இன்டர்லாக்கிங் முறையில் வீடு கட்டினால் தமிழ்நாடு முழுக்க 1400 ரூபாய் தான்! ஒரே சதுர அடி விலையில் வீடு கட்டும் மஹாதேவ்

04 ஜனவரி 2024   05:30 AM 10 நவம்பர் 2020   01:21 PM


இன்டர்லாக்கிங் முறையில் வீடு கட்டினால் தமிழ்நாடு முழுக்க 1400 ரூபாய் தான்!                                 
ஒரே சதுர அடி விலையில் வீடு கட்டும் மஹாதேவ்

தரமான கட்டுமானமும், கவனத்தை ஈர்க்கும் கட்டிட வடிவமைப்பும், தெளிவான இலக்கும் இருந்தால் குறுகிய காலத்தில் கூட பெரிய வெற்றியைப் பெற முடியும் என நிருபித்திருக்கிறார் முதல் தலைமுறை பில்டரான மகாதேவ் கன்ஸ்ட்ரக்ன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு.அஜீத். இவர். சிவில் படித்து முடித்து இளம் வயதிலேயே 2015-ல் இராணிப்பேட்டையில், மகாதேவ் கன்ஸ்ட்ரக்ன்ஸ் என்னும்  நிறுவனத்தைத் துவக்கினார். இன்று வரை தமிழ்நாடு மட்டுமில்லாமல் புதுவை, ஆந்திரா, பெங்களூர், கேரளா  ஆகிய மாநிலங்களில் அபார்ட்மெண்ட், வில்லா, வணிக கட்டிடங்கள், குடியிருப்பு கட்டிடங்கள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனை என மகாதேவ்  கன்ஸ்ட்ரக்ன்ஸ் நிறுவனத்தின்  20 -க்கும் மேலான ப்ராஜெக்ட் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. 

பொறியாளர் அஜித்திடம் பேசும் போது,  “துல்லியமான திட்டமிடல் தான், எங்களது படுவேகமான வளர்ச்சிக்கு கராணமாகும். பேஸ் மட்டம் போடுவது முதல் பெயிண்ட் அடிக்கும் ஃபினிஷிங் வேலை வரை எந்த தேதியில், எந்த வேலை என்பதை முன் கூட்டியே திட்டமிட்டு அதன்படி, வேலையை முடித்துவிடுவோம். அதனால் தான் ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் 
மேற்பட்ட ப்ராஜெக்ட்களை ஒருங்கிணைத்து செயலாற்ற முடிகிறது. ஒவ்வொரு வேலைக்கான செட்டிங் டைம், ப்ராஸஸிங் டைம், போன்றவற்றை அட்சரம் பிசங்காமல் மிசச்சரியாக பின்பற்றி, தரத்தை உறுதி செய்வோம்.
கட்டிடம் கட்டுவதை தவிர உங்களது பிற கட்டுமான சேவைகள் என்ன : வாடிக்கையாளர்களின் மனை அளவுகளுக்கு ஏற்ப கட்டிடத்தின் வரைபடத்தைத் தயாரிப்பது, கட்டிடத்தின் முகப்பு தோற்றத்தை வடிவமைப்பது, எஸ்டிமேrன், அட்டவணையை தயாரித்துக் கொடுப்பது, என கட்டுமானத்துறைச் சார்ந்த தேவைகளை  குடியிருப்பு மற்றும் வணிகமைய கட்டிங்களுக்கு செய்து தருகிறோம். கட்டுமானங்களுக்கு பொறியியல் ஆலோசனைகளையும் தருகிறோம். 

உங்களது கட்டுமானத்தில் தனித்தன்மையை எதை குறிப்பிடுவீர்கள்: 
தனித்தன்மை என்பதற்கு பதிலாக தனி பாணி என குறிப்பி டலாம். வாடிக்கையாளருக்கு இண்டர்லாக் மற்றும் ப்ரிகேஸ்ட் முறையில் கட்டுமானங்களை உருவாக்க அவர்களிடம் வலியுறுத்துவோம். ஏனென்றால் இதன்மூலம் பெரும் கட்டுமானச் செலவை குறைக்க முடியும். 

தனக்கென சொந்தமாய் ஒரு வீடு அமைத்துக் கொள்வதற்கு ஒரு மனிதன் வாழ்நாள் முழுதும் உழைப்பது என்பது மிகவும் வருத்தத்தக்கக்குரியது. வீடு கட்டும் செலவை குறைப்பதுதான் அனைத்திற்குமான தீர்வு. அதனால்தான் நாங்கள் இன்டர்லாக்  & ப்ரிகேஸ்ட் முறையில் வீடு கட்டி பெருமளவு கட்டுமானச் செலவை குறைக்க முயலுகிறோம். இம்முறையில், வாடிக்கையாளர் விருப்பத்திற்கு அறைகளின் அளவை மாற்றி, அமைக்க முடியும்,  வெளிநாடுகளில் எப்போதோ வந்துவிட்ட இண்டர்லாக்கிங், ப்ரிகேஸ்ட் கட்டுமான முறைகள் இந்தியாவில் மூன்று, நான்கு ஆண்டுகளாக பரவலாக பயன்படுத்தபட்டு வருகிறது. 

இதுபற்றி வாடிக்கையாளருக்கு எடுத்துக் கூறி இண்டர்லாக்கிங், ப்ரிக்கேஸட் கட்டுமான முறையில் வீடு கட்டுவதை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இந்த முறையில் வீடு கட்டும்போது தமிழகம் முழுவதும் சதுர அடி 1400 ரூபாய்க்கு கட்டி தருகிறோம் பெங்களூரு, புதுவைக்கு மட்டும் ரூ.1600 ஆகும். மற்றபடி வாடிக்கையாளருக்கு இலவச பி.வி.சி 
மாடுலர் கிச்சன், இலவசமாக 200அடிக்கு போர்வெல் அமைத்து தருவது போன்ற கூடுதல் சேவைகளை செய்வதன் மூலமாக எங்கள் வாடிக்கையாளருக்கு ரூ15000 முதல் 25000 வரை மிச்சப்படுத்தி தருகிறோம்.

மேலும், தமிழ்நாடு முழக்க ஒரே மாதிரியான ஸ்டாண்டர்ட் ஸ்பெசிகேrனில் ஒரே சதுர அடிவிலையில் வீடு கட்டித்தருவதும் எங்களது தனிதன்மை என கூறலாம்’’ என்றார்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், குடியிருப்புகள், காம்ப்ளக்ஸ் ப்ராஜெக்ட் என பிஸியாக இருக்கும். மகாதேவ் நிறுவனத்தின் முகவரி : 
மகாதேவ் கண்ஸ்ட்ரக்ன்ஸ் 
பொறி. ஆர். அஜித், 
நெ. 111, விவேகானந்தர் நகர், சோளிங்கர் சாலை, வாலாஜா, ராணிப்பேட்டை மாவட்டம் - 631102. போன் : 9942039320 
E:  mahadevbuilders100@gmail.com, W: www.mahadevconstruction. om

 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2073140