ஆர்.எம்.சி ஒரு அற்புத தொழிற்நுட்பம்

24 ஜனவரி 2024   05:30 AM 18 மார்ச் 2020   04:15 PM


ஆர். எம்.சி. வந்த பின்பு தான் கட்டுமானத்துறை உச்சகட்ட வளர்ச்சியை அடைந்திருக்கிறது. சிறிய, பெரிய கட்டுமானப் பணிகளுக்கு ஆர்எம்சி கான்கிரீட் ஒரு அற்புத வரப் பிரசாதமாகும்’’ என்கிறார் கரூரைச் சேர்ந்த வி.ஆர்.ஜி குரூப்ஸ் ஆஃப் கம்பெனிஸ் நிர்வாக இயக்குநரான திரு.எம்.கவுதம்.

கடந்த 40 வருடங்களாக கட்டுமானத் துறையில் கரூரில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருவதோடு ரெடிமேட் கான்கிரீட் மற்றும் செயற்கை மணல் தயாரிப்புகளிலும் முதன்மை பெற்று வருகிறோம்.’’ என்கிறார் கௌதம். அவரிடம் விஆர்ஜி ரெடிமேட் கான்கிரீட் பற்றி கேட்டபோது,

‘‘வி.ஆர்.ஜி. கான்கிரீட் நிறுவனம் தற்போது கரூரில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் எனது தாத்தா. திரு.வி.ராசப்பன், மற்றும் எனது தந்தை திரு. ஆர். முருகேசன் அவர்களால் நிறுவப்பட்டது. முதலில் ரோடு கன்ஸ்ட்ரக்ஷன் பணிகளை முழுமையாக செய்து வந்த நாங்கள் தற்போது ரெடிமிக்ஸ் கான்கிரீட்டையும் தயாரித்து வருகிறோம்’’.

உங்கள் நிறுவனம் தயாரிக்கும் கான்கிரீட் மற்றும் உங்கள் சேவையைப் பற்றி கூறுங்கள் ?,

‘‘எங்கள் நிறுவனம் தற்போது தரமான ரெடி மிக்ஸ் கான்கிரீட், ஸ்பெஷல் கான்கிரீட், சைட் மிக்ஸ் கான்கிரீட், லைட் வெயிட் கான்கிரீட், மற்றும் ப்ரிகேஸ்ட் கான்கிரீட் போன்றவற்றை தயாரித்து வருகிறது.

நாங்கள் M.சாண்ட், P.சாண்ட், C.சாண்ட் மற்றும் வெட் மிக்ஸ் போன்றவற்றையும் தயாரித்து வருகிறோம். 20 நாட்களுக்கு ஒருமுறை எடை அளவு சரிப்பார்த்து தரத்தை நிர்ணயம் செய்கிறோம். தரம், அளவு போன்றவற்றை சரியான விகித்தில் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறோம்’’.

உங்கள் தொழிற்சாலையில் ஆர்.எம்.சி கான்கிரீட் மற்றும் எம் சான்ட், பி. சான்ட், சி. சான்ட் தயாரிக்கப்படும் விதம் பற்றி?

‘‘பேட்சிங் பிளான்ட் மூலம் நாங்கள் தயாரிக்கும் கான்கிரீட்டுக்குத் தேவையான மூலப் பொருட்கள் அனைத்தும் சரியான எடை அளவில் எடுக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. மேலும், ‘பூம் பம்பு’கள் என்ற அதிநவீன கருவி மூலம் 100 அடி உயரத்துக்கு மேலே கான்கிரீட் கலவையை கொண்டு செல்லும் பணிகளைச் செய்கிறோம்.

எங்களது சிறப்பென்னவென்றால், கிரஷர் பிளாண்டுக்கு கிரீன் பெல்ட் மூலம் 0% Pollution free, என்ற நிலையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு பார்த்துக் கொள் கிறோம். நாங்கள் தயாரிக்கும் M.சாண்ட், P. சான்ட், ஆகியவற்றை தரப் பரிசோதனை செய்ய அதற்கென பிரத்யேகமான Laboratory பயன்படுத்துகிறோம். Primary Secondary, VSI, Sand washers, D-Wattering மூலம் தரப் பரிசோதனைகளை நாங்கள் துல்லியமாக மேற்கொண்டு வருகிறோம்.

எங்களது கான்கிரீட் டெலிவரி பணிகள் அனைத்தையும் துரிதப்படுத்தும் வகையில் சொந்தமாக வி.ஆர்.ஜி. (ஆர்எம்சி) டிரான்ஸ்போர்ட் வைத்து இருக்கிறோம். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 24X7 சேவையை உடனுக்குடன் சாத்தியமாக்குகிறோம்.

நாங்கள் தற்போது கரூர், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் தரமான ஆர்.எம்.சி யை சப்ளை செய்து வருகிறோம். இதுவரையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட புராஜெக்டுகளுக்கு ஆர்.எம்.சி யை வழங்கி, வெற்றிகரமாக முடித்திருக்கிறோம்’’ என்றார் திரு.கௌதம்.

மேலும் விவரங்களுக்கு..
வி.ஆர்.ஜி. குரூப் ஆப் கம்பெனிஸ்
எண். 1056/1, க்ரஷ்ர் மேடு குப்பம், புகழூர் தாலுக்கா, 
கரூர் - 639111. Ph : 96558 888 66 / 94420 74757
E- vrgconcretekarur@gmail.com, vrgbluemetals@gmail.com
W: www.vrgbluemetal.com

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067958