செயற்கை மணலில் சூப்பர் பிளாஸ்டிசைசர் கண்டிப்பாகக் கலக்க வேண்டும்
அண்மைக் காலமாக செயற்கை மணல் காங்கிரீட் வார்க்க, கட்டுவேலைக்கு மற்றும் சுவர்களுக்குப் பூசப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. எனினும் செயற்கை மணலின் உருவம் உருண்டையாக இல்லாமல் கன சதுரமாக இருப்பதால் பிணைப்பில் ஒரு சிறிது குறைகிறது.
இது தொடர்பாக சிலருக்கு இருக்கும் கேள்விகள்:
1. கட்டுமானத்தில் எம்.சேண்ட் பயன்படுத்தலாமா?
2. அப்படிப் பயன்படுத்துபோது, பிணைப்பினை (Bond) உறுதிப்படுத்திட எவ்வகை வேதியியல் சேர்மானத்தை -எந்த அளவில் சேர்ப்பது?
3. இதனால் கான்கிரீட்டில் மற்றும் கட்டுவேலையில் உண்மையிலேயே ஏதாவது பயனுண்டா?
4. பூச்சு வேலை செய்ய எம்சேண்ட்டை பயன்படுத்தினால் என்ன முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடித்திட வேண்டும்?
இக்கேள்விகளுக்கு விடையாக தெரிவித்தவை
அச்சமின்றி எம் சேண்ட்டைப் பயன்படுத்தலாம்.
Superplasticiser- மிகு நெகிழி இளக்கி என்ற வேதியியல் சேர்மானத்தை - பிணைப்பிற்காகக் கலக்க வேண்டும். காங்கிரீட் என்றால் ஒரு மூட்டை சிமெண்ட்டிற்கு 300 மில்லி லிட்டர்; கட்டுவேலை என்றால் ஒரு மூட்டை சிமெண்ட்டிற்கு 140 மில்லி லிட்டர்; சுவர்ப் பூச்சு வேலைக்கு 100-140 மில்லி லிட்டர் வரை கலக்க வேண்டும். இந்த மிகு நெகிழி இளக்கி- கலக்கும் தன்மையினை (Workability) மேம்
படுத்துவதோடு பிணைப்புத் தன்மையினையும் தருகின்றது. இந்த வேதியியல் சேர்மானம் சேர்க்கப்படாத கட்டுவேலைக் கலவை மற்றும் பூச்சு வேலைக் கலவை - பிணைப்பின்றி - உறுதியாக ஒட்டாமல் உதிரியாகவே இருக்க வாய்ப்புண்டு. குறிப்பாக இக்கலவையினைத் தயாரித்த அரைமணிநேரத்திற்குள் பயன்படுத்திட வேண்டும்.
எனவே செயற்கை மணலைப் பயன்படுத்தும் போது கண்டிப்பாக பிணைப்பு ஏற்படுத்தும் வேதியியல் சேர்மானங்களைக் கலந்திட வேண்டும்.