கட்டங்களில் நூலிழை விரிகல்கள் - நுண்விரிசல்கள் சுருக்க விரிசல்கள் இயல்பாகவே ஏற்படுகின்றன. குறிப்பாக சுவர் பூச்சு வேலைகளில் இந்த நுண்விரிசல்கள் மிகுதியாக ஏற்படுவதைக் காணலாம். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
1. பயன்படுத்தும் சிமெண்டின் வகை ஓபிசி அல்லது பிபிசி,
2. நீராற்றுதலின் தரமும் நாட்களும் இதைத் தவிர சுவர்ப்பூச்சு வேலையை தேய்ப்பதும் விரிசல்கள் ஏற்படக் காரணம் என நிச்சயமாகச் சொல்லலாம்.
ஓபிசி 53 தரச் சிமெண்டில் நுண்மை திகுதி :
வெளியிடும் வெப்பமும் மிகுதி. எனவெ Shrinkage Cracks எனப்படும் சுருக்க விரிசல்கள் மேற்பரப்பில் ஏற்படுகின்றன. மாறாக பிபிசி சிமெண்டின் வெளியிடப்படும் வெப்பம் குறைவாகவே இருக்கும். எனவே ஏற்படும் சுருக்க விரிசல்கள் குறைவாகவே இருக்கும். இதற்கு ஏற்ப 10 முதல் 14 நாட்கள் வரை நீராற்றல் சுருக்கவிரிசல்களைப் பெரும்பாலும் குறைக்கலாம்.
எனவே பூச்சு வேலைக்கு பிபிசி சிமெண்ட், அழுத்தித் தேய்க்காமை, 10 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை நீராற்றுதல் இருந்தால் சுருக்க விரிசல் ஏற்படாது. மேலும் சுருக்க விரிசல்கள் பூச்சுப்பரப்பூ தரை
மீது ஏற்படாமலிருக்க Recron 3S எனப்படும் செயற்கையிழை நெகிழத் துண்டுகளைக் கலந்து பூச்சு வேலையை மேற்கொள்ளலாம்.