பயிற்சியுடன் கூடிய முயற்சி தான் எந்தத் துறையிலும் நம்மை ஜெயிக்க வைக்கும். போதுமான அளவிற்கு வீடுகளை கட்டி இருந்த அனுபவம் இருந்தாலும், என் சொந்த நிறுவனத்தை வலுவாக ஊன்ற துவக்கத்தில் நான் தடுமாறி இருக்கிறேன். கட்டுமானத் தொழில் மேலாண்மை, வர்த்தகம். சந்தைப்படுத்தலில் ஆதிக்கம் செலுத்த எனக்கு ஏழு ஆண்டுகள் பிடித்தது’’ என்கிறார் சென்னை வானகரத்தைச் சேர்ந்த கோலர் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் உரிமையாளர் திரு.கேசவமூர்த்தி.
2003 இல் கட்டுமானப் பொறியியல் முடித்துவிட்டு சென்னைக்கு வந்த கேசவமூர்த்தி ஒரு தனியார் நிறுவனத்தில் ஆறுஆண்டுகள் வரையில், 300க்கும் மேற்பட்ட தனி வீடுகளைக் கட்டி கொடுத்த பின்பு தனது சொந்த நிறுவனத்தை துவங்கி யிருக்கிறார்.
‘‘இப்போது படித்து விட்டு துறைக்கு வரக்கூடிய சிவில் மாணவர்கள் எடுத்த எடுப்பிலேயே நல்ல சம்பளம், வசதியான பணிவிடம், ஒரே ஆண்டில் சொந்த கம்பெனி என பறக்கிறார்கள். அது ஒரு போதும் பலனைத் தராது. சிவில் படித்த பொறியாளர்கள், பில்டர் ஆக நினைத்தால், அவர்களுக்கு வெறும் தொழிற்நுட்ப அறிவு மட்டும் போதாது, கட்டுமான மேலாண்மை அறிவும் நிறைய புராஜெக்டுகள் செய்த அனுபவமும் வேண்டும்’’ எனச் சொல்லும் கேசவமூர்த்தி 2008 முதல் தனிவீடுகளைக் கட்டி வருகிறார்.
சென்னைப் புறநகர் மட்டுமல்லாது நகருக்குள்ளும் புராஜெக்டுகளைக் கட்டி வருகிறார். கேசவமூர்த்தி இதுவரை சென்னை மற்றும் விழுப்புரம் 40-க்கும் மேற்பட்ட புராஜெக்டுகளைக் கட்டி முடித்து வாடிக்கையாளர்களுடன் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறார். இவர் 500 ச.அடிக்கு குறைவான பரப்பில், தனி வீடுகள் கட்டும் வாடிக்கையாளர்களுக்கு கன்சல்ட்டன்ட் கட்டணம் வசூலிக்காமல் இலவச சேவையாகவே செய்து வருகிறார்.
‘‘திருப்தியான வாடிக்கையாளர்களை நாம் பெற்றிருக்கும் போது கோவிட்-19 போன்ற இக்கட்டான காலக்கட்டத்திலும் கூட நம் வர்த்தகம் ஒருபோதும் ஸ்தம்பித்துப் போகாது’’ என நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்
இவரிடம் ச.அடி விலைக்கு இவ்வளவு என விலை நிர்ணயித்து ஒப்பந்தம் போடுவது குறித்து கேட்டால்.,
‘‘எனக்கு அதில் உடன்பாடில்லை. இதனால் தான் இங்கே நிறைய பிரச்சனைகள் உண்டாகின்றன. வாடிக்கையாளர்களின் விருப்பங்கள், கேட்கும் வசதிகள், பிராண்டட் பொருட்கள் குறித்து விலை வேறுபடும். என்னைப் பொறுத்தவரை பிளானை இறுதி செய்து ஸ்பெசிபிகேrனை ஃபைனல் செய்த பின்பு சந்தை விலை நிலவரத்தை கணக்கிட்டால் தான் மொத்த புராஜெக்டின் செலவு தெரியவரும். புதிதாக வரக்கூடிய பொறியாளர்களுக்கு நான் இதைத்தான் சிபாரிசு செய்வேன்’’ என்கிறார்.
கோலர் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திடம் உங்கள் கனவு வீடுகளை கட்ட அழையுங்கள்
பிளாட் எண்: 18 ஏ, முதல் மெயின் ரோட், ராஜிவ் நகர், வானகரம், சென்னை - 600077
M: info@goaler.co.in ம் W: www.goaler.co.in
( பில்டர்ஸ் லைன் ஜனவரி 2021 இல் மாத இதழில் இந்த நேர்காணல் வெளியாகி இருக்கிறது. உங்கள் நேர்காணலும், விளம்பரமும் பில்டஸ்லைன் இதழில் வெளியாக அழையுங்கள் : 8825991977.
விளம்பரத்துடன் கூடிய உங்கள் நேர்காணல் பில்டர்ஸ்லைன் பத்திரிகை, பில்டர்ஸ்லைன் அதிகார பூர்வ இணையதளம், டெலிகிராம், முகனூல் குழுமத்தில் ஒரு சேர வெளியாக அரைப் பக்கம் : 15,000 / முழுபக்கம் 25,000/.. அழையுங்கள் : 8825991977. )