இயற்கையான முறையில் கிடைக்கும் இதற்கும் இப்போது தட்டுப்பாடுதான். இதனால் இதற்கான மாற்றுப் பொருளுக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. அப்படிப்பட்ட ஆராய்ச்சிகளின் விளைவாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு செயற்கை ஜல்லி, தொழிற்சாலைக் கழிவு ஜல்லி.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் பலவிதமான கழிவுகளை மூலப் பொருட்களாகக் கொண்டு இந்த வகை ஜல்லி தயாரிக்கப்படுகிறது. இரும்புத் தொழிற்சாலைகளில் உண்டாகும் இரும்புக் கழிவுகளின் துகள்களையும் மூலப் பொருளாகக் கொள்ளலாம். மேலும் அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேறும் நிலக்கரிச் சாம்பலையும் மூலப் பொருளாகக் கொள்ளலாம். இதுமட்டுமல்லாது கடற்கரைக் களிமண்ணையும் இதன் பகுதிப் பொருளாகக் கொள்ளலாம். இத்துடன் சோடியம் கலந்து ஆயிரம் டிகிரி செல்சியஸ் சூடேற்ற வேண்டும்.