புதுமையான கண்ணாடி நார் இழை தரைத்தள அமைப்பு:
ஒரு கட்டுமானத்திற்கு தரைத்தளம் என்பது ஐந்தாவது சுவர் என்ற நிலையில் இனி வரும் காலங்களில் தரைத்தள அமைப்பில் பைபர் கிளாஸ் தரைத்தள பதிகற்கள் சந்தைக்கு வர நிறைய வாய்ப்புகள் உண்டு.
பைபர் கிளாஸ் டைல்ஸ்கள் உறுதித்தன்மை கொண்டதாக திகழ பாலியெஸ்டர் ரெசின் உள்ளிட்ட பல்வேறு ரெசின் வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு அளவுகள் கொண்டதாகவும், நிறைய வடிவங்களிலும் ஃபைபர் கிளாஸ் பதிகற்கள் வடிவமைக்கப்படுகின்றன. பொதுவாக, தரைத்தள அமைப்பில் பயன்படும் மற்ற பதிகற்களை விடவும் இவ்வகை டைல்ஸ் வகைகளுக்கு சற்று குறைவான பட்ஜெட் என்ற அடிப்படையில் வருங்காலத்தில் அதற்கான தேவைகள் அதிகரிக்கலாம்.
டைல்ஸ் வகைகளுக்கான ப்ட்ஜெட் என்ற அடிப்படையில் செலவு குறைவாக ஆவதால் வீடுகளிலும், வர்த்தகக் கட்டமைப்புகளிலும் இவ்வகை பதிகற்கள் பயன்பாடு அதிகமாகும் வாய்ப்பு உள்ளது. மேலை நாடுகளில் உள்ள பெரிய அளவிலான அடுக்கு மாடிகள், ஓட்டல்கள், மருத்துவமனைகள், தீம் பார்க் போன்ற இடங்களில் நவீன தோற்றம் தரும்படி இவ்வகை பதிகற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியா, சீனா உள்ளிட்ட பல ஆசியா நாடுகளிலும் தற்போது இதன் உற்பத்தி துவங்கி உள்ளதாக தெரிய வந்துள்ளது.மேலும் வடஅமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலை நாடுகளில் அவற்றின் உபயோகம் அதிகரித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. குறைவான பட்ஜெட் மற்றும் நீண்ட கால உழைப்பு ஆகிய காரணங்களால் குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பைபர் கிளாஸ் டைல்ஸ் பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன
.
மேலும், சுலபமாக பயன்படுத்த ஏற்றதாகவும், சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு விளைவிக்காத தன்மை மற்றும் குறைந்த பட்ஜெட் ஆகியவற்றால் பைபர் கிளாஸ் டைல்ஸ் உபயோகம் எதிர்காலத்தில் அதிகமாகும் வாய்ப்புகள் உள்ளன.
ஏற்கனவே இவ்வகை பதிகற்கள் பல்வேறு மேலை நாடுகளில் சுவர்கள் (Wall Tiles) மற்றும் உட்புற மேற்கூரை (Ceiling Tiles) ஆகியவற்ஷீன் பயன்பாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2073143
|