பாக்டீரியா என்பது ஒரு பயோலஜிகல் அம்சமாகும். அதாவது ஒரு உயிரி. இதை வைத்து கொஞ்சம் பயோலஜி. கொஞ்சம் கெமிஸ்ட்ரி கலந்து அதை ஒரு கட்டுமானப் பொருளாக்கலாம் என்பது வியக்கத்தக்க செய்தி.
ஆம். வழக்கமான முறையில், புகை கக்கும் சூளை இல்லாமல், பணியாட்கள் இல்லாமல் பயோ செங்கற்களை தயாரிக்க முடியும் என்கின்றனர், அமெரிக்காவிலுள்ள கொலராடோ பல்கலைக் கழக விஞ்ஞானிகள்.
எப்படி? பாக்டீரியாக்களின் உதவியால் தான்! மணல், ஹைட்ரோஜெல் கலவையுடன், ஒரு குறிப்பிட்ட வகை பாக்டீரியாவையும் கலந்து, ஒரு வார்ப்பில் போட்டுவிட்டால், பாக்டீரியாக்கள், சுற்றியுள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவை உட்கொண்டு, கால்சியம் கார்பனேட்டை உற்பத்தி செய்கின்றன. இந்த வேதிப் பொருள் ஹைட்ரோ ஜெல்லையும் மணலையும் பிணைக்கும் கிரியா ஊக்கியாக செயல்படுகிறது.
இதனால், வார்ப்பில் உள்ள மணல் மற்றும் ஹைட்ரோஜெல் கலவை மெல்ல மெல்ல இறுகி செங்கல்லாக மாறுகிறது.
சொல்லப்போனால், பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்து, மேலும் கால்சியம் கார்பனேட்டை உற்பத்தி செய்து தள்ளுவதால், வார்ப்பின் பாதி அளவு மணல் ஹைட்ரோஜெல் கலவை இருந்தாலே கூட, அதை பெருக்கி வார்ப்பு முழுவதையும் நிரப்பிவிடுகின்றன.
பாதியாக, உடைக்கப்பட்ட பாக்டீரியா செங்கல், மேலும், வளர்ந்து எட்டு முழு கற்களை உருவாக்க முடியும் என, விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். அதாவது ஒரு கல்லை நீங்கள் தயாரித்தால், அது எட்டு கல்லாக குட்டி போடும். உடனே அது என்ன விலை? எங்கே கிடைக்கும் என கேட்க ஆரம்பித்து விடதீர்கள்
இன்னும் சோதனையில் தான் இது இருக்கிறது. இந்த வீடியோ லிங்கை பார் கோட் ஆப்பில் ஸ்கேன் செய்து பாருங்கள்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2066745
|