ஷீச் செல்லும் போது நமக்க இவ்வாறாக விதிமுறைகள் முக்கியம்.
மண் பரிசோதனை செய்வதன் பலன்கள்:
நாம் புதிதாக கட்டடம் கட்டுவதற்கு முன்னால் இந்த மாதிரியான சோதனைகளை செய்யாவிட்டால் தேவைப்படும் அளவுகளை மீறி கட்டடத்தின் அடித்தளத்துக்கு அளவுகள் பெரிதாக கொடுத்து அதிக பண இழப்பீடும் நேரலாம் ஆகையால் மண் பரிசோதனை செய்து அளவுகள் சரியானதாக வடிவமைத்து பணத்தை சேமிக்கலாம். நாம் இவ்வாறான விதிமுறைகளை செய்து மண்ணின் தரத்தை ஆராய்ந்து அதற்கேற்ப வலுவான அடித்தளம் அமைத்து கட்டடங்கள் கட்டலாம்.
கட்டடங்களின் விபத்து அதிகமாகிக் கொண்டிருக்க காரணம் பலவாறு வகைப்படுத்தலாம் அதில் முதன்மையாக அடிதளத்தை ஆராயாமல் கட்டடங்களை மேலே ஏற்றிச் செல்வது கட்டடங்களின் விபத்துக்கு முக்கியமானதாக ஆகிவிடுகிறது.
---------------------------------------------------------------------
2020, டிசம்பர் மாத , பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து.
இதுபோன்ற பயனுள்ள கட்டுமானத்துறை தகவல்களை /செய்திகளை அறிந்து கொள்ள :
பில்டர்ஸ் லைன் இதழினை ஆன்லைனில் படிக்க :
பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற:
Call: 8825577291