கட்டுமானங்கள் தரமானதாக உருவாக்க தரமான கட்டுமானப் பொருள்கள் மட்டும் இருந்து பலனில்லை. நல்ல பயிற்சி பெற்ற தரமான கட்டடத் தொழிலாளர்களும் அவசியம் தேவை என்பதை நாம் பலசமயம் கேட்டிருக்கிறோம். சமீபத்தில் ஹிமா அன்சூ என்னும் சீன கட்டுமான நிறுவனம் ஒன்று உலகளாவிய கட்டுமானத்துறையில், எந்த நாட்டைச் சேர்ந்த கட்டு மானத் தொழிலாளர்கள் பயிற்சியும் திறனும் மிக்கவர்கள்? என்னும் மிகப் பிரம்மாண்டமான ஆய்வை நடத்தியது.
லண்டனைச் சேர்ந்த School of Oriental and African Studies (SOAS) என்னும் அமைப்புடன் சேர்ந்து அந்த ஆய்வை நடத்தியது ஏறத்தாழ 52 நாடுகளில் 470 கட்டு மானப் பணியிடங்களில் 69 நாட்டைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களிடம் இந்த ஆய்வு சர்வே “மதிப்பீடு அறிக்கை”யாகவும்., அவர்கள் பணியாற்றும் அரசு, தனியார் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளிடையேயும் விருப்பு வெறுப்பின்றி நடத்தப்பட்டது.
உலகின் மிகத் திறமையான பயிற்சி பெற்ற பணி ஈடுபாட்டுடன் பணியாற்றக் கூடிய, சிறந்த தொழில்நுட்ப அறிவைக் கொன்ட கட்டுமானத் தொழிலாளர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்? என்னும் மாபெரும் தேடலைக் கண்டறிய இந்த ஆய்வுகள் 4 ஆண்டுகளாக நடைபெற்றன. சென்ற ஜூன் மாதம் வெளியாகி இருக்க வேண்டிய இந்த ஆய்வுகள் கொரானா நோய்த்தொற்றால் தாமதமாகி அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகி இருக்கின்றன.
122 அதிகாரபூர்வ ஆய்வு அதிகாரிகளும் 350 தன்னார் வலர்களும் இந்த மெகா ஆய்வில் ஈடுபட்டு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். பல்வேறு வகைப் பாடுகளில் தொழிலாளர்களை தரம் பிரித்து அறிவித்திருக்கிறார்கள். அதன்படி.,
உலகின் பணித்திறன் வாய்ந்த தொழிலாளர்கள் நிறைத்திருக்கும் நாடு : எத்தியோப்பியா,
கட்டுமானத் துறையில் உள்ள முக்கிய பணிகளில் பயிற்சி பெற்ற ஸ்கில்டு தொழிலாளர்கள் அதிகம் உள்ள நாடு : அல்ஜீரியா.
உலகின் பணி ஈடுபாடு மிக்க தொழிலாளர்கள் நிறைந்திருக்கும் நாடு : பிலிப்பைன்ஸ்,
உலகின் அதிக ஒர்க் அவுட் - புட் அளிக்கக்கூடிய தொழிலாளர்கள் நிறைந்த்திருக்கும் நாடு : மியான்மர்
அதிகமாக வம்பு, தும்புகள் போகாமல் ஒழுக்கத்துடன் பணி செய்யும் தொழிலாளர்கள் நிறைந்திருக்கும் நாடு : பங்களாதேஷ்
சமீபத்திய தொழிற்நுட்பங்களை தெரிந்து கொண்டு பணியாற்றும் படித்த தொழிலாளர்கள் நிறைந்திருக்கும் நாடு : சீனா
நவீன இயந்திரங்கள் & சாதனங்களை கையாளத் தெரிந்த தொழிலாளர்கள் நிறைந்திருக்கும் நாடு : சீனா
பாதுகாப்பு விதிகளின்படி பணிஇடத்தில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்கள் நிறைந்திருக்கும் நாடு : லாவோஸ்
கட்டுமானப் பொருட்களை வீணடிக்காமல் பணியாற்றக்கூடிய தொழிலாளர்கள் நிறைந்திருக்கும் நாடு : பங்களாதேஷ்.
என்றெல்லாம் அதில் சொல்லப்படிருக்கிறது. அதுசரி இந்தியா?
கட்டுமானப்பணி தொடர்பாக கணினி, மென்பொருள் கையாளத் தெரிந்தவர்கள் நிறைந்திருக்கும் நாடு : இந்தியா என அந்த ஆய்வில் விரிவாக கூறப்பட்டிருக்கிறது
-------------------------------------------------------------------------------------------------------
2020, டிசம்பர் மாத , பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து.
பில்டர்ஸ் லைன் இதழினை ஆன்லைனில் படிக்க :
பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற:
Call: 8825577291