‘ஏற்கனவே நிலத்தின் விலை கடுமையாக உயர்ந்திருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் வீண் கட்டுமானச் செலவாக சதுர அடிக்கு ரூ.100 க்கும் மேல் செலவழிப்பதை நாம் மனது வைத்தால் குறைக்க முடியும். அதற்கான வழிதான் வட்டார கட்டடக்கலையான மாற்றுக் கட்டுமான முறை.
மாற்றுக் கட்டுமான முறை மூலம் சிமென்ட் போன்ற மூலப் பொருட்களை குறைப்பது மட்டு மல்ல, கட்டுமானச் செலவை பெரிதாகக் குறைக்க முடியும் என்றாலும். ஏனோ மக்களுக்கு ஆர்சிசி கட்டுமானங்களான கன்வெசன்rன் கட்டுமானங்கள் பக்கமே மனது போகிறது. அவைதான் உறுதி, வலிமை என நினைத்து கொள்கிறார்கள். அதற்காக சில, பல லட்சங்களையும் அதிகமாக இழக்கிறார்கள்.
அது போன்ற காற்று,வெளிச்சம் வராத மூச்சு முட்டும் கல்லறை போன்ற கனச்சதுரங்களுக்கு பதிலாக இயற்கை கொஞ்சும் வீடுகளை, வெளிக்காற்று ஊருடுவும் கனவு இல்லங்களை வழக்கமான கட்டுமானச் செலவை விட மிக குறைவாக நாங்கள் கட்டித் தருகிறோம். தனி வீடு, வில்லாக்களுக்கு எங்கள் கட்டுமான முறை மிகச்சிறந்தது ’’ என்கின்றனர் சேலத்தைச் சேர்ந்த புரூட்டல் டிசைன்ஸ் உரிமையாளர்களும் தம்பதியருமான ஆர்க்கிடெக்ட் திரு. சூரிய நாரயணன் மற்றும் ஆர்க்கிடெக்ட் திருமதி. கோமகள் அனுபமா.
நாம் அவர்களிடம் பேசினோம்.
‘‘சார். எங்கள் புருட்டல் டிசைன்ஸ் நிறுவனம் 20 ஆண்டுகளாக சேலத்தில் இயங்கி வருகிறது. இதுவரை ஏராளமான வீடுகள், தனி பங்களாக்களை கட்டி இருக்கிறோம். ஏறத்தாழ 10 லட்சம் ச.அடிக்கு மேலாக கட்டுமானங்களை உருவாக்கி இருக்கிறோம்.
வட்டாரக் கட்டடக்கலை மீது உங்களுக்கு ஏற்பட்ட ஆர்வம் குறித்து..
எங்களிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் நாங்கள் ‘மாற்றுக் கட்டுமானம் மூலமாக குறைந்த செலவில் வீடுகட்டலாம், சிமென்ட், மணல் பயன்பாட்டை குறைக்கலாம்’, என எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்பதில்லை. அதுபற்றி அவர்களுக்கு புரிதல் ஏற்படுவதில்லை. அதனால் தான், அவர்களை வற்புறுத்துவதற்கு பதிலாக நாமே ஒரு உதாரண வீட்டை மாற்று கட்டுமான முறையில் சேலம் , ஏற்காடு மலை அடிவாரத்தில் நாங்கள் குடியிருக்க கட்டியிருக்கிறோம்.
இதை கட்டி முடித்த பின்பு தான் இப்பொது பலபேர் இதன் கட்டுமான விவரம், செலவைப் பற்றி எங்களிடம் விசாரிக்கிறார்கள்.
நாம் வீட்டைப் பார்வையிட்டோம்
பார்க்கவே வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் இந்த வீடு, பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்கிறது. பல லட்சங்களை தாண்டி இருக்குமோ? என்று நமக்கு எண்ணம் வருகிறது. ஆனால் ‘2000 சதுர அடி வீடு வெறும் 32 லட்சத்தில் மட்டுமே கட்டப்பட்டது’ என கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்கள் இந்த தம்பதி.
நம்மை முதலில் கவர்வது நுழைவாயிலில் இருக்கும் ஜாலி வேலைப்பாடுகள். முகலாயர்கள் பயன்படுத்திய அற்புதமான கலை.
இதன் பயன்பாடு, தனியுரிமை காக்கப் பயன்படுவதோடு, காற்று மற்றும் வெளிச்சம் வருவதால் வீட்டில் வசிப்பவர்களின் மனநிலையும் ஆரோக்கியமாக இருக்கிறது. அடுத்து நம்மை கவர்வது முற்றம். முற்றத்தின் மூலம் காற்று மற்றும் வெளிச்சம் வருவது மட்டுமின்றி குடும்பத்தினருடன் உட்கார்ந்து அளவளாவும் சூழலையும் ஏற்படுத்தி தருகிறது.
அடுத்து தரையில் பதித்திருக்கும் பூ - கல் கையால் செய்யப்பட்டது. இதன் முக்கிய பங்கு உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்தும் தன்மை உடையது. அதுமட்டுமில்லாமல் குதிங்கால் வலி, பித்த வெடிப்பு வராமல் பாதுக்காக்கப்படுகிறது. வீட்டிற்குள் செருப்பு போட்டு நடக்கும் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. நம் உடம்பு பூமியின் காந்த சக்தியுடன் இணையாத போது உடம்பில் பல நோய்கள் அதிகரிக்கும். விலையும் மலிவு.
அடுத்து வீட்டின் சுவர், இது நிலக்கரி வெப்ப மின் நிலையத்திலிருந்து கிடைக்கும் பிளை ஆஷ் கொண்டு செய்யப்படும் செங்கற்களை கொண்டு கட்டப்பட்டிருக்கிறது. இதில் 10% தான் சிமெண்ட் கலக்கப்படுகிறது. இதன் மூலம் Co2 வாயு வெளிவந்து காற்றுடன் கலப்பதும் தடுக்கப்படுகிறது.
இந்த வீட்டில் மாற்றாக ராட் டிராப் ((Rat Trap)) முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வீட்டின் உள்வெப்பம் மனித உடலுக்கு தேவையான அளவில் கிடைக்க உதவுகிறது. மேலும் செங்கற்கள் பயன்படுத்தப்படும் அளவும் குறைக்கப் படுகிறது. இதன்மூலம் செயற்கை குளிருட்டிகள் தவிர்க்கப்படுகிறது. மேலும் அதற்கான மின்சாதன கட்டணமும் சேமிக்கப்படுகிறது.
அஸ்திவாரம், பில்லர்கள் வழக்கமான கான்கிரீட் பயன்படுத்தப்பட்டிருக்கிறது போர்டிகோ பகுதி
வழக்கமான ஃபிரேம்ட் ஸ்ட்ரக்சர் அமைக்கப் பட்டிருக்கிறது. மற்ற இடங்கள் பாரந்தாங்கும் சுவர்களாக வடிவமைக்கப் பட்டுள்ளன. தளத்தைப் பொறுத்த வரை மூன்று விதமான ரூஃப் ஸ்லாப்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. தட்டையான ஓடுகள் கொண்டு ஒரு கூரை வகையும், பானை ஓடுகள் கொண்டு ஒரு கூரை வகையும், தெர்மோகோல் கொண்டு ஒரு கூரை வகையும் வடிவமைத்திருக்கிறார்கள்.
சுவர்களை எடுத்துக் கொண்டால், வெளிப்பூச்சு உட்பூச்சு இல்லாததால் சிமெண்ட் பூச்சு செலவும் குறைக்கப்பட்டிருக்கிறது.
“”இந்த இல்லத்தில் பிரிகேஸ்ட் லின்டல்ஸ் (Precast Linters) உபயோகப்படுத்தி இருப்பதால் கான்கிரிட் செலவும் மிச்சம் செய்ய முடிந்ததாகவும் கூறுகின்றார் ஆர்க்கிடெக்ட் கோமகள். இவர் காரைக் குடியைச் சேர்ந்தவர், அங்கே பி ஆர்க் முடித்து விட்டு கோவை ஆர்விஎஸ் கல்லூரியில் மாற்று கட்டுமான
நுட்பத்தில் (ஆர்க்கிடெக்ட் சைக்லாஜி) பி.எச்.டி ஆராய்ச்சி செய்து வருகிறார்.
அடுத்து நம்மை வெகுவாக கவர்வது சீலிங் ஆகும். இவை பானைகள் மற்றும் ஓடுகள் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதால் பார்க்க அழகாகவும் வெப்பத்தை தடுக்கவும் வழிவகுக்கிறது. இதன் முலம் கான்கிரிட் செலவும் குறைக்கப்படுகிறது.
“”பொதுவான கட்டிட முறையில் இதே பரப்பளவில் ஒரு வீடு கட்டினால் நாற்பது லட்சத்துக்கு மேல் செலவாகும்’’ என்று சொல்கிறார் ஆர்கிடெக்ட் சூரிய நாராயணன்.
“”பின்வரும் சந்ததிக்கு நல்ல சுற்றுச்சூழலை தரவேண்டும். வசிக்கும் வீடு உளவியல் பிரச்சனைகளுக்கும் தீர்வு தர வேண்டும் என்ற நோக்கில் வடிவமைத்து கட்டப்பட்டது தான் இந்த வீடு. நமக்கான சொந்த வீட்டை தரமுள்ளதாகவும் மற்றும் அதன் கட்டுமான செலவில் சேமித்தும் எல்லோருக்கும் சொந்தவீடு கிடைக்க வேண்டுமென்பதே எங்கள் குறிக்கோள்’’ என்கிறார்கள் ஆர்கிடெக்ட் கோமகளும் சூரிய நாராயணனும்.
ஒரு மாடல் வீட்டைக் கட்டி, பிறருக்கு காட்டுவது பதிலாக மாற்றுக் கட்டுமானத்திற்கு தாங்களே ஒரு
மாடலாக இருக்கவேண்டும் என தங்கள் வசிப்பிடத்தையே இயற்கை வீடாக அமைத்துக் கொண்ட அந்த ஆர்க்கிடெக்ட் தம்பதியினரிடம்,
‘‘உங்கள் துணையும் ஒரு எழிற்கலைஞர் என்பது உங்கள் தொழில்முறைக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கிறது?’’ எனக் கேட்டால் இருவருமே அதை உளமார ஏற்கிறார்கள்.
‘‘கணவன் மனைவி இருவருமே ஒரே துறையில் இருப்பதால் எங்களுக்கு இரட்டிப்பு லாபம், எங்களின் குறை, நிறைகளை விவாதித்துக் கொள்கிறோம். ப்ரபொrனல் தாண்டி எங்கள் பேஷனுக்கு இருவருமே ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கிறோம்’’ என்கிறார்கள் ஆனந்தத்துடன்.
வழக்கமான வீடுகளைக் கட்டித்தரும்போது பணிச்சுமை குறைவு, வேலைநாள்கள் குறைவு, நிறுவனத்துக்கு அதிக லாபம் என்ற போதிலும் இயற்கைச் சார்ந்த மரபு கட்டுமானங்களைப் படைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வீடு கட்டும் செலவு குறையுமே என்ற ஒற்றை நோக்கத்தில் இந்த தம்பதி மாறுபட்ட பாதையில் பயணிப்பது வரவேற்கத்தக்கது தான்.
பண்ணை வீடுகள், தோட்ட வீடுகள், தனி வீடுகள், தொடர் வீடுகள், வில்லாக்களுக்கு இவர்களின் கட்டு
மான முறை மிகச் சிறந்தது. பில்டர்களுக்கும் இவர்களின் சேவை உண்டு.
வீடு என்பது நம்மையும், நமது சுற்றுக்சூழலையும் ஒன்றிணைக்கும் மையம் என்பதை இந்த ஆர்க்கிடெக்ட் தம்பதியினர் நிரூபித்துள்ளனர்.
மேலும் விவரங்கட்கு நீங்கள் தொடர்பு கொள்ள :
6380 95 85 25 : மின்னஞ்சல்: info@pinch.co.in.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2101817
|