1. சார், என் வீட்டுப் பக்கத்தில் 2400 சதுர அடியில் கட்டம் ஒன்றைக் கட்டி கொண்டிருக்கிறார்கள். இரண்டு தளம் ஏற்கனவே, போட்டாகி விட்டது. தளத்தை சென்ற மாதம் ஒரு நாள் காலை போடுவதற்காக எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், அதன் எதிரே இருந்த ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதை ஒட்டி, நெரிசல் மற்றும் பாதுகாப்புக் காரணமாக அக்கட்டடத்தின் தளம் போடும் வேலைக்கு அன்று காலை போலீஸ் தடை விதித்தார்கள். அதன் பின் அதே நாள் இரவு 11 மணிக்கு கான்கிரீட் போடும் வேலை தொடங்கி விடியற்காலை பொழுது அப்பணி முடிந்தது. என் கேள்வி என்னவென்றால்,
1. பனி கொட்டும் மாதத்தில், இரவு நேரத்தில் கான்கிரீட் போடலாமா?
2. அப்படி போடப்பட்டால் அந்த கான்கிரீட் வலிமையாக இருக்குமா?
3. இதுபோன்ற இக்கட்டான சூழலில் பொறியாளர்கள்என்ன செய்ய வேண்டும்?
- இளம் பொறியாளர். கணேஷ், விருகம்பாக்கம்.
தமிழ்நாட்டில் பனி கொட்டும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் வெப்பநிலை சராசரியாக + 20〫 C - > + 27〭〫 C அளவு இருக்கும். இந்த வெப்பநிலையில் கான்கிரிட் தாராளமாகப் போடலாம். அப்பொழுது தான் வெயிலால் தண்ணீர் ஆவியாகி கான்கிரீட்டிலிருந்து வெளியேறுவது நடைபெறாது. எனவே சுருக்க விரிசல்களும் ஏற்படாது. அந்த கான்கிரீட் குறிப்பிட்ட நேரத்திற்குள் இறுகி வலிமையாடைவதற்கு மிகச் சிறந்த வெப்பநில13〫 C என கான்கிரீட் பாடநூல்கள் தெரிவிக்கின்றன. எனவே இரவில் கான்கிரீட் போடுவதே சிறந்தது. கான்கிரீட்டை மிக மிகக் குளிராக இருக்கும் போது (+ 5〫 C - > + 10〫 C) போட்டால் இறுகுவதற்கு கூடுதல் நேரமாகும். எனவே சென்னை போன்ற நகரங்களில் டிசம்பர், ஜனவரியில் இரவில் கான்கிரீட் தாராளமாகப் போடலாம். அச்சப்படத் தேவையில்லை.
2. நான் 5 ஆண்டுகளுக்கும் முன்பு வீடு கட்டி இருந்தேன். வீட்டின் முகப்பு 30 அடி நீளம் 40 அடி. மனையைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டி, முகப்பு சுவரின் இடது ஓரம் காம்பவுண்ட் கேட் பொருத்தி இருக்கிறேன். (காம்பவுண்ட் சுவரின் அகலம் 9 அங்குலமாகும்). இப்போது தேவையின் காரணமாக சுற்றுச்சுவரில் வலது ஓரமாக எட்டு அடுக்கு இன்னொரு காம்பவுண்ட் கேட் பொருத்த நினைக்கிறேன். அப்படி நான் கேட் பொருத்தும் போது, கேட்டின் இரு பக்கமும் பில்லர் வைக்க வேண்டுமா?
பில்லர் இல்லாமல் கேட்டை அப்படியே பொருத்தலமா?
- மார்த்தாண்டன், வில்லிவாக்கம்.
திரு. மார்த்தாண்டன் அவர் களே, 9 இஞ்ச் அகலமுள்ள சுற்றுச் சுவரின் இடது ஓரம் காம்பவுண்ட் கேட் பொருத்தியது போல வலது ஓரத்திலும் காம்பவுண்ட் கேட்டைப் பொருத்தலாம். இருப்பினும் இரு பக்கமும் தூண்கள் நிறுத்தி கேட்டைப் பொருத்துவது நல்லது. எளிதாக வேலை முடிய கான்கிரீட் தூண்களுக்குப் பதிலாக RHS - (Rectangular Hollow Section) Steel Section ஐ நிறுத்தி காம்பவுண்ட் கேட்டைப் பொருத்தலாம். Steel RHS யைக் கொண்டு கேட்டைப் பொருத்துவது எளிதானது; சிக்கனமானதும் கூட.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2066744
|