இந்த ஆண்டின் இணையற்ற இன்டிரியர் பொருட்கள் யகூரா வால்ஃபிட், யகூரா இன்டிரியர் பிலிம்

23 ஜனவரி 2024   05:30 AM 07 ஜனவரி 2021   06:33 PM


இந்த ஆண்டின் இணையற்ற இன்டிரியர் பொருட்கள்
யகூரா வால்ஃபிட், யகூரா இன்டிரியர் பிலிம்
( பெயின்ட், வால் பேப்பர், வார்னீஷ், சன்மைக்கா, மார்பிள், கிரானைட் உள்ளிட்ட 30 பொருட்களுக்கு மாற்று இது...)
 
யகூரா இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (திருச்சி) இன்டிரியர் அலங்காரப் பொருட்களில் மேலும் ஒரு படியாக வால் பேப்பர்கள், பெயின்ட் ஆகிய பொருட்களுக்கு மாற்றாக யகூரா ஸ்டிக்கி வால்ஷீட் என்னும் பொருளையும் சன்மைகா, வினீர் ஷீட், அக்ரிலிக் ஷீட், வால் டைல்/ மார்பிள், வார்னீஷ் , வுட் பெயின்ட் உள்ளிட்ட பல பொருட்களுக்கு மாற்றாக யகூரா இன்டிரியர் ஃபிலிம் என்னும் பொருளையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தி அசத்தியிருக்கிறது..
 
கட்டடச் சுவர்களில் பதிக்கக்கூடிய டைல்கள், மார்பிள் கற்கள் மற்றும் கிரானைட் ஆகியவற்றிற்கு மாற்றான பொருள் என்கிற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி திருச்சியைச் சேர்ந்த யகூரா நிறுவனத்தின் யகூரா ஸ்டிக்கர் டைல்ஸ் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமாகி இன்று தமிழக கட்டுமானத் துறையில் மட்டுமன்றி உலகம் முழுக்க இதன் பயன்பாடு அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
ஃபோம் டைல்ஸ்கள் பற்றியும், நிறுவனத்தின் புதிய வரவான யகூரா ஸ்டிக்கி வால்~Pட்ஸ், யகூரா இண்டிரியர் ஃபிலிம் பற்றியும் விரிவாக உரையாட யகூரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்
திரு. பிரபு அவர்களைச் சந்தித்து இந்த புதிய இன்னோவேடிவ் ஐடியா பற்றி கேட்டோம்.
 
" எங்கள் வர்த்தகம் சிங்கப்பூரிலிருந்து கொரியா, ஜப்பான், வளைகுடா நாடுகளுடன் இருந்து வந்தது. அப்போதுதான் உலக அளவில் டி.ஐ.ஒய் (அதாவது டூ இட் யுவர்செல்ஃப் ) பொருட்கள் அதிகமாக தயாரிக்கப்படுவதை நான் அறிந்தேன். அதுதான் முக்கியமான திருப்புமுனை. நாம் இங்கே தற்சார்பு என சொல்வோமே அதைப் போல உலக அளவில் தங்கள் வேலைகளை தாங்களே பார்த்துக் கொள்வது மிகப் பிரபலம். பிளம்பிங், எலக்டிரிக்கல், ஏன் வீட்டைக் கூட அவர்களே வடிவமைத்துக் கட்டிக் கொள்வார்கள்.
அந்த நாடுகளில் வேலையாட்கள் பற்றாக்குறையாக இருப்பதும், வேலையாட்கள் கிடைத்தாலும் அதிகமாக சம்பளம் கேட்பதால் தங்கள் வேலையை தாங்களே செய்து கொள்வார்கள்.
 
அப்போதுதான் நான் அறைச்சுவர்களை அலங்கரிக்க கூடிய பொருட்களை நாம் ஏன் சிம்பிளாக தயாரிக்க கூடாது? என நினைத்தேன் . அதன் முதல் கட்டம்தான் மார்பிள், டைல்ஸ்,கிரானடுகளுக்கு மாற்றான ஃபோம் டைல்கள். அதிநவீன முறையில் 25 மிமீ தடிமன் உடைய பாலி எத்திலின் இயந்திரங்கள் மூலம் 10மி..மீயாக அழுத்தப்பட்டு, உறுதி கூட்டப்பட்டு, பல வண்ணங்கள், டிசைன்கள்,அளவுகளில் கொரியாவில் உள்ள அதிநவீன தொழிற்கூடங்களில் தயாரிக்க துவங்கினேன்.
 
அதை சிங்கப்பூர் ஹாங்காங் அமெரிக்கா இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற 20 நாடுகளில் ஏற்றுமதி செய்தேன் 3 ஆண்டுகளுக்கு முன்பு இதெல்லாம் 2015லியே நடந்தது. அதன் பின் 2017 இல் நான் இந்தியாவிற்கு திரும்பினேன். இங்கும் ஃபோம் டைல்களை சந்தைக்கு கொண்டு வந்தேன். இப்போது யகூரா ஃபோம் டைல்ஸ் இன்று கட்டுநர்கள், பில்டர்கள், பொதுமக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது".
 
உங்கள் நிறுவனம் இப்போது யகூரா ஸ்டிக்கி வால் ஷீட் மற்றும் யகூரா ஆர்கிடெக்சர் இண்டிரிய ‡பிலிம் பற்றி.
 
'யகூரா ஸ்டிக்கி வால்~ஷீட் என்பது இன்டீரியர் நிபுணர்களுக்கு மிகவும் உதவக்கூடியது. பெயிண்ட் மற்றும் வழக்கமான பாரம்பரிய வால்பேப்பர்க்கு மாற்றாகவும் யகூரா ஸ்டிக்கி வால் ~ஷீட்டினை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். உங்கள் வீடு அல்லது அலுவலகம் ஆகியவற்றின் உட்புறச் சுவர்களின் மேற்பரப்பு எத்தகையதாக இருந்தாலும் எந்த வகை கட்டுமானமாக இருந்தாலும் யகூரா ஸ்டிக்கி வால்~ஷீட்டை நீங்கள் பயன்படுத்த முடியும்
 
இதற்கென நீங்கள் விசேஷமான எந்த முன் தயாரிப்பு வேலைகளை செய்ய வேண்டியதில்லை.
சிமெண்ட் கலவை கொண்டு சுவரின் மேற் பரப்பை பூசிய பிறகு பட்டி பிரைமர் தடவி விட்டு, அதன் பின்பு வழக்கமாக பெயிண்ட் அடிப்பதற்கு பதிலாக யகூரா ஸ்டிக்கி வால் ~ஷீட்டை நீங்கள் ஓட்டும்போது, அச்சு அசலான பெயிண்டிங் தோற்றத்தில் கண்ணைக் கவரக்கூடிய பல விதமான வண்ணங்களில் டிசைன்களில் உங்கள் சுவர் அற்புதமான தோற்றத்தில் காட்சியளிக்கும்.
 
பொதுவாக பெயிண்ட் என்றால் அது பிளைனாகத்தான் இருக்கும். ஆனால், யகூரா ஸ்டிக்கி வால்~ஷீட் கொண்டு நீங்கள் சுவரை அலங்கரிக்கும் போது ஃபினிஷிங் டெக்ஸர் லக்சரி போன்ற டிசைன்களில் உங்கள் சுவரை அலங்கரிக்க முடியும். இதனால் உங்களுக்கு பெயிண்ட் செலவு, தின்னர் செலவு மிச்சமாகிறது. மனித நேரம் எக்கச்சக்கமாக மிச்சமாகிறது. அதேபோல ஆட்களின் கூலி என்பது இங்கே அறவே தவிர்க்கப்படுகிறது.
 
மிக வேகமாக புராஜெக்ட் செய்யக்கூடிய பில்டர்களுக்கு யகூரா ஸ்டிக்கி வால் ஷீட் தான் ஒரே சாய்ஸாக இருக்கப் போகிறது. மேலும், வழக்கமாக பெயிண்ட் அடிக்கும்போது அதிகபட்சம் உங்களுக்கு 10 ஆண்டுகள் வரை உத்தரவாதம் கிடைக்கும். அதுவும் நீங்கள் தரமான பெயிண்டை அடித்தால் தான். ஆனால் யகூரா ஸ்டிக்கி வால்~ஷீட் நீங்கள் சுவரில் ஒட்டுவதால் பெயிண்டிங்கை விட பல மடங்கு அதிக கண்கவர் தோற்றத்தை உங்களுக்கு தருவதுடன் 15 ஆண்டுகள் வரை எந்தவித பாதிப்பும் இன்றி இருக்கும்.
 
அதன் பிறகு உங்களுக்கு வேறு நிறத்தில், வேறு டிசைனில் சுவர் அலங்காரம் வேண்டுமென்றால் இந்த ஸ்டிக்கி வால் ஷீட்டை மிக எளிதாக கழற்றி, உங்களுக்கு தேவையான நிறத்தில் டிசைனில் சுவரை அலங்கரித்து கொள்ளலாம் . அது தான் யகூரா ஸ்டிக்கி வால் ஷீட்டின் ஹைலைட்டான விஷயம்.
 
ஒரு அறையின் மூன்று பக்கம் யகூரா ஸ்டிக்கி வால்ஷீட்டை ஒட்டிவிட்டு நான்காவது சுவரில் யகூரா ஃபோம் டைல்ஸ்களை ஓட்டினால், அந்த வீட்டின் தோற்றம் நட்சத்திர ஓட்டல்களுக்கு இணையாக இருக்கும் என்பது உண்மை"
யகூரா ஸ்டிக்கி வால் ஷீட் எவ்வாறு தயாரிக்கப் படுகிறது?
 
'இதுவும் ஒருவிதமான பி.இ. (பாலி எத்திலீன் ) மெட்டீரியல் தான். மெல்லியதாக இருக்கக் கூடியது 0.1 மிமி தடிமன் தான். இது எளிதில் கிழிந்து போகாது. தீப் பிடிக்காது, கணினி மூலம் நிறமும், டிசைனும் வடிவமைக்கப்பட்டு அதிநவீன முறை யில் சக்திவாய்ந்த பசையை ஒருபுறம் (பின்புறம்) நிரப்பப்பட்டு எளிதாக சுவர்பரப்பில் ஒட்டும் படி இது தயாரிக்கப்படுகிறது. இதை ஓட்டுவதற்கு மிகப்பெரிய நிபுணத்துவம் ஏதும் தேவையில்லை என்பதால் யார் வேண்டுமானாலும் யகூரா ஸ்டிக்கி வால்~ஷீட்டை பயன்படுத்த முடியும் . உங்களுக்கு ஒரே பொருள் வா~; புரூஃப்ஃ டஸ்ட் புரூஃப், வெதர் ஃபுரூஃப், ஃபையர் புரூஃப், சவுண்ட ;புரூஃப் ஆக இருக்கிறதென்றால் அது யகூரா ஸ்டிக்கி வால் ஷீட் தான். இதை விட உங்களுக்கு மிகச்சிறந்த, செலவு சிக்கனமான பெயிண்ட் ரூ வால் பேப்பர்களுக்கு ஒரு மாற்றுப்பொருளை நீங்கள் கண்டறிய முடியாது அதனால் தான் எங்களது இந்த பொருள் 20 நாடுகளுக்கு மேலாக கொரியாவிலிருந்து ஏற்றுமதி ஆகிக்கொண்டிருக்கிறது"
 
இன்னொரு பொருளாக யகூரா ஆர்கிடெக்சர் இண்டிரியர் பிலிம் பற்றி...,
'எங்களது யகூரா ஆர்கிடெக்சர் இண்டிரியர் ஃபிலிம் என்பது இங்கே பயன்படுத்தப்படும் சன்மைக்கா, வினீர் ஷீட், அக்ரிலிக் ஷீட், வால் டைல், மார்பிள், வார்னீ~;, ஷீட் பெயின்ட் உள்ளிட்ட 30 வகையான பொருட்களுக்கு மாற்றாக அமையப்போகிறது
யகூரா இண்டிரியர் ஃபிலிம் என்பது எங்களது கனவு புராடக்ட் என்றால் உங்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும். ஒரே ஒரு பொருள் அதாவது யகூரா இண்டிரியர் ஃபிலிமை பிளைவுட், எம்.டி.எ.ஃப், டிம்பர் ஆகிவற்றிலான மரப்பொருட்களின் மீதும், வினைல், ஜிப்சம், ஸ்டீல், சிமெண்ட் வால் ஆகிய பரப்புகளின் மீதும், ஸ்டீல் பர்னிச்சர்களான கட்டில், பீரோ, டோர் என அனைத்திலும் பயன்படுத்த முடியும் என்றால் அது தானே மிக உன்னதமான பொருளாக இருக்க முடியும்.
 
யகூரா இண்டிரியர் ஃபிலிம் கிச்சன் கேபினட், அலமாரி, ஷோ கேஸ், வார்ட் ரோப், வுட்
ஃபர்னிச்சர்கள் என அனைத்திற்கும் ஏற்றது. இது போன்ற பொருட்களுக்கு 120 வகையான வுட் டெஸ்சர்கள் எங்களிடம் உள்ளன. மேலும், இவற்றையே நீங்கள் சுவர்களுக்கும் பயன்படுத்தும் போது சூப்பர் லெவல் வுட் ஃபினிஷிங்; லுக் உங்களுக்கு கிடைக்கும். யகூரா இண்டிரியர் ஃபிலிம் என்பது சன்மைகாவிற்கு மட்டுமல்ல, ஏறத்தாழ 30 க்கும் மேற்பட்ட துறைகளுக்கு மாற்றுப் பொருளாக தான் வரப்போகிறது.
 
இதனை முழுவதுமாக பயன்படுத்தத் துவங்கி விட்டால் பெயிண்ட், வார்னிஷ்;, அதெசிவ், வுட் பெயிண்ட் போன்றவையெல்லாம் நிச்சயம் தேவைப்படாது. இந்த ஃபிலிமை வைத்து நீங்கள் மாடுலர் கிச்சன், கபோர்டு, பர்னிச்சர், சோபா, கட்டில் எந்தவித மரசாமான்கள் ஆக இருந்தாலும் சரி ஸ்டீல் பொருட்களாக இருந்தாலும் சரி,
 
பீரோ போன்ற ஸ்டீல் பொருளாக இருந்தாலும் சரி
வீட்டின் அல்லது அலுவலகத்தின் உட்புற சுவர்கள், சீலிங்;குகள் எதுவாக இருந்தாலும் நீங்கள் அலங்கரிக்க முடியும்.
இந்த ஃபிலிம் பொறுத்தவரை இதன் மேற்பரப்பு என்பது வழக்கமான வழவழப்பாக இல்லாமல் ஒரு மரத்தின் மேற்புறத்தை தொடுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். இதனால் உங்களுக்கு சுவராக இருந்தாலும், ஸ்டீல் மேற்பரப்பு ஆக இருந்தாலும் அச்சு அசலாக மரப் பொருட்களைப் போல உங்களுக்கு காட்சி தரும். முழுக்க முழுக்க மரத்தினால் செய்யப்பட்ட கண்கவர் தோற்றத்தை உங்களுக்கு யகூரா இண்டிர்யர் ஃபிலிம் தரும்.
இப்போது யுபிவிசி ஜன்னல்களின் பிரேம்கள் மரத்திற்கு மாற்றாக கருதப்படுகின்றன ஆனால் யுபிவிசி ஃபிரேம்களைப் பார்த்தால் ஸ்டீல் போன்ற தோற்றத்தை தருகிறது. அந்த ப்ரொஃபைலில் நீங்கள் பெயிண்ட் அடிப்பதற்கு பதிலாக இந்த இன்டீரியர் பிலிம்களை ஓட்டும்போது அச்சு அசலான மர ஜன்னல்களைப் போன்;ற தோற்றம் உங்களுக்கு கிடைக்கும். ஜன்னல்கள் மட்டுமன்றி கதவுகள்,
பீரோ, ஸ்டில் ரேக்குகள் ஆகிய அனைத்திலும் இந்த மர தோற்றத்தினைக் கொண்டு வரலாம்.
வுட் டெக்ஸர் மட்டும் என்றில்லை, இந்த ஃபிலிமில் கிரானைட், மார்பிள் டைல்ஸ்கள் டிஸைனிலும் தயாரகிறது என்பதால் உங்கள் சுவர்களுக்கும் இதை சூப்பராக பயன்படுத்த முடியும்.
 
யோசித்துப் பாருங்கள். நீங்கள் ஒரு மார்பிள் அல்லது கிரானைட் கற்களை சுவரில் பொருத்த வேண்டும் என்றால் அதற்கு நிறைய செலவாகும். மேலும், அவற்றை பொருத்துவதற்கு தேவையான சிமெண்ட் பசை, ஆட்கள் கூலி எல்லாம் கணக்குப் போட்டால் நீங்கள் பெரும் பணக்காரராக இருந்தால் தான் சுவர்களில் மார்பில் பதிக்கலாம் என்கிற எண்ணமே வரும்.
 
ஆனால் அந்த மார்பிள் லுக்கிற்கு சற்றும் குறையாமல் சொல்லப்போனால் அதிகமாகவே கண்கவர் தோற்றத்தை தரக்கூடிய ஃபிலிம் கொண்டு நீங்கள் சுவரை அலங்கரிக்கலாம். மேலும் நீங்கள் எவ்வளவுதான் மார்பில் கற்களை கொண்டு வீட்டை அலங்கரிக்கலாம் என நினைத்தால் உங்களால் ஒரு சில இடங்களில் மார்பில் கற்களை பொருத்த முடியாது அதாவது தளத்தின் சீலிங் பகுதியில் மார்பிளை பதிக்க முடியுமா? அது நிச்சயம் பாதுகாப்பானது இல்லை. ஆனால், யகூரா இண்டிரியர் ஃபிலிம் கொண்டு நீங்கள் வீட்டின் சீலிங்கை அச்சுஅசலாக மார்பிள் கற்கள் போன்ற தோற்றத்தில் அலங்கரிக்க முடியும் என்பதுதான் இதன் ஸ்பெஷாலிட்டி ஆகும்
 
இந்தியாவில் இன்டீரியர் பிலிம் அதாவது ஆர்கிடெக்சுரல் பிலிம் என்ற ஒரு சந்தைப் பொருளே இப்போதுதான் சந்தைக்கு வர ஆரம்பித்திருக்கிறது. ஆனால் அயல் நாடுகளில் பல ஆண்டுகளாகவே இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலக அளவில் ஆர்க்கிடெக்சுரல் இன்டீரியர் பிலிம்ஸ் தயாரிப்பில் சாம்சங், எல்.ஜி, ஹ{ண்டாய், 3எம் ஆகிய எம்.என்.சி நிறுவனங்கள் இயங்குகின்றன என்றால் அதிலிருந்து இந்த பொருட்களின் முக்கியத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
 
ஆனால் இவர்கள் இந்திய சந்தைக்கு அளிக்கும் விலை மிகவும் கூடுதலாகும். எனவே தான்,அதே சர்வதேச தரத்தில் இந்திய நுகர்வோர்களுக்கு கட்டுபடியாகும் கூடிய விலையில் இந்த இன்டீரியர் பிலிம்களை தயாரித்து அளிப்பது தான் யகூரா நிறுவனத்தின் நோக்கமாகும்.
 
அண்மையில் ஒரு பில்டர் தன்னுடைய 2500 ச.அடி கமர்ஷியல் பிராஜக்ட்டுக்காக இன்டிரியர் பணிகளை செய்வதற்காக அவர் வழக்கமாக பயன்படுத்தி வரக்கூடிய சன்மைக்காவிற்குப் பதிலாக எங்களது இண்டிரியர் ஃபிலிமை பயன்படுத்தினார். பயன்படுத்திய பிறகு அவர் எங்களிடம் சொன்ன வார்த்தை என்னவென்றால், 'உங்கள் இண்டிரியர் ஃபிலிமைப் பயன்படுத்தியதால், எட்டு கார்பெண்டர்கள் 13 நாட்கள் செய்கிற வேலையை இரண்டே இரண்டு ஆட்கள் 3 நாளில் செய்து விட்டார்கள்" என்பதுதான்.
 
வழக்கமான சன்மைகாப் பொருளை நீங்கள் பயன்படுத்தும் போது, சன்மைகா விலை, கார்பெண்டர்களின் கூலி அவற்றை ஒட்டுவதற்கு ஆகும் நேரம், ஒட்டுப் பசை விலை, சேதாரம் ஆகியவை எல்லாம் இதில் கிடையாது. வழக்கமான முறையில் நீங்கள் பணி செய்தால் ரூ,130 ரூபாய் ஆகும் என்றால், யகூரா இண்டிரியர் ஃபிலிமைப் பயன்படுத்தினால் ஒரு ச.அடிக்கு ரூ.70 ரூபாய் தான் ஆகும்.
 
ஒரே நேரத்தில் காசு சிக்கனம், நீடித்த உழைப்பு, கண்கவர் தோற்றம் எளிதான வேலை, ஆகிய உள்ளடக்கங்களை கொண்டதுதான் எங்கள் யகூரா இன்டீரியர் ஃபிலிம். தோலைப்போன்று மிக மெல்லியதானது. ஆனால் உறுதியானது..
இது சன்மைகா போல உடையாது. மங்காது. தீப்பிடிக்காது. நிறம் மாறாது. கீறல் விழாது. யகூரா இண்டிரியர் ஃபிலிம் இன்னும் சில ஆண்டுகளில் மிகப்பெரிய சந்தையை முழுதும் நிரப்ப காத்திருக்கிறது".
 
நீங்கள் தயாரிக்கக் கூடிய பொருட்களின் தரத்தை குறித்து..
'எங்களது முக்கிய மூன்று தயாரிப்புகளான ஃபோம் டைல்ஸ், ஸ்டிக்கி வால்ஷீட், இண்டிரியர் ஃபிலிம் ஆகிய மூன்று பொருட்களுமே கொரிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப் பட கூடியதாகும். கொரியாவில் நீங்கள் எந்த பொருளை தயாரித்து சந்தைப்படுத்தினாலும் அதற்கான அரசு தரக்கட்டுப்பாட்டு கொள்கைகள் மிகவும் கடுமையானவை. அதில் நீங்கள் தேர்வாகி சான்றிதழ் பெற்றால் தான் உலக நாடுகளில் அதை ஏற்றுமதி செய்ய முடியும். எனவே உயர்ந்த தரம், நீடித்த உழைப்பு, மனித ஆரோக்கியத்திற்கு உகந்தது என்கிற சான்றிதழ் பெற்ற தயாரிப்பு பொருட்கள் தான் எங்களது இந்த மூன்று தயாரிப்பு பொருட்களுமாகும்.
இவை அனைத்துமே 'யூசர் ஃப்ரண்ட்லி, எகோ ஃப்ரண்ட்லி, ஆன்டி பாக்டீரியா, ஆன்டி ஃபங்கஸ், நான் - டாக்ஸிக், நோ ஹெவி மெட்டல், நோ பேத் லடிக், நோ ஃபார்மடிஹைல்டு"என்கிற பல காரணினிகளுக் குட்பட்டு தயாரிக்கப்படுபவை யாகும்.
 
தமிழகத்தில் யகூரா நிறுவனத்தின் பொருட்களை எவ்வாறு சந்தை படுத்துகிறீர்கள்?
'எங்களுக்கு உலகம் முழுக்க 20 நாடுகளில் 1200 க்கும் மேற்பட்ட டீலர்கள், சப் டீலர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் 320 டீலர்கள், சப்-டீலர்கள் உள்ளனர்., இப்போது டீலர்களை விட டயர் -1 , டயர் -2 என்ற முறை யில் சப்டீலர்களை உருவாக்கி , அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எங்களது தயாரிப்புகளை சந்தைப்படுத்த இருக்கிறோம் .அதாவது ஒரு பில்டர் ஆர்கிடெக்ட், பொறியாளர் அல்லது இன்டீரியர் நிபுணர் என யாராக இருந்தாலும் எங்களிடம் குறைந்தபட்ச ரூபாய் அளவிற்கு பொருட்களை வாங்கி கொண்டு அவர்களது
 
வாடிக்கையாளர்களுக்கு அந்தப் பொருட்களைத் தந்து எளிதாக சந்தைப்படுத்தலாம். இதை நாங்கள் டயர் 1 என்கிறோம்.
இது தவிர பணத்தைக் கொடுத்து முதலீடு செய்ய முடியாதவர்கள் எங்களது பொருட்களை தமிழக கட்டுமானத்துறையில் சந்தைக்கு கொண்டு செல்வதற்கு ஏதுவாக, இளம் பொறியாளர்களை சிவில் துறை மாணவர்களை, வேலை இல்லா பட்டதாரிகளை ஊக்குவிக்க, அவர்களை தொழில் முனைவோராக மாற்ற அவர்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்பினைத் தர., அவர்களையும் எங்களது விற்பனை முகவராக டயர் ஒன்றாக இணைக்க இருக்கிறோம். இதற்கான அதிகாரபூர்வ வேலைகள் இந்த மாதம் முதல் துவங்க இருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மட்டும் 3000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும்" என்கிறார் திரு.பிரபு தன்னம்பிக்கையுடன் திரு.பிரபு அவர்கள் மணல், சிமெண்ட், ஸ்டீல், போன்ற பல கட்டுமானப் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை இந்திய கட்டுமானச் சந்தைக்கு கொண்டு வர வேண்டுமென ஆர்வமாக இருக்கிறார் அதன் முன்னோட்டம்தான் இது.
 
யகூரா டைல்ஸ், திரு. பிரபு
எண்: 397, சந்திரன் நகர், 1, டோல்கேட், திருச்சி - 621216,
பேசி : 7708915545 / 90874 87487 / 908769 8888 / 90875 42222 ,
http://yakuratiles.com/
 
 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067318