இனிவரும் காலம் இண்டர் லாக்கிங் கற்களின் இனிய காலம்

12 ஜனவரி 2025   05:30 AM 10 நவம்பர் 2020   12:59 PM


இனிவரும் காலம் இண்டர் லாக்கிங் கற்களின் இனிய காலம்

ஒரு பில்டராக இருக்கக்கூடிய பொறியாளரே தனது  புராஜெக்டுகளின் தேவைக்கு ஏற்ப செங்கல்லுக்கு மாற்று கட்டுமானக்கற்களை  உற்பத்தி செய்து கொள்ளவும், மற்ற வாடிக்கையாளருக்கு வழங்கவும்  தொடங்கியிருக்கிறார்.  மங்களம்  கன்ஸ்ட்ரக்rன்ஸ் என்ற பெயரில் திருப்பத்தூர், பொன்னமராவதி, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய பகுதிகளில் ஏராளமான கட்டுமான
ப்ராஜெக்ட் களை மேற்கொண்டுள்ள பொறி.அன்பு இளங்கோ என்பவரின் புதிய முயற்சிதான், இ-பிரிக்ஸ் என்னும் கட்டுமானக்கற்கள் தயாரிப்பு நிறுவனம்.

‘‘இந்த கொரோனா காலக்கட்டம் பலருக்கும் பல படிப்பினைகளை தந்திருக்கிறது. நானும் அதில் பல மாறுதல்களை கண்டிருக்கிறேன். கடந்த நான்கு மாதங்களில் ப்ராஜெக்ட் பணிகளில் தொய்வு ஏற்பட அதை ஈடுகட்டும் வகையில் செங்கல்லுக்கு மாற்று கட்டுமானக்கற்களை தயாரிக்கும் தொழிற்கூடத்தை தொடங்கினோம். அதுதான் இ-பிரிக்ஸ் நிறுவனம். நாங்கள் 6 & 8 அங்குல அளவுகளில் இன்டர்லாக்கிங் ப்ளாக்குகள் (சாயில் & கான்கிரீட்), பேவர்   பிளாக்குகள், கூல் ரூஃப் டைல்ஸ்கள் மற்றும் கவர் பிளாக்குகள்  ஆகியவற்றை ISO தரத்துடன் தயாரித்து வருகிறோம்’’ என்றார் அன்பு இளங்கோ.

அவர் இன்டர்லாக்கிங் பிரிக்குகள் பற்றி குறிப்பிடுகையில், ‘செங்கல்லின் பயன்பாடு ஆச்சரியபடத்தக்க வகையில் கடந்த 15 ஆண்டுகளாக குறைந்து வருகிறது. எரிசாம்பல் கற்கள்,  ஏஏசி ப்ளாக், போரோதெர்ம்  கற்கள், இண்டர்லாக்கிங் ப்ளாக், ஹாலோ ப்ளாக் என பல மாற்று கட்டுமான கற்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. அவற்றுள் ஹாலோ ப்ளாக் மற்றும்  இண்டர்லாக்கிங் கற்களின் பயன்பாடு தேவைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது

சிமெண்ட், மணல், கலவை மேற்பூச்சு போன்ற கட்டுமானப் பொருட்களின்  தேவையைக் குறைப்பதற்கான அரிய கண்டுபிடுப்பு தான் இண்டர்லாக்கிங் ப்ரிக்குகள். கட்டுமானச் செலவையும், மனித உழைப்பையும் பெருமளவு குறைக்கும் இண்டர்லாக்கிங் ப்ரிக்குகள் காம்பவுண்ட் சுவர்கள், வீட்டின் உட்புற, வெளிப்புறச் சுவர்கள் தொழிற்சாலைகள், வணிக மையங்கள், போன்ற அனைத்து வகையான கட்டுமானங்களுக்கும் மிகவும்  ஏற்றது. 

இண்டர்லாக்கிங் ப்ரிக்குகளின் தேவையை உணர்ந்துதான் எங்கள் இ-பிரிக்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு முதல் இண்டர்லாக்கிங் ப்ரிக்குகளை தயாரிக்க துவங்கியிருக்கிறது”.

இண்டர்லாக் ப்ரிக்குகள் வைத்து முழு வீட்டைக் கட்ட முடியுமா?
‘‘தாராளமாக முடியும், செங்கல்லை விட பல மடங்கு சிறந்த கட்டுமானப் பொருள் இண்டர்லாக்கிங் ப்ரிக்குகள். கடந்த 4, 5 ஆண்டுகளாக பலரும் இண்டர்லாக்கிங் ப்ரிக்குகளைக் கொண்டு முழுவீட்டையும் கட்டுகிறார்கள், அடிப்படையில் இண்டர்லாக் ப்ரிக்குகள் 20 டன் எடையை தாங்கக்கூடிய அளவிற்கு கம்ப்ரஸ் செய்யப்பட்டு உறுதியாக தயாரிக்கப்படுகிறது.  பார்ட்டிஷியன் சுவரென்றால் 6 அங்குல  இண்டர்லாக் ப்ரிக்குகள் ஏற்றது. இதுவே சுவர் தாங்கும், அதாவது பாரம் தாய்ச்சுவர் என்றால், 8 அங்குல இண்டர்லாக் ப்ரிக்குகளைக் கொண்டு  சுவர் அமைக்க வேண்டும். எங்களது மங்களம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கூட முழுக்க, முழுக்க இண்டர்லாக்கிங் கற்களைக் கொண்டு ப்ராஜெக்டுகளை மேற்கொள்ள இருக்கிறோம்.
கட்டுமானத்துறை ஓவ்வொரு காலக்கட்டத்திலும் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்கிறது. இப்பொழுது இண்டர்லாக்கிங் கற்கள், ஆர்.எம்.சி ஆகியவற்றை பயன்படுத்தி நீங்கள் ஒரு முழுவீட்டையே கட்டி முடித்துவிட முடியும். இதனால் பணியிடத்தில் மணல் எம். சேண்ட் ஆகியவற்றின் தேவையே இனி இருக்கப் போவதில்லை”.
 
இண்டர்லாக்கிங் ப்ரிக்குகளின் நன்மைகள் பற்றி:
‘‘நிறைய நன்மைகள் உள்ளன. 30  சதவீதக் கட்டுமானச்செலவு குறைவு, வேலை நேர குறைவு, நல்ல ஃபினிஷிங் என பல நன்மைகள் உண்டு. இண்டர்லாக் ப்ரிக்குகள் கொண்டு வீடுகள் கட்டும் போது பிற்காலத்தில் வீடுகளை இடிக்கும் போதும்,சீரமைக்கும் போதும் கற்களை எவ்வித சேதம் இல்லாமல் பிரித்து எடுக்க முடியும். மறுபடியும் பயன்படுத்த முடியும். மற்ற 
கட்டுமானக்கற்களில் இந்த வசதியில்லை. இதில் மட் (Mud‚)& கான்கிரீட்  என இருவகை இண்டர்லாக் ப்ரிக்குகள் உள்ளன. நாங்கள் இரண்டையுமே தயாரிக்கிறோம். கான்கிரீட்  ப்ரிக்குகளை விட, மணலை எடுத்து சலித்து தயாரிக்கப்படும் மட் ப்ரிக்குகள் குளுமையானவை மற்றும் விலை குறைந்தவை என்பதால் மக்கள் மட் ப்ரிக்குகளை விரும்புகிறார்கள்’’.

உங்களது தொழிற்சாலையில் இண்டர்லாக் ப்ரிக்குகள் தயாரிக்கப்படும் விதம் குறித்து கூறுங்கள் ?
‘‘எம். சேன்ட், எரிசாம்பல் ,சிமெண்ட், 6 எம், எம். சிப்ஸ், ஆகிய மூலப்பொருட்களைக் கொண்டு  20 டன் அழுத்து விசை இயந்திரங்கள் கொண்ட எங்கள் தொழிற்சாலையில் இண்டர்லாக் ப்ரிக்குகள் தயாரிக்கப்படுகின்றன. வெளிபுற ஃபினிஷிங் மிகவும் வழுவழுப்பாக இருப்பதால் மேற்பூச்சுக்கு வேலையில்லை.  நேரடியாக பெயிண்ட் அடித்துக்கொள்ளலாம். தற்சமயம் எங்கள் தொழிற்சாலையில் 25 பேர் பணிபுரிகிறார்கள். தரப்பரிசோதனைக்கு என்று, பொறியாளர்கள் தனியே இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு சராசரியாக 1500 இண்டர்லாக் ப்ரிக்குகளை தயாரிக்கிறோம்”.  

இ-பிரிக்ஸ்  நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது ?
தென் மாவட்டங்களில் பல பொறியாளர்களும், பில்டர்கள் மற்றும் காண்ட்ராக்டர்களும் எங்களை விற்பனைக்காக அணுகுகிறார்கள். ஃப்ரேம்ட் ஸ்ட்ரக்ச்சர் கொண்டு கட்டமைக்கப்படும்  
கட்டுமானங்களுக்கு இன்டர்லாக்கிங் கற்களை சப்ளை செய்வதுடன்,  நாங்களே கட்டியும் தருகிறோம். பேஸிக் (பிரிலிமினரி) ஸ்ட்ரக்ச்சரான பைல்  ஃபவுண்டேஷன், கிரேட் பீம் போன்றவற்றை தயார் செய்து இண்டர்லாக் ப்ரிக்குகள் சுவர் மட்டும் எங்களையே கட்டித்தரச் சொல்லிவிடுகிறார்கள். இதனால் அவர்களின் வேலை வெகுவாக குறைக்கப்படுகிறது. திருச்சி, காரைக்குடி,
​ பொன்னமராவதி, சிவகங்கை, போன்ற பல ஊர்களில் எங்கள் கற்கள் பரவலாக விற்பனை ஆகிறது. 

இன்னும் ஆறு மாதத்திற்குள் தமிழகம் முழுக்க எங்களது இ-பிரிக்ஸ் கற்களை தயாரிக்கவும், உடனுக்குடன் சப்ளை செய்யவும் திட்டமிட்டிருக்கிறோம்’’
என்கிறார் இ-பிரிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பொறி.அன்பு இளங்கோ அவர்கள்.

இ-பிரிக்ஸ் இண்டர்லாக் ப்ரிக்குகள், மற்றும் அனைத்துவிதமான கட்டுமானக் கற்கள் பெற தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
இ-பிரிக்ஸ்:  பொறி.அன்பு இளங்கோ, நெ. 21-பி, சீதளி கீழ்கரை தெரு, திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டம் -630211.  போன் : 8681821999, 8680811999. 
​ E: info@ebricks.co.in, W : www.ebricks.co.in

 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2131866