(1) வீரப்பன் அய்யா, நான் புதிதாக கட்டி வரும் வீட்டின் சுவர் கட்டுமானப் பணிகள் முடிந்து விட்டன. இப்போது வெளிப்புற மற்றும் உட்புற பூச்சு வேலை தொடங்க வேண்டும். கலவை பூச்சு வேலை தொடங்கும் முன் சுவரை எவ்வாறு தயார் செய்ய வேண்டும்?
- தமிம் பாஷா, திருநின்றவூர்.
வீட்டின் வெளிப்புற மற்றும் உட்புற சுவர் பூச்சு வேலைகளைத் தொடங்கும் முன் கீழ்க்கண்டவற்றை சரி செய்ய வேண்டும்.
1. செங்கல் சுவரிலுள்ள சந்து பொந்துகளை & பள்ளங் களையும் கலவைக் கொண்டு அடைக்க வேண்டும்.
2. சுவரில் சிறு விரிசல்கள் இருந்தல் Crack Fille கொண்டு மட்டமாக அடைக்க வேண்டும்.
3. பூச்சு வேலைக்கு முன்னர் சுவரின் மேற்பரப்பில் தண்ணீர்ப் பீய்ச்சி லேசாக நனைக்க வேண்டும். அதன் பின்பு சுவர் பூச்சு வேலையை செய்யலாம்.
(2) அய்யா, மாற்றுக் கற்களை வரவேற்போம் என்கிற ரீதியில் நான் செங்கல்லை தவிர்த்து எவர் சொல்லியும் கேட்கமால் 6 ஆண்டுகளுக்கு முன்பே, ஹாலோ பிளாக் கொண்டு வீடு கட்டினேன். (காம்பவுன்ட் சுவர் மற்றும் வீட்டின் வெளிப்புறச் சுவர்) ஆனால் இப்போது, அந்த சுவர்கள் பொரிந்து, ஆங்காங்கே அரிமானம் ஏற்பட்டு கலவைப் பூச்சு உதிர்ந்து சுவர்கள் வலுவிழந்து வருகின்றன. இதற்கு என்ன காரணம்?
என்ன தீர்வு?
- மாடசாமி, புதுவை.
ஹாலோ பிளாக் (Hollow Block) கொண்டு வீடு கட்டுவது சரியானதல்ல. ஹாபோ கான்கிரீட் பிளாக் மிகவும் வலிமையற்றது. தரக்குறைவானதும் கூட. தயாரிப்பின் போது உரிய தரமுடைய கான்கிரீட்டைப் பயன்படுத்துவதில்லை. உங்கள் வீடு (புதுவை) கடற்கரைக்கு அருகில் இருப்பதால் உப்புக் காற்று பட்டு சுவர்கள் பொரிந்து அங்கங்கே அரிமானம் ஏற்பட்டு கலவைப் பூச்சு உதிர்ந்துள்ளது. இவற்றைச் சரி செய்ய கலவைப் பூச்சு உதிர்ந்த இடங்கள் எல்லாம் Micro Concrete - யைக் கொண்டு நன்றாக அடையுங்கள். அதன் மீது பிணைப்புத் திரவம் (Bonding Agent) பூசி அதற்கு மேல் கலவைப் பூச்சுப் பூசலாம்.
(3) நான் குடியிருந்து வரும் வீடு சுவர் தாங்கும் கட்டுமானமாகும். 1200 ச.அடியிலான
10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஜி+1 வீடாகும். இதைக் கட்டும் போதே எப்யபோது வேண்டுமானாலும், இன்னும் 2 மாடிகள் கட்டலாம். அதற்கான அஸ்திவாரம் போடப்பட்டு உறுதியாக இருக்கிறது. என்றார் வீட்டை கட்டிய பொறியாளர். இப்போது மாடியில் 2 ரூம்கள் போடும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் கீழ் தளத்தில் ஜன்னல் அடி மட்டத்தில், லிண்டல் மட்டத்திலும் சிறு விரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு என்ன காரணம்? என்ன தவறு? எப்படி சரி செய்வது? (தற்காலிகமாக வேலையை நிறுத்தி வைத்திருக்கிறோம்)
- பொன்னமதன், திருச்சி, மேட்டுபாளையம்
திரு. பொன்னமதன் அவர்களே, உங்கள் வீட்டைக் கட்டிய பொறியாளர் (G+2) தளங்களுக்கு அடித்தளம் போடப்பட்டுள்ளது என்று சொல்லியிருப்பதனாலே (G+1) க்கு மேலே இன்னொரு தளம் போடலாம். ஆனால் சுவரில் சன்னல் அடிமட்டத்திலும் மேல் மட்ட லிண்டல் மட்டத்திலும் சிறு விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் உங்கள் வீடு பாரம் தாங்கும் சுவர் (Load Bearing Structure) முறையில் கட்டப்பட்டதால் மேல் மாடியிலுருந்து கூடுதல் பாரம் வரும் போது சன்னலின் கீழ் மட்டத்திலும் லிண்டல் மேல் மட்டத்திலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் சன்னல் கீழ்மட்டத்தில் விண்டோ சில் சிலாப் (Window Sill Slab) போடப்படாமல் இருக்கலாம். எனவே லிண்டல் மட்டத்தில் சன்னல் அடிமட்டத்திலும் மொசைக் ஓடு / கிரானைட் ஓடு இவற்றைக் கொண்டு உரிய முறையில் சொருகி அதன்பின் கலவை பூச்சு செய்யலாம். இப்படிச் செய்வதால் இந்த விரிசல்கள் மேலும் வராமலிருக்கும்.
குறிப்பு : உங்களுடைய செங்கல் சுவரில் பயன்படுத்தப்பட்ட செங்கல்கள் இரண்டாம் / மூன்றாம் தரக் கற்களாக இருந்தால் வலிமைக் குறைந்து இப்படிப்பட்ட விரிசல்கள் வர வாய்ப்புண்டு. தற்காலிகமாக வேலையை நிறுத்தாமல் தொடர்ந்து செய்யலாம்.
கட்டுமான வேலையில் செங்கற்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிடவேண்டும். மாற்றாக பிளை ஆஷ் செங்கற்கள் (எரிசாம்பல்கற்கள்) மற்றும் முன்வார்த்த கெட்டிக் காங்கிரீட் கட்டுகளையே (Precast soild concrete Bolck Masonry in cm1:4) பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறீர்களே! இதற்கு அடிப்படியான காரணங்கள் யாவை? இதனால் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் யாவை? சற்று விரிவாகவே தெரிவியுங்கள்.
கட்டுமான வேலைக்கெனப் புதியமாற்றுப் பொருள்கள் மற்றும் மேம்பட்ட கட்டுமான
உத்திகள் ஆய்வுகளின் மூலமாக அறியப்பட்டு (கடந்த 25 ஆண்டுகளில்) நடை முறையிலும் சிலரால் கடைபிடிக்கப்பட்டுள்ளன.
களிமண் மணல் கலந்த கலவையால் செய்யப்பட்டு காயவைத்து செங்கல் சூளையில் சுடப்பட்ட செங்கற்கள் 1000 ஆண்டுகளுக்கு மேலாக மிக தலையாய கட்டுமானப் பொருளாக (குறிப்பாக எல்லா வகையான சுவர்களுக்கும்) இன்றும் பலராலும் பயன்படுத்தப்படுகின்றன.
செங்கல்லின் குறைபாடுகள்
1. மிகக் குறைந்த அமுக்குத் தகைவு (35கி/சதுர செமீ-50கி / சசெமீ)
2.ஆறு பக்கங்களும் நேராக செங்குத்தான அளவுகளில்லை.
3. இதனால் சிமெண்ட்: மணல் கலவைப் பூச்சின் கனம் 15 மிமீ முதல் 25மிமீ வரை தேவைப்படுகிறது.
4. கூடுதலான தண்ணீரை உறிஞ்சி ஓதத்தை ஏற்படுத்துவதோடு தாங்கும் வலிமை குறைகிறது.
5. கற்களின் சேதாரம் பல சமயங்களில் மிகுதி (15% வரை)
6. சுற்றுச் சூழலுக்கு எதிரி ; உற்பத்தி செய்ய கூடுதல் ஆற்றல் செலவு
7. கற்களின் விலையும் மிகுதியே 1000 கற்களின் விலை ரூ 5000 முதல் ரூ 6000வரை.
8. எனவே தான் இத்தகைய குறைபாடுகள் இல்லாத எரிசாம்பல் கற்களையும் (Flyash Bricks) முன்வார்த்த கெட்டிக் காங்கிரீட் கட்டுகளையும் (Precast solid concrete Blocks) சுவர் கட்டுமான வேலைகளில் பயன்படுத்த வேண்டும் எனத்ய் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.
எரிசாம்பல் & கெட்டிக் காங்கிரீட் கட்டுகளின் மேம்பட்ட தன்மைகள்
1. இவற்றின் அமுக்குத் தகைவு 60 முதல் கி/ச.செ.மீ
2. ஆறுபக்கங்களும் சீராகவும் செங்குத்தாகவும் அளவுகள் உடையவை எனவே மேற்பூச்சுக் கனம் 10மி.மீ முதல் 12மி.மீ வரை (25%) சேமிப்பு
3. தண்ணீரை உறிஞ்சுவது குறைவு; என்வே ஒதத்தை ஏற்படுத்துவதில்லை
4. சேதாரம் மிகமிகக் குறைவு (2% வரை
மட்டுமே)
5. கற்களின் விலை-செங்கற்களை விட ரூ.1000 (1000 கற்களுக்கு) குறைவு
6. சுற்றுச்சூழலுக்கு உகந்தது ; செலவாகும் ஆற்றல் குறைவு.
7. இக்கற்களைப் பயன்படுத்தி நிறைய ஆய்வுகள் செய்யப்பட்டு சோதனை முடிவுகள் பெறப்பட்டுள்ளன. அவை சரியான/ மேலான புரிதலுக்காகக் கீழே தரப்பட்டுள்ளன்.
இவ்வளவு கூடுதல் நன்மைகளும் மேம்பட்ட தன்மைகளும் உடைய எரிசாம்பல் கற்களையும் முன்வார்த்த கெட்டிக் காங்கிரீட் கட்டுகளையும் சுவர் கட்டுவேலையில் (செங்கற்களையே பயன்படுத்தாமல்) பயன்படுத்த வேண்டும் எனத் திரும்பத் திரும்பத் தெரிவிக்கிறோம்.
எரிசாம்பல் கற்கள் & கெட்டிக்காங்கிரீட் கட்டுகளினால் கட்டப்பட்ட சுவர்களுடைய வீட்டினுள் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் என்பது தகவல் தெரியாதவர்களின் ஊகமே தவிர அதில் உண்மையில்லை.
இவை கொண்டு கட்டப்பட்ட வீடுகளின் உள் வெப்பம் சுமார் 2〫 C குறைந்தே உள்ளது என்பது சோதனை முடிவுகளின் படி தெரியவந்துள்ளது.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2066743
|