ஆர்டக்ஸ் என்டூராவின் புதிய தயாரிப்புகள் சென்னையில் அறிமுகம்!
செமை லாபம் டைல் & அதெசிவ் டீலர்கள் கவனிக்க...
ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்டு 70 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் உலகப்புகழ் பெற்ற கட்டுமான இரசாயணங்களின் உற்பத்தி நிறுவனமான “ஆர்டக்ஸ்’ நிறுவனம், டைல்கள் ஒட்டும் பசை, டைல் கேப் ஃபில்லர்கள், வாட்டர் ப்ரூஃபிங் பொருட்கள், சிமெண்ட், ஆர்.எம்.சி, சானிட்டரி உள்ளிட்ட 17 வகையான பிராண்டுகளில் தயாரித்து 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் சந்தைப்படுத்துகிறது .
1999 முதல் எச்.ஆர். ஜான்சன் டைல்ஸின் துணைக் குழுமமான என்டூரா நிறுவனம் ஆர்டக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்திய கட்டுமானச் சந்தையில் டைல் அதெசிவ், எபாக்ஸி , வாட்டர் ப்ரூஃபிங், கான்கிரிட் பழுது நீக்கம், உள்ளிட்ட தரை மற்றும் தளம் தொடர்பான அனைத்துக் கட்டுமானச் சேவைகளையும் செய்து வருகிறது. இந்தியா முழுக்க ஆர்டக்ஸ் என்டூராவிற்கு டீலர்கள் உள்ளனர்.
இந்நிலையில் ஆர்டக்ஸ் என்டூரா சென்ற மாதம் 25 ஆம் தேதி சென்னையில் தங்களது 100 க்கும் மேற்பட்ட டீலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மேலும் இரு புதிய பொருட்களை அறிமுகப்படுத்தியது.
பெரிய டைல்கள் மற்றும் மார்பிள்களை பதிப்பதற்கான “பிளாட்டினம் ஸ்டார் பிளஸ் ‘ என்னும் அதெசிவ் பொருளையும் டைல் ஜாயின்டுகளை நிரப்பக்க்கூடிய அதிநவீன பல்வண்ன “எபாக்ஸி கிரௌட்டையும் ஆர்டக்ஸ் என்டூரா நிர்வாக இயக்குநர் திரு. கோபிநாத் கிருஷ்ணன், விற்பனைத்துறை தலைவர் திரு. சவ்விக் நாக், சீனியர் பொதுமேலாளர் திரு. பி.ராமகிருஷ்ணன், தென்னக பொது மேலாளர் பி. ஆப்ரஹாம் மற்றும் துணை பொது மேலாளர் திரு. சுரேஷ்மேனன் ஆகியோர் தங்கள் டீலர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.
நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த நிர்வாக இயக்குநர் திரு. கோபிநாத் கிருஷ்ணன் ஆர்டக்ஸ் மற்றும் ஆர்டக்ஸ் என்டூராவின் வெற்றிப் பயணத்தையும் மைல்கல் புராஜெக்ட்களையும் பட்டியலிட்டார். அதன்பின் விற்பனைத் துறை தலைவர் திரு. சவ்விக் நாக், இந்த புதிய பொருட்கள் பற்றிக் கூறும்போது,
“பெரிய அளவிலான மார்பிள், டைல்களை பொருத்துவதற்கும், செங்குத்து நிலையில் இவற்றை உறுதியுடன் பொருத்துவதற்கும் சர்வதேச தர, வாய்ந்த ஆர்டக்ஸ் என்டூராவின் பிளாட்டினம் ஸ்டார் அதெசிவ் மிகவும் ஏற்றது. ஃபைபர் ரீ இன்ஃபோர்ஸ்ட் பொருளினால் ஆன பிளாட்டினம் ஸ்டார் பிளஸ் பேக் 20 கிலோவில் கிடைக்கும்.
ஆர்டக்ஸ் என்டூராவின் எபாக்ஸி க்ரௌட் ( ஜாய்ன்ட் ஃபில்லர்) முதல் தடவையாக டைல்களின் நிறத்திற்கு ஏற்றவாறு 200 நிறங்களில் தயாரிக்கப்படுகிறது. துருப்பிடிக்காது, பேக்டிரியா வராது.
இந்த இரு பொருட்களில் மீது டீலர்களுக்கு 35 முதல் 40 % லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது’’ எனக் கூறினார் திரு. சவ்விக் நாக்,
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2066746
|