பராமரிப்பு செலவுக்கு குட்பை
வழக்கமாக செப்டிக் டேங்க் என்றாலே செங்கல் கட்டுமானம், சிமெண்ட் தொட்டி, பிளாஸ்டிக் தொட்டி என பல வடிவங்களில் தயாரித்து நாம் பொருத்துவோம். இந்த கழிவு நீர்த் தொட்டிகளை எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலவரையறையில் கழிவுகளை அகற்றி தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும். ஆனால், கழிவுநீரை அகற்ற தேவையில்லாத, அடிக்கடி சுத்தம் செய்ய தேவையில்லாத பயோ செப்டிக் டேங்க் என்கிற ஒரு தொழில்நுட்பம் பரவலாக வழக்கத்தில் வந்திருக்கிறது .
கோவையைச் சேர்ந்த ஏபிஜி யுரேகா நிறுவனத்தின் உரிமையாளர் என். குணசேகரன்; அவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக பயோ செப்டிக் டேங்க் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் அவரைச் சந்தித்து உரையாடினோம்.
சாதாரண செப்டிக் டேங்க் கட்டுமான செலவிற்கும் பயோ செப்டிக் டேங்க் பொருத்துதல் செலவிற்கும் எவ்வளவு வேறுபாடு?
‘எங்கள் பயோ செப்டிக் டேங்கிற்கும் சாதாரண செப்டிக் டேங்கிற்கும் நிறைய வேறுபாடு உண்டு. நமது பயோ டேங்கிற்கு என்று தனியாக இடம் தேவைப்படுவதில்லை.சாதாரண செப்டிக் டேங்க் அமைப்பதற்கு என்று தனியாக இடம் தேவைப்படும் நமது பயோ டேங்க் அமைப்பதற்கு ஆகும் செலவு சாதாரண செப்டிக் டேங்க் அமைப்பதைக் காட்டிலும் மிகவும் குறைவாக இருக்கும். ஏறக்குறைய பாதி செலவு தான். எப்பொழுதுமே இந்த பயோ டேங்க் நிரம்பி வழியாதுசுத்தம் செய்ய வேண்டியதில்லை. சாதாரண செப்டிக் டேங்க் அடிக்கடி நிரம்பி வழியும் சுத்தம் செய்ய வேண்டும். எப்படி பார்த்தாலும் நமது பயோ செப்டிக் டேங்க் விலை குறைவுதான்.
பயோ செப்டிக் டேங்க் மனித கழிவுகளை சுத்தம் செய்து பூமி மாசு படுவதை தடுக்க பயன்படுகிறது”.
இந்த பயோ செப்டிக் டேங்க் எந்த தொழில்நுட்பத்தில் இயங்குகிறது? இதில் உள்ள ரசாயனம் மற்றும்
பொறியியல் தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கமாக கூறுங்கள்..
‘என்றும் நிரம்பாத எங்கள் பயோ செப்டிக் டேங்க் கழிவுகளை சேமித்தல், மூலம் சுத்தப்படுத்தி, சுத்தப்படுத்தப்பட்ட நீரை ஆவியாக்கும் உருளையில் சேமித்து (evaporation tank) ground pressure ) மூலம் ஆவியாக்கப்படுகிறது.”
பயோ செப்டிக் டேங்க் எது போன்ற பொருளினால் தயாரிக்கப்படுகிறது? இது தயாரிக்கப்படும் விதம் குறித்து கூற முடியுமா ?
‘இது பயோ சிமெண்ட் பயன்படுத்தி கான்கிரீட் கலவையினால் உருவாக்கப்படுகிறது.”
நீங்கள் தயாரிக்கும் பயோ செப்டிக் டேங்க் எது போன்ற தேவைகளுக்கு ஏற்றது?
‘தனி வீடுகளிலும், அடுக்குமாடி வீடுகளிலும், பள்ளி, கல்லூரிகளிலும், மருத்துவமனை, தொழிற்சாலை மற்றும் அலுவலகங்களிலும் பயன்படுத்தலாம்”
தமிழ்நாடு முழுக்க எந்தெந்த மாவட்டங்களில் எதன் மூலமாக உங்கள் பயோ செப்டிக் டேங்க் விற்பனை செய்யப்படுகின்றன?
‘தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எங்களது பயோ செப்டிக் டேங்க் பொறுத்தப்பட்டுள்ளது. எஙகளது விற்பனை பிரதிநிதிகள் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு எங்களது கஸ்டமர் கேர் எண்னை தொடர்பு கொண்டு எங்களை அழைக்கலாம்”
என்கிறார் குணசேகரன். எண்: 96005 90003
ஏபிஜி யுரேகா, எண் 579 / 585 2ஆம் தளம், கிராஸ் கட் ரோடு, காந்திபுரம், கோயம்புத்தூர் - 641 012.