நட்பு தந்த நல்ல துவக்கம்
இயல்நாடி படைக்கும் இயற்கை மரபு வீடுகள்..
நம்பிக்கை, விடா முயற்சி இவ்விரண்டும் ஒன்றிணைந்தால் எந்தத் துறையிலும் சாதிக்க முடியும் என்பதை பலரும் பல நாடுகளில் பல துறைகளில் அவ்வப்போது மெய்ப்பித்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், இவற்றுடன் புரிதல் மிக்க நட்பும் சேர்ந்தால்? ஈகோ இல்லாத அந்நட்பில் பரஸ்பர புரிதலும் இருந்தால் அது மிகப்பெரிய இலக்கினை வெல்ல முடியும் என்பதற்கு கோவையின் இளம் ஆர்க்கிடெக்ட் ஸ்ரீபுவும் அவர்கள் நிறுவனமும் எளிதில் விளங்கும் சான்றாகும்.
பொதுவாக மூன்று தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்தால், சங்கம் துவங்குவார்கள், மூன்று நபர்கள் ஒன்றாகச் சேர்ந்தால் கட்சி துவங்குவார்கள், மூன்று கட்டுமானப் பொறியாளர்கள் ஒன்று சேர்ந்தால் கட்டுமான நிறுவனம் துவங்குவார்கள் என்ற பேச்சு நம் வழக்கில் உள்ளது. பெரும்பாலும் இப்படி நட்பு ரீதியாகத் துவங்கும் நிறுவனங்களில் 95% ஓராண்டு கூட தாக்குப்பிடிப்பது கடினம்.
காரணம் அதே நட்புதான். நண்பர்களாக இருக்கும் போது இருந்த புரிந்துணர்வு, விட்டுக் கொடுத்தல் ஆகியவை பங்குதாரரர்களாக மாறும் போது பெரும்பாலும் இருப்பதில்லை. திடீர்
திடீரென தோன்றும் ஈகோ, கருத்து வேறுபாடு, நம்பிக்கை குறைதல், சுயஇரக்கம் போன்றவை தவறான புரிதலில் கொண்டு போய் விட்டுவிடும். நிறுவனத்தை தொலைத்ததோடு நட்பையும் தொலைத்தவர்கள் அநேகம்.
ஆனால் இவற்றையயல்லாம் புறந்தள்ளி நட்பிலும், தொழிலிலும் ஜெயிப்பவர்கள் மிகக் குறைவு. நண்பர்களுக்கு இடையேயான நட்பு ஆழமாக வலிமையாக இருக்கும்போது அவர்களின் வர்த்தகமும் இலக்கும் சுலபமாக ஜெயித்து விடும். அதை உண்மை என்று நிருபித்துள்ளனர். ஸ்ரீபு என்னும் பெண் கட்டட கலைஞரும் அவரின் நண்பர்களும்.
கோவையை சேர்ந்த ஸ்ரீபு சிறுவயது முதல் தாயின் அரைவணைப்பில் மட்டுமே வளர்ந்தார். கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் பி.ஆர்க் படித்து கட்டிடக்கலை நிபுணர் ஆனார்.
கல்லூரியில் படிக்கும் போதே சூழலியல் ஆர்வம் கொண்டவராக இருந்தார். பாரம்பரியம், கலாச்சாரம், சுற்றுப்புறம் போன்ற விrயங்களில் கவனம் செலுத்தி வந்தார். கல்லூரியில் இவருடன் பயின்றவர்கள் செங்கல், மண், சிமெண்ட் கலந்த வழக்கமான கட்டிடக்கலையில் ஆர்வம் காட்டியபோது ஸ்ரீபு மட்டும் பாரம்பரியமிக்க பாணியிலான( இயற்கையான மரபு வீடுகள்) வீடுகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தன் கருத்தோடு ஒத்துப்போகும் வாடிக்கையாளர்களுக்காகவே தன்னந்தனியாகவே கட்டடப் புராஜெக்டுகள் மேற்கொண்டார் ஸ்ரீபு.
கொடைக்கானலில் ஒரு பள்ளியில் கட்டிட வேலைகளை தனியாக பார்த்துக்கொண்டு இருந்த ஸ்ரீபுக்கு சுந்தர ராஜகணேஷ் மற்றும் தர்மபாலன் ஆகிய இன்னும் இரு கட்டட கலைஞர்களின் நட்பு கிடைத்தது. மூவரையும் இயற்கையான மரபு வீடுகள் என்கிற கருத்தொற்றுமையே ஒன்றிணைத்தது. மூன்று பேரும் சேர்ந்து ஒரு கட்டுமான நிறுவனம் தொடங்கலாம் என்று முடிவு செய்தார்கள்.
திரு. சுந்தரராஜகணேஷ் மண் வீடு கட்டுவதில் திறமைமிக்கவராகவும், திரு. தர்மபாலன் மூங்கில் வீடுகள் கட்டுவதில் கைதேர்ந்தவராகவும் இருந்ததால் மூன்று பேரும் சேர்ந்து இயற்கையான
மரபு வீடுகள் கட்டுவதை ஒன்றிணைந்து செய்ய திட்டமிட்டார்கள்.
இயல் நாடி என்ற பெயரில் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் தொடங்கினார்கள். .
இயற்கைக்கு கெடுதி நினைக்காமல், இரும்பு, சிமெண்ட் இன்றி வட்டாரக் கட்டுமானப் பொருட்களான மண் சேறு, சுட்டக்கல், சுண்ணாம்பு கொண்டு பழமை மாறாமல் அதேசமயம் நவீன
மாகக் வீடுகளைக் கட்ட துவங்கினார்கள்.
(மஞ்கள், வேப்பிலை, கடுக்காய், வெல்லம் கலந்த இயற்கை பூச்சு செய்வதால் வீடு நோய் எதிர்ப்பு சக்தியுடன் கோடையில் குளிராகவும், குளிர் நேரம் வெதுவெதுப்பாகவும் இருக்கும்). சிமென்ட், வீடுகளை காட்டிலும் மண்வீடு கட்ட செலவு குறைவு என்பதால் மும்பை, கோவை, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் மண்வீடு, மூங்கில் வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.
ஸ்ரீபுவிடம் நாம் பேசும்போது, ‘‘இன்று நாம் நாகரிகம் என்ற பெயரில் இயற்கையை அழித்து பழமையை மறந்து வருகிறோம், இதனால் மண்வீடுகள் போன்ற மரபுச் சார்ந்த பாரம்பரிய வீடுகள் இழந்து விட்டோம் பாரம்பரியத்தை விரும்பு வோருக்கு அதை மீட்கும் வகையில் பழங்கால பாரம்பரியமிக்க வீடுகளை கட்டிக் கொடுக்கிறோம். ஏழை எளியவர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டு அவர்களுக்கு வாழ்வாதரத்தை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறோம்’’ என்கிறார் ஸ்ரீபு.
நாம் வசிப்பதற்காக இயற்கையை அழிக்கக்கூடாது. இயற்கை வாரி வழங்கிய மண்ணால் ஆன வீடு கட்டித்தான் நம்முன்னோர் வாழ்ந்தனர். அதனால் தான் மரபு வீடு கட்டும் முறை குறித்து கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சியும் அளித்து வருகிறோம்.
அழகியல் சார்ந்த எழில் கொஞ்சும் இயற்கை வீடுகளை உருவாக்கி வரும் இயல்நாடி கட்டுமான நிறுவனத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமே எங்கள் மூவரின் ஈகோ இல்லாத நட்பு தான் என நம்பும் ஸ்ரீபு, ‘‘கன்ஸ்ட்ரக்ஷன் சமயங்களில் பிளான், அஸ்திவாரப் பணிகளில் தொடங்கி கூரை முடித்து கிரஹப்பிரவேசம் வரை மேற்பார்வையிட்டு அங்கேயே தங்கியிருந்து பணிகளை கவனித்துக் கொள்வதில் சுந்தர ராஜகணேஷ் மற்றும் தர்மபாலனின் பங்கு மிகப்பெரியது’’என்கிறார் ஸ்ரீபு.
தன்னுடைய நிறுவனத்தின் பார்ட்னர்கள் மூன்று பேரும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் எந்த வேலையும் சுணக்கமில்லாமல் நடைபெறுவதாக தெரிவிக்கிறார் ஸ்ரீபு.
இன்றைய இளைஞர்கள் தொழில் முனை வோரராக பார்ட்னர்´ப் முறையில் தொழில் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், அனைவரும் ஒருங்கிணைந்து திறமையை வெளிப்படுத்தி ஒற்றுமையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதை ஸ்ரீபுவின் இயல்நாடி நிறுவனம் நமக்கு உணர்த்துகிறது. உங்களுடைய சிந்தனையை செயல்படுத்த நம்பிக்கையோடு தொடங்குங்கள், அவ்வாறு செயலில் ஈடுபடும்போதுதான் வெற்றியின் வெளிச்சம் வெது தூரத்தில் இல்லை என்பதை நீங்கள் உணரத் தொடங்குவீர்கள்.
சவால்கள் நிறைந்த கட்டுமானத் துறையில் நுழைந்து நல்ல நண்பர்களை சேர்த்துக் கொண்டு பழைய பராம்பரிய வீடுகளை இன்றைய புதுமையான பரினாமத்தில் உருவாக்கி தரும் ஸ்ரீபுவும், அவரது நண்பர்களும், இயற்கைச் சார்ந்த வீடுகளுக்கு மட்டுமல்ல, ஆண், பெண் நட்பிற்கும் உதராணமாக திகழ்கிறார்கள்.
ஒரு பெண் எந்தத் துறையில் வெற்றி பெற்றாலும் அது கொண்டாடப்பட வேண்டியதாகும்.அதுவே, அந்த வெற்றி நமது கட்டுமானத்துறையில் நிகழ்த்தப்படும் போது அதைக் கொண்டாடுவதைத் தவிர நமக்கு வேறுபணியில்லை. இதுபோல நிறைய பெண்களும் இளைஞர்களும் தொழில் முனைவோராக உருவெடுக்க வேண்டும்.
ரெஸ்யூம் கோப்புகள் சுமந்து கட்டுமான நிறுவனங்களை நோக்கி படையெடுத்துக் கொண்டிராமல் புதிய சிந்தனை, புதிய பாதையில் முயன்றால் புதிய சரித்திரங்கள் உருவாக்கப் படும் என்பது நிதர்சனம்.
இவர்களுக்கு நமது மனமார்ந்த பாராட்டுகள்.
E: shrisha7.ss@gmail.com
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2073145
|