சீனாவில் கடந்த ஆண்டு அக்டோபரில் சீனா மற்றும் ஹாங்காங்கை இணைக்கும் வகையில் 7 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த உலகின் மிக நீளமான பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.
சீனாவின் தென்பகுதியில் உள்ள ஷீஹாய் நகரத்தை ஹாங்காங் மற்றும் மக்காவு பகுதியுடன் இணைக்கும் வகையில் 2009-ம் ஆண்டு பாலம் கட்டத் திட்டமிடப்பட்டது. இந்த ஆறு வழிப்பாலத்துக்காக 4 செயற்கைத் தீவுகள் ஏற்படுத்தப்பட்டன. 4 சுரங்கங்களும் உள்ளன. இந்தப் பாலம் மொத்தம் 55 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதைக்கட்ட 4,20,000 டன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.
60 ஈபிள் டவர்கள் இந்த இரும்புகளைக் கொண்டு கட்டலாம். பிரிட்டன், அமெரிக்கா, டென்மார்க், ஜப்பான் உள்ளிட்ட 14 நாட்டு நிபுணர்கள் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்துள்ளனர். சீனாவில் இருந்து ஹாங்காங், மக்காவு பகுதிகளுக்குச் செல்ல 3 மணி நேரம் ஆகும். பாலம் கட்டப்பட்டதால் 45 நிமிடங்களில் சென்று விடலாம். நாள் ஒன்றுக்கு 40,000 வாகனங்கள் இதில் வழியாகச் செல்லும். ஆயுள்காலம் 120 ஆண்டுகள் ஆகும்.
எட்டு ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் வந்தாலும், மணிக்கு 340 கிலோ மீட்டர் வேகத்தில் புரட்டிபோடும் புயல் காற்று வீசினாலும், இதை 120 வருடங்களுக்கு அசைக்க முடியாது’ என உறுதி கூறுகிறது சீனா.
பேருந்துகளுக்கும், வர்த்தக ரீதியான வாகனங்களுக்கும் மட்டுமே இந்த பாதை திறக்கும். அது தவிர்த்து தனியார் வாகனங்கள் முன்கூட்டியே அனுமதி பெற்றால்தான் இதில் பயணிக்க முடியும்.
தங்கள் நாட்டின் பெருமை என சீன மக்களும் மகிழ்ந்தனர். ஆனால், இந்த ஆண்டு முதல் பேருந்தில் சென்றால் இந்திய மதிப்பில் ஒருவருக்கு 700 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக சீன அரசு அறிவிக்க, அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
உலகில் எந்த நாட்டிலுமே 55 கிமீ தூரம் செல்ல இவ்வளவு ரூபாய் செலுத்த வேண்டிய
தில்லை. அரசைக் கேட்டால் செலவைக் கைகாட்டுகிறார்கள்.
2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் நீண்ட இந்த பாலத்தில் கட்டுமானப் பணிக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. (15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு) அதை வசூல் செய்ய வேண்டமா? என்கிறார்கள் அதிகாரிகள்.
உலகின் நீளமான கடற்பாலம் என்றபெயரோடு அதிகக் கட்டண வசூல் செய்யும் பாலம். என்ற பெயரையும் பெற்றுவிட்டது இந்த சீனா - ஹாங்காங் பாலம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2066753
|