போரோதெர்ம் செங்கற்கள் அஸ்திவாரத்துக்கு பயன்படுத்தலாமா?
சமீபத்தில் பரவிவரும் புதிய வகைச் செங்கற்களை முதல்முறை பார்ப்பவர்களுக்குத் திகைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. அதாவது இந்தச் செங்கல்லுக்குள் வெற்றிடத்தைக் காணலாம். உட்புறம் வெற்றிடம் அமைந்த செங்கற்களா? இவற்றைப் பயன் படுத்தினால் கட்டடம் அப்படியே உட்கார்ந்து விடுமே என்று உங்களில் சிலர் பதறக் கூடும்.
அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை.
இந்த வகைச் செங்கற்களைப் பயன் படுத்துவதால் பலவித நன்மைகள் உண்டு. இவை வெப்பத்தை எளிதில் இழப்பதில்லை. இதன் காரணமாக கோடைக்காலத்தில் ஏ.சி. பயன்பாட்டைக் குறைக்க முடியும். இவற்றிலுள்ள துளைகள் ஒரு தனிப்பட்ட செயல்பாட்டை உருவாவக்குவதன் மூலம் கோடையில் வீட்டுக்குள் ஓரளவு வெதுவெதுப்பையும் கொடுக்கிறது. இவை களி மண், கரிப்பொடி, உமி, கிராணைட் குழம்பு ஆகியவற்றினால் உருவாகுவதால் ரசாயணம் கலந்தால் கூட ஒவ்வாமை ஏற்படுவதில்லை. புதிய மின் இணைப்புகள் மற்றும் நீர் இணைப்புகளை உருவாக்கும்போது இந்தக் கற்கள் உடையாது. செதுக்குவது சுலபமாக இருக்கிறது.
போரா என்றால் துவாரங்கள கொண்ட என்று பொருள்.Them என்பது வெப்பம் நிறைந்த என்று அர்த்தம் கொண்டது. இந்த வகை செங்கற்களை porotherm என்ற பெயரில் தயாரிக்கப்படுகிறது. என்றாலும், இன்னும் வேறு சில அமைப்புகளும் இதுபோன்ற உள்ளுக்குள் ஆங்காங்கே வெற்றிடம் கொண்ட செங்கற்களை உருவாக்கத் தொடங்கி விட்டன.
முக்கியமான இன்னொரு நன்மை என்னவென்றால் நமது வழக்கமான செங்கல்லின் எடையில் 60 சதவிகிதம் எடை கொண்டதாக மட்டுமே இது இருக்கிறது. இதனால், இதைக் கையாள்வது எளிதாக இருப்பதுடன் கட்டுமானப் பணியையும் வேகப்படுத்த முடியும். பூஞ்சைக் காளான்கள் தாக்குதல் இந்தச் செங்கற்களைப் பயன்படுத்தும்போது இருப்பதில்லை. தவிர முன்கூட்டியே கட்டடத்துக்கு தேவைப்படும் பகுதிகளைத் தயார் செய்து வைத்துக் கொள்ள முடிகிறது. ஆனால், இந்த வகை போரோதெர்ம் செங்கற்களை அஸ்திவாரத்துக்குப் பயன்படுத்த முடியாது. அதேபோல் மிக அதிகமான தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களிலும் பயன்படுத்த முடியாது. காரணம் தண்ணீரின் எதிர்மறை அழுத்தத்தை இவற்றால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இவை எடை குறைவாக இருப்பதால் இதைக் கையாள்வது எளிது.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2073139
|